கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...


 அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவு உண்டு என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி முதல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இன்று அவர் அரசு ஊழியர் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது பிப்ரவரி முதல் அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றும் கொரோனா காலத்தில் கடுமையாக பணியாற்றிய அரசு ஊழியர்களை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் அரசு ஊழியர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் பேசிய அவர் முதலமைச்சர் பழனிசாமி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் திடீரென போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதும், அந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு கொடுத்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TN TET Paper 1 Syllabus

  ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் 1 - பாடத்திட்டம் TN TET Paper I Syllabus  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   GOVERNMENT OF T...