கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (10-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்



மேஷம்

பிப்ரவரி 10, 2021


தை 28 - புதன்

உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உடனிருப்பவர்களின் ஆதரவினால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : புத்துணர்ச்சி உண்டாகும்.


பரணி : முன்னேற்றம் ஏற்படும்.


கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 10, 2021


தை 28 - புதன்

பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் படிப்படியாக அகலும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். வெளிவட்டார தொடர்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



கிருத்திகை : கவலைகள் குறையும்.


ரோகிணி : ஒற்றுமை பிறக்கும்.


மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 10, 2021


தை 28 - புதன்

மனதில் நினைத்த காரியங்களை செய்வதில் காலதாமதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியமாகும். உடனிருப்பவர்களிடம் மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை கவனத்துடன் கையாளவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



மிருகசீரிஷம் : காலதாமதம் உண்டாகும்.


திருவாதிரை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


புனர்பூசம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 10, 2021


தை 28 - புதன்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபகாரியத்தில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இழந்த வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.


பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


ஆயில்யம் : அறிமுகம் ஏற்படும். 

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 10, 2021


தை 28 - புதன்

பழைய கடன் தொடர்பான விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்கள் கைகூடும். அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த உதவிகளின் மூலம் அபிவிருத்திக்கான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மகம் : தீர்வு கிடைக்கும்.


பூரம் : ஒத்துழைப்பு மேம்படும்.


உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 10, 2021


தை 28 - புதன்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வது தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வமும், பாராட்டுகளும் மேம்படும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



உத்திரம் : மேன்மையான நாள்.


அஸ்தம் : சுபிட்சம் ஏற்படும்.


சித்திரை : சேமிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 10, 2021


தை 28 - புதன்

பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. வாகனம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். சிறு சிறு அதிர்ஷ்ட வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். சுயதொழில் தொடர்பான அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : அனுசரித்து செல்லவும்.


சுவாதி : ஆதாயம் மேம்படும்.


விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 10, 2021


தை 28 - புதன்

வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் சிலருக்கு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுகமான பிரச்சனைகள் அகலும். திட்டமிட்ட காரியங்களில் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை அடைவீர்கள். எதிர்பாராத சிலரின் அறிமுகத்தின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



விசாகம் : தனவரவுகள் உண்டாகும்.


அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.


கேட்டை : மாற்றமான நாள். 

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 10, 2021


தை 28 - புதன்

மனதில் கற்பனைத்திறன் அதிகரிக்கும். வாக்குத்திறமைகளின் மூலம் பொருள் ஆதாயம் அடைவீர்கள். மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : கற்பனைத்திறன் மேம்படும்.


பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 10, 2021


தை 28 - புதன்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவுகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். தொழில் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். நண்பர்களின் உதவிகளால் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : தனவரவுகள் மேம்படும்.


திருவோணம் : இன்னல்கள் குறையும்.


அவிட்டம் : பேச்சுவார்த்தைகள் சாதகமாகும்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 10, 2021


தை 28 - புதன்

எதிர்பாராத செய்திகளின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். மனதில் தேவையற்ற கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்பட வேண்டும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். திடீர் வெளியூர் பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் சிறு தடைகளுக்கு பின் சாதகமான செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் விழிப்புணர்வு வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அவிட்டம் : சுபவிரயங்கள் உண்டாகும்.


சதயம் : மாற்றமான நாள்.


பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும். 

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 10, 2021


தை 28 - புதன்

மனதில் நினைத்த காரியங்களை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகளை வாங்கும் எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும். பிள்ளைகளுக்கு வரன் தொடர்பான செய்திகள் சாதகமாக அமையும். உறவினர்களின் வழியில் சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.


உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.


ரேவதி : லாபம் அதிகரிக்கும்.

------------------------------

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (Ms) No: 98, Dated : 30-12-2024, Raising the Additional Incharge Allowance Amount to ₹1000/- for Noon Meal Organisers

  சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்புப் படியை ₹1000/- ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 98, நாள் : 30-12-2024 வெளியீடு சத்துணவு அமைப்ப...