கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி சென்ற மாணவருக்கு கொரோனா - பள்ளி மூடல்...


 தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு நேற்று முன்தினம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. சேலம், கருமந்துறை அருகே பெரிய கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

காய்ச்சல், சளி பாதிப்பு இருந்ததால் மாணவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதால், சக மாணவர்கள் 60 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், ஊரில் இருக்கும்போது மாணவர் கொரோனா பரிசோதனை எடுத்துள்ளார்.

பள்ளிக்கு வந்ததும் கொரோனா உறுதியாகியுள்ளது. பள்ளி மூலம் கொரோனா பரவவில்லை. மாணவர் பயின்று வரும் பள்ளியை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதால் பள்ளி மூடப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு திங்கள் அன்று பள்ளி திறக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...