கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு ஊழியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு ஊழியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

NHISல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது? வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

 


NHISல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது? வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

(பதிவு எண்.133/2021)

மாநில மையம்

எண்.3(G-1), கிருஷ்ணப்பத் தெரு,

சேப்பாக்கம், சென்னை – 600 005.


பெறுநர்

ஆசிரியர் அவர்கள்,


…………………………….. நாளிதழ்/ஊடகம்.


ஐயா,

வணக்கம். எங்களது அமைப்பின் சார்பாக கீழ்காணும் பத்திரிகை செய்தியினை தங்களது நாளிதழ்/ஊடகத்தில் பிரசுரம்/ஒளிபரப்பு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

          பத்திரிகை செய்தி

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


✍️🔥தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ் மற்றும் பொதுச்செயலாளர் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோர் கூட்ட வெளியிட்ட பத்திரிகை செய்தி.


*************************************

அரசு ஊழியர்களின் காப்பீட்டுக்காக ரூ.1,489.75 கோடி பிடித்தம்! மருத்துவச் செலவாக வழங்கப்பட்ட தொகை எவ்வளவு? — RTI தகவலில் அதிர்ச்சி. Corpus Fund-ஆக ரூ.28.16 கோடி பிடித்தம். வழங்கப்பட்டது ரூ.3.56 கோடி மட்டுமே! மீதத் தொகை எங்கே? தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி

*************************************


✍️🔥தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக சுமார் ரூ.1,489.75 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகையில் அரசு ஊழியர்களின் மருத்துவச் செலவுகளுக்காக எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது என்ற முக்கியமான விவரத்தை அரசு வெளிப்படையாக தெரிவிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


✍️🔥தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திண்டுக்கல்லைச் சேர்ந்த Frederic Engels பெற்ற தகவலில், 01.07.2021 முதல் 30.06.2026 வரையிலான ஐந்து ஆண்டுகளில் NHIS திட்டத்திற்காக அரசு ஊழியர்களிடமிருந்து ரூ.14,897,450,208 (சுமார் ரூ.1,489.75 கோடி) பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகையில் எத்தனை இனங்களில், எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை வழங்காமல், அவற்றை United India Insurance Company-யிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


✍️🔥ரூ.28.16 கோடி Corpus Fund-ல் ரூ.3.56 கோடி மட்டுமே !

இதனைவிட அதிர்ச்சியளிக்கும் வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து Corpus Fund-ஆக ரூ.28.16 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து NHIS திட்டத்தில் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.3.56 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் RTI பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுமார் ரூ.24.60 கோடி Corpus Fund தொகையின் நிலை மற்றும் பயன்பாடு குறித்து முழுமையான கணக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டியுள்ளது.


✍️🔥அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் அவர்களது மருத்துவப் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் மருத்துவச் செலவுகளுக்காக எவ்வளவு வழங்கப்பட்டது என்பதற்கான முழுமையான விவரமே RTI பதிலில் வழங்கப்படாதது, NHIS திட்டத்தின் நிதி வெளிப்படைத்தன்மை குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.


✍️🔥இது பற்றி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். ரமேஷ் மற்றும் பொதுச்செயலாளர் இரா. பாலசுப்ரமணியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்…. 


‘Cashless Treatment’ என்ற பெயரில் ஊழியர்களே பணம் செலுத்தும் அவலம்!


✍️🔥NHIS திட்டம் “Cashless Treatment” என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் Package Rate System மூலம் மருத்துவச் செலவுகள் கட்டுப்படுத்தப்படுவதால், மருத்துவமனையின் உண்மையான செலவுக்கும் காப்பீட்டு நிறுவனம் அனுமதிக்கும் Package தொகைக்கும் இடையிலான வித்தியாசத்தை அரசு ஊழியர்களே தங்களது கையிலிருந்து செலுத்த வேண்டிய நிலை தொடர்கிறது.


✍️🔥உதாரணமாக, கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு உண்மையான செலவு ரூ.30,000-க்கும் அதிகமாக இருக்கும் நிலையில் ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், இதய Stent சிகிச்சைக்கு ரூ.1,17,000 வரை செலவாகும் நிலையில் ரூ.85,000 மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் ஏற்கனவே அரசிடம் அளித்துள்ள முறையீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


✍️🔥இதனால், மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் அரசு ஊழியர்கள், காப்பீட்டுத் திட்டத்திற்காக ஊதியத்திலிருந்து பணம் செலுத்திய பிறகும், சிகிச்சைக்காக மீண்டும் தங்களது கையிலிருந்து பணம் செலுத்த வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது.


* புதிய NHIS-2026 – முந்தைய திட்டத்தைவிட மோசமானதா?


✍️🔥தற்போது வெளியிடப்பட்டுள்ள G.O.Ms.No.122, Finance (Health Insurance) Department, dated 24.06.2026 மூலம் புதிய NHIS-2026 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த Package Rate System-ஐ நீக்குவதற்குப் பதிலாக, அது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. புதிய திட்டத்தில், மாதாந்திர பிடித்தம் ரூ.300-லிருந்து ரூ.390 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Corpus Fund பிடித்தம் ரூ.5-லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


✍️🔥 Network அல்லாத மருத்துவமனைகளில் மருத்துவ உதவி 75%-லிருந்து 60% ஆக குறைக்கப்பட்டுள்ளது. Package System மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் A1, A2, B, C என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல் கட்டாயச் சேர்க்கை தொடர்கிறது.


