கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (13-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

பிப்ரவரி 13, 2021


மாசி 01 - சனி

மனதில் புதுவிதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமான பலன்களை அளிக்கும். வசதி வாய்ப்புகள் மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அஸ்வினி : எண்ணங்கள் தோன்றும்.


பரணி : உதவிகள் கிடைக்கும்.


கிருத்திகை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 13, 2021


மாசி 01 - சனி

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.


ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.


மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 13, 2021


மாசி 01 - சனி

எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதுவிதமான ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் தோன்றும். புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாகத்திறமை வெளிப்படும். நிலுவையில் இருந்துவந்த பண வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.


திருவாதிரை : முன்னேற்றமான நாள்.


புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 13, 2021


மாசி 01 - சனி

எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். செய்யும் பணிகளில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகள் எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும். வீண் பிரச்சனையால் மனக்குழப்பங்கள் ஏற்படும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தடைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.


பூசம் : மனக்குழப்பங்கள் ஏற்படும்.


ஆயில்யம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 13, 2021


மாசி 01 - சனி

தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்களில் லாபம் மேம்படும். வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மூத்த சகோதரர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூரம் : லாபம் மேம்படும்.


உத்திரம் : ஆதரவான நாள்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 13, 2021


மாசி 01 - சனி

எந்தவொரு காரியத்தையும் சிந்தித்து செயல்படுத்தவும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பழைய கடன்களை அடைப்பதற்கான சூழல் உண்டாகும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவான சூழல் ஏற்படும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.


அஸ்தம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


சித்திரை : அனுகூலமான நாள்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 13, 2021


மாசி 01 - சனி

நிர்வாகத்தில் தனித்திறமைகள் புலப்படும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரையை மேற்கொள்வீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : தனித்திறமைகள் புலப்படும்.


சுவாதி : மேன்மை உண்டாகும்.


விசாகம் : சாதகமான நாள்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 13, 2021


மாசி 01 - சனி

எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் ஏற்படும். கால்நடைகளால் சில விரயங்கள் ஏற்படும். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுபவிரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : லாபம் மேம்படும்.


அனுஷம் : விரயங்கள் ஏற்படும்.


கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 13, 2021


மாசி 01 - சனி

புதிய தொழில் முயற்சிகளால் சுபவிரயங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்பதற்கான முயற்சிகளை செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.


பூராடம் : முயற்சிகள் மேம்படும்.


உத்திராடம் : பரிசுகளை பெறுவீர்கள்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 13, 2021


மாசி 01 - சனி

குடும்ப உறுப்பினர்களால் ஆதரவான சூழல் உண்டாகும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுக்களால் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திராடம் : ஆதரவான நாள்.


திருவோணம் : நற்பலன்கள் உண்டாகும்.


அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 13, 2021


மாசி 01 - சனி

மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். பொருள் சேர்ப்பதற்கான சாதகமான சூழல் உண்டாகும். விவாதங்களின் மூலம் அனுகூலமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனத்துடன் செயல்படவும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 13, 2021


மாசி 01 - சனி

வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் சுபவிரயங்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்லூரி படிப்பிற்கான சுபவிரயங்கள் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் விழிப்புணர்வு வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.


ரேவதி : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...