கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுங்க - வீடு தேடி வரும் சிலிண்டர் - இண்டேன் அறிவிப்பு...


மிஸ்டு கால் கொடுத்தால் போதும் வீடு தேடி சமையல் எரிவாயு சிலிண்டர் (Gas Cylinder) பதிவு செய்யும் வசதியை இண்டேன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


சமையல் எரிவாயு சிலிண்டருக்கு குறிப்பிட்ட நம்பருக்கு கால் செய்து, பின்னர் ரெக்கார்ட் வாய்ஸ் மூலம் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி சிலிண்டர் பதிவு செய்ய வேண்டும்.


தற்போது குறிப்பிட்ட எண்ணில் இருந்து மிஸ்டு கால் கொடுத்தால் போதும் சமையல் எரிவாயு சிலிண்டர் தானாக பதிவு செய்யும் வசதியை பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தியுள்ளார்.


84859 55555 என்ற எண்ணுக்கு அழைத்தால் அதன் மூலம் எரிவாயு சிலிண்டரை பதிவு செய்யலாம், மேலும் புதிய இணைப்பு பெறுவதற்கும் மிஸ்டு கால் வசதியை பயன்படுத்தலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இந்த சேவையை அறிமுகப்படுத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மக்கள் எளிய முறையில் இனி சிலிண்டர் எரிவாயுவை பெறலாம் என்றும், இந்த மிஸ்டு கால் வசதி உதவும் என தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...