தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் கிருஷ்ணகிரி முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அவர்களின் செயல்முறைகள்
ஓ.மு.எண். 01470 / அ 2 / 2015, நாள் 27-04-2015
பொருள்
தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005 கீழ் திரு.அ.மாதையன், அஜ்ஜிபட்டி கிராமம், மானியாத அள்ளி அஞ்சல், நல்லம்பள்ளி வழி, தர்மபுரி மாவட்டம் என்பார் சில தகவல்கள் கோரியது - தகவல்கள் வழங்குதல் - சார்பாக.
பார்வை
திரு.அ.மாதையன், அஜ்ஜிபட்டி கிராமம், மானியாத அள்ளி அஞ்சல், நல்லம்பள்ளி வழி, தர்மபுரி மாவட்டம் என்பாரது மனு நாள் 06-04-2015
பார்வையில் காணும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன்படி தங்களது மனு பரிசீலிக்கப்பட்டதில் தங்களால் கோரப்பட்ட நான்கு வினாக்களுக்கு சார்பாக கீழ்க்கண்ட தகவல்கள் அளிக்கப்படுகிறது.
- ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர்கள் அவர்கள் பெறுகின்ற சம்பள ஏற்ற முறையில் உள்ள தர ஊதியத்தின் அடிப்படையில், இறங்கு வரிசையில் எழுத வேண்டும்.
- ஒரு குறிப்பிட்ட பணியில் / பதவியில் ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒரே நாளில் மற்றும் ஒரே நேரத்தில் (மு.ப. /பி.ப.) பணியில் சேர்ந்திருந்தால் அவர்களது பெயர்கள் பிறந்த தேதி மற்றும் அகர வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்படும்.
- ஒரே நாளில் இருவர் பணியில் சேர்ந்திருந்தால் அவர்களில் வயதில் மூத்தவர் முதலிலும், வயதில் இளைவர் அவர்களுக்கு அடுத்தும் எழுத வேண்டும்.
- இருவருக்கும் பிறந்த தேதி ஒன்றாகவே இருக்குமேயானால் அவர்களது பெயர்கள் அகர வரிசை அடிப்படையில் எழுதப்படும்.
- மேலும் வருகை பதிவேட்டில் பெயர் எழுதப்படுவதற்கு பாடம் சம்மந்தமாக முன்னுரிமை ஏதும் வழங்கப்படுவதில்லை.
மேற்கண்ட தகவல்கள் தங்களால் ஆட்சேபிக்கப்படுமேயானால் இக்கடிதம் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் கீழ்க்கண்ட அலுவலருக்கு மேல் முறையீடு செய்துக்கொள்ளலாம்.