கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 13.02.2021 (சனி)...

 


🌹இந்த உலகத்தில் நமக்கென யார் இருக்கிறார்கள் என்று யோசிப்பதை விட 

நம்மை நம்பி யார் இருக்கிறார்கள் என்று யோசியுங்கள் வாழ்க்கை மாறும்.!

🌹🌹எப்போதும் அனுசரித்து போகும் உள்ளங்களை காயப்படுத்தக் கூடாது.

ஏனெனில் அவர்களின் உறவு விலைமதிப்பற்றது

இழந்து விட்டால் பெறுவது கடினம்.!!

🌹🌹🌹தேவைக்கு தேடல்,

பொய்யான உறவுகள்,

நேரத்திற்கேற்றார் போல் பேச்சு,

போலியான அன்பு,

தனக்கு தேவையானது கிடைத்தால் போதும் இதுவே இன்றைய உலகம்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின் பொதுத்தேர்வு அட்டவணை: அமைச்சர் செங்கோட்டையன்

📕📘டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுகளைப் போல சப்-இன்ஸ்பெக்டர் தேர்விலும் தமிழ் வழி இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.

📕📘நீட், ஜெஇஇ தேர்வுகளுக்கு பயிற்சி தர அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது வெட்கக்கேடானது : வேல்முருகன்

📕📘BT to PG Promotion Counseling reg - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2021 நிலவரப்படியான தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியலின்படி அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்/ பள்ளித்துணைஆய்வாளர் /ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -2ல் பணிபுரிபவர்களுக்கு பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக / உடற்கல்வி இயக்குநர் நிலை-1ஆக பதவி உயர்வு வழங்க தகுதிவாய்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது - கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்:12.02.2021

📕📘தொடக்கக் கல்வி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசுப் பள்ளி ஆசிரியர்கள் - 01.01.2021 நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் - தயாரித்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘ஜாக்டோ - ஜியோ போராட்டம் திருச்சியில் இன்று ஆலோசனை

📕📘இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு; ஆசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு 40 ஆக நிர்ணயம்

📕📘பொறியியல்    கல்லூரிகளில் நேரடி முறையில் மறுதேர்வு நடத்தவேண்டும்: ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தல்                                                    

📕📘குறித்த காலத்தில் வழங்காததால் பணிக்கொடைக்கு ஆண்டுக்கு 6% வட்டி வழங்க வேண்டும்: ஹைகோர்ட் உத்தரவு.

📕📘முதுகலை ஆசிரியர் தேர்வு போட்டி தேர்வு- ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு- வயது நிர்ணயம் 40.                                                                                                                                                                                                                              👉PG TRB NOTIFICATION PUBLISHED NOW

👉2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு

👉Date of Notification : 11.02.2021

👉submission of application  : 01.03.2021

👉Last date for submission  : 25.03.2021

👉Date of Written Examination : 26 & 27.06.2021

📕📘PG ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப இந்த மாத இறுதிக்குள்  அட்டவணை வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

📕📘CBSE - ஏப்ரல் 1 முதல் அடுத்த கல்வி ஆண்டு தொடக்கம் : 2021-2022 கல்வியாண்டின்  வகுப்புகள் தொடங்க அனுமதி.

📕📘தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை உடனடியாக  கவுன்சிலிங் வாயிலாக இடமாறுதல் செய்ய வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவு.

📕📘பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டத்தால், பள்ளி கல்வி இயக்குனரக வளாகத்தின் வாயிற் கதவுகளுக்கு பூட்டு : போராட்டம் முடியும் வரை, இந்த நிலை தொடரும்.

📕📘ஒன்பது மற்றும், பிளஸ் 1 வகுப்புகளுக்கு தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது

📕📘எல்.எல்.எம்., எனப்படும் முதுகலை சட்டப்படிப்பை ஓராண்டு படிக்கும் நடைமுறை, 2022- 23ம் கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்படும் என, உச்ச நீதிமன்ற்த்தில், இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

📕📘கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

📕📘நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரி அனுப்பிய தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.             மக்களவையில் எம்.பி.சின்ராஜ் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை பதில்

📕📘பள்ளிகளுக்கு தன்னார்வலர்கள் செய்த உதவிகள் என்னென்ன?  விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

📕📘திமுக ஆட்சிக்கு வந்த‌தும் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்.

