கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (08-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

மேஷம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடம் உரையாடும் பொழுது சிந்தித்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற பகையை தவிர்க்க இயலும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பொறுப்புகளும், உயர்வுகளும் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : ஆதரவு கிடைக்கும்.


கிருத்திகை : உயர்வான நாள்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் செயல்பாடுகளில் சற்று தள்ளி இருந்து ஆலோசனைகளை கூறுவது நன்மையளிக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும். நண்பர்களின் மூலம் விரயங்களும், அலைச்சல்களும் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.


ரோகிணி : அலைச்சல்கள் மேம்படும்.


மிருகசீரிஷம் : வாக்குவாதங்கள் ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வாரிசுகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகளுக்கு தீர்வும், தெளிவும் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் புரிதல் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான உடைமைகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : பயணங்கள் சாதகமாகும்.


திருவாதிரை : புரிதல் உண்டாகும்.


புனர்பூசம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு லாபம் அடைவீர்கள். மாணவர்கள் பயணங்களின்போது சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வித்தியாசமான கற்பனைகள் மனதில் ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : எண்ணங்கள் நிறைவேறும்.


பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


ஆயில்யம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

வாரிசுகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உறவினர்களின் மூலம் தேவையற்ற இன்னல்கள் ஏற்பட்டு மறையும். தேவைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் பண நெருக்கடிகள் குறையும். பயணங்கள் தொடர்பான முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பூர்வீகம் தொடர்பான சொத்துக்களில் பொறுமையுடன் செயல்படுவது அவசியமாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


பூரம் : நெருக்கடிகள் குறையும்.


உத்திரம் : மந்தமான நாள்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சிறு இடையூறுகளுக்கு பின்பு கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். பயணங்களின்போது கவனமாக இருக்கவும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திரம் : கவனம் வேண்டும்.


அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.


சித்திரை : அனுகூலமான நாள்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். பெரியவர்களிடத்தில் நன்மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். நவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.


சுவாதி : நன்மதிப்பு மேம்படும்.


விசாகம் : எண்ணங்கள் கைகூடும்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கைத்துணைவர் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதிற்கு பிடித்தவாறு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் படிப்படியாக குறையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : உதவிகள் கிடைக்கும்.


அனுஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


கேட்டை : இன்னல்கள் குறையும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் செயல்பட்டால் லாபம் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சிலருக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் தடைபட்டு வந்த முதலீடுகள் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். பிறமொழி மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் : விழிப்புணர்வு வேண்டும்.


பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் மத்திமமான சூழ்நிலைகள் உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வும், செயல்பாடுகளில் பொறுப்பின்மையும் ஏற்படும். எதிர்பார்த்த ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் குறையும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : சோர்வு உண்டாகும்.


திருவோணம் : பொறுப்புகள் குறையும்.


அவிட்டம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபமும், வாடிக்கையாளர்களின் ஆதரவும் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். புதிய செயல்பாடுகளில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



அவிட்டம் : ஆதரவு மேம்படும்.


சதயம் : மனமகிழ்ச்சியான நாள்.


பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 08, 2021


தை 26 - திங்கள்

மனதில் புதிய நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும்.


உத்திரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.


ரேவதி : அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...