✍️🔥இதனால், முந்தைய ஆட்சியில் “Cashless Treatment” என்ற பெயரில் மறைமுகமாக Package System நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போதைய அரசு நேரடியாகவே Package System-ஐ மேலும் விரிவுபடுத்தியுள்ளது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டுகிறது.


✍️🔥முழுமையான கணக்கை அரசு வெளியிட வேண்டும்:

கடந்த ஐந்து ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,489.75 கோடியில் எவ்வளவு தொகை மருத்துவச் செலவுகளுக்காக வழங்கப்பட்டது, எத்தனை ஊழியர்கள் பயனடைந்தனர், எந்தெந்த சிகிச்சைகளுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது, காப்பீட்டு நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை செலுத்தப்பட்டது, நிர்வாகச் செலவாக எவ்வளவு செலவிடப்பட்டது என்பன உள்ளிட்ட முழுமையான கணக்கை தமிழக அரசு உடனடியாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதேபோல், ஊழியர்களிடமிருந்து Corpus Fund-ஆக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.28.16 கோடியில் ரூ.3.56 கோடி மட்டுமே மருத்துவச் செலவுக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள சுமார் ரூ.24.60 கோடியின் நிலை என்ன என்பதையும் அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.


✍️🔥புதிய காப்பீட்டுத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்மையான 100 சதவீத Cashless Treatment வழங்கப்பட வேண்டும். Package Rate System கைவிடப்பட்டு, மருத்துவமனையின் உண்மையான மருத்துவச் செலவை அடிப்படையாகக் கொண்டு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் புறக்கணித்து கட்டாயமாக திணிக்கப்படும் முறையை கைவிட்டு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் விரிவான ஆலோசனை நடத்தி புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். 


✍️🔥இந்திய வங்கி ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, உண்மையான மருத்துவச் செலவை ஈடுசெய்யும் திட்டத்தை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.


✍️🔥G.O.Ms.No.122-ஐ உடனடியாக மறுஆய்வு செய்து, Package Rate System-ஐ கைவிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முழுமையான கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சையை உறுதி செய்யும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். 


✍️🔥நாளது தேதியில் எத்தனையோ தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் பணமில்லா சிகிச்சையைத் தருவதாக பல்வேறு தளங்களில் விளம்பரங்கள் செய்து வருகின்றனர். எனவே மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஊழியர்களின் தன்விருப்பம் கோரப்பட வேண்டும். விருப்பமில்லாத ஊழியர்களை இத்திட்டத்திலிருந்து விலக்களிக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த 20.08.2026 அன்று மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கடிதம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைப் பாதுகாக்க ஜனநாயக ரீதியிலான தொடர் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை உருவாகும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.


நன்மதிப்புகளுடன்


(எஸ்.ரமேஷ்)

மாநிலத் தலைவர்


(இரா.பாலசுப்ரமணியன்)

பொதுச் செயலாளர்




EXIDE INVA Master IMTT2200 220Ah 12V Tall Tubular Inverter Battery | Ideal for Home, Office & Shops | Long Backup & Low Maintenance | Leak Resistant | 60 Months Warranty


https://link.amazon/B03b5bJg4

NHIS குறைபாடுகளை களைய வேண்டும் | அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

 


புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குறைபாடுகளை களைய வேண்டும்


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்


"புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய அரசு முன்வர வேண்டும்" என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் முபாரக்அலி தெரிவித்தார்.


ஜூன் 24ல் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


இதில் அனைவருக்குமான கட்டணமில்லா உத்தரவாத சிகிச்சையை உறுதிப்படுத்த  வேண்டும். உயர் சிகிச்சைக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அதிகபட்ச உச்சவரம்பு இருக்கக்கூடாது. வெளி நோயாளிகள் சிகிச்சை நடைமுறைகளை திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமி யோபதி ஆகிய மருத்துவ சிகிச்சை முறைகளை இணைக்க வேண்டும்.


பயனாளியின் சிகிச்சைக்கான முழுத் தொகையையும் எளிய முறையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை ஏற்று திருத்தப்பட்ட அரசாணையை தமிழக அரசு வெளியிட வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஜூலை 8ல் பெரும் திரள் முறையீடு செய்ய உள்ளனர்.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் முபாரக் அலி கூறியதாவது: கட்டணமில்லா சிகிச்சை என்பதற்காக   அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் கடந்த ஆண்டுகளில் 5  கோடிகளை தங்களது சந்தா தொகையாக செலுத்தியுள்ளோம். இருப்பினும் அரசால் அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அறிவிக்கப்பட்ட முழுத் தொகையில் பாதி அளவு தொகை கூட காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து பயனாளிகள் பெற முடி யாமல் தவிக்கிறோம். அதனால் 18 அம்ச கோரிக்கைகளை ஏற்று திருத்திய அரசாணை வெளியிட முதல்வரின் கவனத்தை ஈர்க்க இந்த கவன ஈர்ப்பு முறையீட்டை நடத்த உள்ளோம் என்றார்.