📕📘2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் செல்போன் தரப்படும் என்று சொன்னார்களே? செய்தார்களா? இல்லை! பழனிசாமி கொடுத்தாரா? இல்லை! அல்வா தான் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

📕📘அடக்குமுறைச் சட்டங்கள், அரசியல் பழி தீர்க்கும் ஆட்டம் ஆரம்பம்: 

கே.எஸ்.அழகிரி.                               

📕📘20 திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த நாகம்பள்ளி கிராமத்தில் வள்ளுவர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் செங்குட்டுவன், இளைய தலைமுறை மத்தியில் திருக்குறள் கற்றலை ஊக்குவிக்கும் விதமாக, 10 திருக்குறள் ஒப்புவித்தால் 1/2 லிட்டர் பெட்ரோல், 20 திருக்குறள் ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

இந்த போட்டியில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என அறிவித்திருக்கிறார். இந்த அசத்தல் அறிவிப்பை பயன்படுத்திக் கொள்ளும் அப்பகுதி மக்கள், தங்களது பிள்ளைகளுக்கு திருக்குறள் கற்றுக் கொடுத்து இலவசமாக பெட்ரோல் வாங்கிச் செல்கிறார்கள்.             

  📕📘தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடைபெறவே இல்லை என்பது மக்களை சந்திக்கும் போது அறிந்துகொள்ள முடிகிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் 3ம் கட்ட பயண நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் கோரிக்கை மனுக்களை என்னிடம் அளிப்பதை பார்த்து முதல்வர் மிரண்டு போயுள்ளார் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

📕📘பேனர், சால்வை வழங்குவதை தவிர்த்து புத்தகங்களை வழங்குமாறு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுவரொட்டிகளில் என் படங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் படங்களை மட்டுமே சுவரொட்டிகளில் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

📕📘சேலம் உட்பட 9 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் இன்று நடைபெற இருந்த 777 ஓவர்சீயர் பணிக்கான தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம், விழுப்புரம், நீலகிரி, கரூர், தேனி, திருப்பத்தூர், தஞ்சை, தென்காசி, அரியலூர் மாவட்டங்களில் இன்று எழுத்து தேர்வு நடைபெற இருந்தது. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களிலும் தேர்வு நடைபெறவிருந்தது. காரணம் எதுவும் கூறப்படாமல் தேர்வு ரத்தானதால் விண்ணப்பித்த இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

📕📘திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி. தினேஷ் திரிவேதி தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறை மிகவும் வேதனை அளிப்பதால் எம்.பி. பதவி ராஜினாமா செய்துள்ளதாக தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.

📕📘பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் 12 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஏன்?

மக்களவையில் டி ஆர் பாலு கேள்வி

📕📘நாடாளுமன்றத்தில் வேளான் சட்டம் குறித்து ராகுல்காந்தி ஆவேச பேச்சு

உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகளை ஒரே இடத்தில் மொத்தமாக வாங்கினால் சந்தைக்கு யார் செல்வார்கள்? 

சந்தைகளை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது புதிய வேளாண் சட்டங்கள் என ராகுல் பேச்சு!

வேளான் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ராகுல்காந்தி பேசிய போது பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது

📕📘அமைச்சர் சிவி சண்முகம் குறிப்பிட்ட சமூகத்தை இழிவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால்,

தமிழகம் முழுவதிலும் அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் டாக்டர்.கணேசன்                    

📕📘பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அமைச்சர் பதில் அளித்த பிறகு மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிந்ததை அடுத்து 2வது அமர்வு மார்ச் 8ம் தேதி தொடங்குகிறது. அனைத்து நிலைக்குழு கூட்டங்களிலும் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

📕📘தமிழகம் புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும்.

புதுச்சேரியில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 982-லிருந்து 1,564 ஆக உயர்வு.

சுனில் அரோரா

📕📘வேளாண் சட்டங்களால் இந்தியாவில் தானிய மார்க்கெட்டுகள் அழிக்கப்பட்டுவிடும் என்று மக்களவையில் ராகுல்காந்தி கூறியுள்ளார்.*

வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் முழுவதையும் நாம் ஆராய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

📕📘காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காராத்தே தியாகராஜன் நேற்று சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

📕📘கொரோனா வைரஸ் தொற்றை சீனா கையாண்ட விதம், ஜிங்ஜியாங் பிரச்சனை குறித்து தவறான செய்திகளை பிபிசி உலக செய்தி ஒளிபரப்பியதாக சீனா குற்றம்சாட்டி, அதற்கு தடை விதிக்க இருப்பதாக சீன மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

📕📘சசிகலாவை சந்திக்க கருணாஸ், தனியரசு எம்.எல்.ஏக்கள் முடிவு

📕📘17ம் தேதி தஞ்சாவூர் செல்கிறார் சசிகலா. உறவினர்களை சந்திக்க திட்டம் என தகவல்.

