மக்கள் நல்வாழ்வு துறை அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
பவானியில் காலிங்கராயன் நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது : தமிழகத்தில் பள்ளிகளை திறக்க மக்கள் நல்வாழ்வுத் துறையின் அறிவுரைப் படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல் நாளில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வழங்க 30 லட்சம் சத்து மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அட்டவணை வெளியாவதை பொருத்து, பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக முதல்வரிடம் கலந்து பேசி பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்