Ready to make Chief Minister Stalin the Leader of Opposition in 2026 - TNGEA



2026-ல் முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்கட்சித் தலைவராக்க தயார் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிக்கை


Ready to make Chief Minister Stalin the Leader of Opposition in 2026 - Tamil Nadu Government Employees Association Statement



>>> அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



  "2026-ல் முதல்வர் ஸ்டாலினை எதிர்கட்சித் தலைவராக்க தயார்" - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்


#MKStalin | #DMK | #TNGovt | #TNGEA


💢 முதல்வருக்கு 2026 தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க தயார்’ - அரசு ஊழியர்கள் சங்கம்


🔥 மதுரை: “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தயாராக இருக்கிறோம்” என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


🔥இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், “கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் தேடி வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘தேனாறும், பாலாறும் ஓடும்’ என்றவாறு தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தார். 


🔥 2021-ல் சட்டமன்றத் தேர்தலின்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார்.


🔥ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக, 24 மாதகால அகவிலைப்படி, ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆகியவற்றை முடக்கி, அரசு ஊழியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது தான் அவரின் சாதனை.


தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த பள்ளிக் கல்வித் துறை ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார்.


🔥 உண்மையிலேயே நிதி நிலை மோசமாக உள்ளது என்றால், நிதி நிலை சரியாகும் வரை எங்ளுக்கு ஊதியம் வேண்டாம் என்று தமிழ்நாடு முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பார்களா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த சிபிஎஸ் சந்தா தொகை தமிழ்நாடு அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது.


🔥 போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தற்போது ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை அரசு ஊழியர்களுக்கும் வரப்போகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருக்கிறோம் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருள் கிடையாது என்பது போன்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தமிழ்நாடு அரசு விளக்கம்(Government of Tamilnadu interprets reports that Government employees and those with an annual income of more than Rs 1 lakh do not have rations are completely untrue) செய்தி வெளியீடு எண்: 879, நாள்: 13-10-2021...



 அரசு ஊழியர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருள் கிடையாது என்பது போன்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தமிழ்நாடு அரசு விளக்கம்(Government of Tamilnadu interprets reports that Government employees and those with an annual income of more than Rs 1 lakh do not have rations are completely untrue) செய்தி வெளியீடு எண்: 879, நாள்: 13-10-2021...


>>> செய்தி வெளியீடு எண்: 879, நாள்: 13-10-2021...



அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பெருந்தொற்று காலத்தில் வருகைப்பதிவு குறித்து மத்திய அரசு அறிவிப்பு...



 அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பெருந்தொற்று காலத்தில் வருகைப்பதிவு குறித்து மத்திய அரசு அறிவிப்பு...


மத்திய அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் பின்பற்ற வேண்டிய வருகைப்பதிவு மற்றும் பாதுகாப்பு குறித்த சில வழிமுறைகளை மத்திய  அரசு வெளியிட்டுள்ளது.




வருகைப்பதிவு

கொரோனா பேரிடர் காரணமாக நாடு முழுவதும் செயல்பட்டு வந்த அரசு மற்றும் தனியார் துறைகள் அனைத்தும் மூடப்பட்டன. அந்த வகையில் கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டிருக்கும் அனைத்து அலுவலகங்களையும் மீண்டுமாக திறப்பதற்கு அரசு தற்போது முடிவெடுத்துள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் பரவ துவங்கிய கொரோனா தொற்றால் மாநிலங்கள் தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா புதிய பாதிப்பானது தற்போது வீழ்ச்சியடைந்து வருகிறது.




இதனால் மூடப்பட்டிருக்கும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் 50% பணியாளர்களுடன் மீண்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான வருகை பதிவு உள்ளிட்ட சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஜூன் 16 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை மத்திய அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும்.



மீதமுள்ள 50% பணியாளர்கள் வீடுகளில் இருந்தபடியே வேலை பார்க்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் வீடுகளில் இருந்தபடியே வேலை பார்க்கலாம். தொற்று அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் அலுவலர்கள், கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை வீடுகளில் இருந்து பணி புரியலாம். அதே நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...


 அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவு உண்டு என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி முதல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இன்று அவர் அரசு ஊழியர் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது பிப்ரவரி முதல் அரசு ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றும் கொரோனா காலத்தில் கடுமையாக பணியாற்றிய அரசு ஊழியர்களை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் அரசு ஊழியர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் பேசிய அவர் முதலமைச்சர் பழனிசாமி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் திடீரென போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதும், அந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு கொடுத்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வெள்ளி முலாம் பூசிய ஈய பாத்திரம் TAPS : CPS ஒழிப்பு இயக்கம்

வெள்ளி முலாம் பூசிய ஈய பாத்திரம் TAPS : CPS ஒழிப்பு இயக்கம் CPS ஒழிப்பு இயக்கம் *_மாநில மையம்_* ________________________ *வெள்ளி முலாம் பூசி...