📕📘இந்திய படைகள் கைப்பற்றிய பகுதிகளை பிரதமர், சீனாவிற்கு கொடுத்துவிட்டார். ஏப்ரல் மாதம் முதல் எல்லையில் பிரச்சினை நிலவி வருகிறது; தற்போது வரை சீனாவுடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருகிறது  

- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

📕📘தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனுக்கு கொரோனா. 

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

📕📘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால், தனியார் துறையை தொடர்ந்து அவமதிக்கும் போக்கை, கலாச்சாரத்தை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

📕📘பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகே மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டது

பொருளாதாரத்தை ஊக்குவிக்க பட்ஜெட்டில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது 

 - மாநிலங்களவையில் பட்ஜெட் விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

📕📘சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா  ரூ.3 லட்சம் நிவாரணம்.படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்.

-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 

காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவு

📕📘ஊதிய முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு, விரைவில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது.

அறிக்கை தாக்கலான பிறகே தீர்வு காண முடியும்.

எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

கல்வித்துறை வேண்டுகோள்.

📕📘சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு.

📕📘விசாகப்பட்டினம் அருகே தனியாருக்கு சொந்தமான சுற்றுலா பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து.8 பேர் உயிரிழந்தாக தகவல்.20பேர் பயணம் செய்துள்ளனர்.

📕📘டிடிவி தினகரன் பற்றி பேசும்போது குலத்தொழில் என்று குறிப்பிட்டது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது; யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் - அமைச்சர் சி.வி.சண்முகம்

📕📘1100 என்ற எண்ணில் பொதுமக்கள்

குறைகளை தெரிவிக்கும் திட்டம்; இன்னும் 10 நாட்களில் தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

📕📘நாட்டில் 4 பேருக்காக இயற்றப்பட்டதே

புதிய வேளாண் சட்டங்கள்;

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு.

📕📘பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில்

கொரோனா தடுப்பூசி; பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

📕📘முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

📕📘மியான்மரில் மக்களால் தோந்தெடுக்கப்பட்டுள்ள அரசிடம் ஆட்சிப் பொறுப்பை மீண்டும் ஒப்படைக்க, அந்த நாட்டு ராணுவ அரசுக்கு சா்வதேச நெருக்கடி அதிகரித்து வருகிறது.

📕📘இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் 2021 வீரர்கள் ஏலப் பட்டியலை வியாழக்கிழமை அறிவித்தது, மொத்தம் 292 கிரிக்கெட் வீரர்களை களமிறக்குகிறது, அவர்கள் அனைவரும் பிப்ரவரி 18 அன்று 2021 க்கான ஐபிஎல் ஏலத்தில் விடப்பட உள்ளனர்.

📕📘📕📘📕📘📕📘📕📘

🌹🌹விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது

கூட்டுறவு சங்கங்களின் பயிர்க்கடன் தள்ளுபடி வழிகாட்டு நெறிமுறைகளின்படி “வேளாண்மை சாராத விவகாரங்களுக்குவழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது. பயிர்க்கடன்களுக்காக மானியம் பெற்றிருந்தால் எஞ்சிய தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். குற்ற நடவடிக்கை, நிதிமுறைகேடுகளுக்கு உள்ளானவற்றிற்கு கடன் தள்ளுபடி இல்லை, கூட்டுறவு சங்களுக்கு மொத்தம் தள்ளுபடி தொகை வட்டியுடன் தவணைகளில் 5 ஆண்டுகளில் விடுவிக்கப்படும்*

நபார்டு வங்கிக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகையை வட்டியுடன் அரசே செலுத்தும், ஒவ்வொரு விவசாயிக்கும் கடன் தள்ளுபடி சான்றிதழ், நிலுவையின்மைச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். தள்ளுபடி செய்ய தகுதியான கடன்களை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் புதிய கடன்களைப் பெற தகுதியுடையவர்கள். நிலுவையின்மை சான்று வழங்கியவுடன் அசல் நிலப்பதிவேடு, ஆவணங்கள், நகைகளை திருப்பித் தர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.                     ‌‌

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...