கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களுக்கு TAB வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

 


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'டேப்' வழங்கப்படும் என்றும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் பள்ளிகள் திறந்த உடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'டேப்' (Tab) வழங்கப்படும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் நடைபெறும் . அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றார். பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முதல் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும். கருத்துகேட்பு கூட்டம் இன்று தொடங்கி இந்த வார இறுதி வரை நடைபெறும் .பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர்தான் இறுதி முடிவு எடுப்பார் என தெரிவித்தார். 

மேலும், பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

UPS, NPS & CPS - Comparison

Comparison of UPS vs NPS vs CPS in Tamilnadu  UPS - Unified Pension Scheme Effect from 01.04.2025 for Central Govt Employees >>> Cl...