கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (17-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

பிப்ரவரி 17, 2021


மாசி 05 - புதன்

மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பணிபுரியும் இடத்தில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் பற்றிய சிந்தனைகள் மனதில் ஏற்படும். உடலில் ஒருவிதமான சோர்வினால் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உணர்ச்சிவசமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சிந்தித்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும்.


பரணி : மேன்மையான நாள்.


கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 17, 2021


மாசி 05 - புதன்

நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும், பாராட்டுகளும் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது சேமிப்பை மேம்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



கிருத்திகை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

 

ரோகிணி : அனுசரித்து செல்லவும்.


மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 17, 2021


மாசி 05 - புதன்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் முன்கோபமின்றி செயல்படுவது தேவையற்ற பகையை தவிர்க்க இயலும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். எதிர்பாராத பயணங்கள் மற்றும் செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்



மிருகசீரிஷம் : வாய்ப்புகள் ஏற்படும்.


திருவாதிரை : சேமிப்புகள் குறையும்.


புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 17, 2021


மாசி 05 - புதன்

நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வாரிசுகளின் ஒத்துழைப்பு மனதிற்கு நிம்மதியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு தொழில் தொடர்பான வாய்ப்புகளும், ஆலோசனைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



புனர்பூசம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.


பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 17, 2021


மாசி 05 - புதன்

உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு நிம்மதியை ஏற்படுத்தும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மகம் : நிம்மதியான நாள்.


பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 17, 2021


மாசி 05 - புதன்

புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட்டால் பலவிதமான மனக்குழப்பங்களை தவிர்க்க இயலும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



உத்திரம் : கவனம் வேண்டும்.


அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.


சித்திரை : பொறுமை வேண்டும்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 17, 2021


மாசி 05 - புதன்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் தனவரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.


சுவாதி : மாற்றமான நாள்.


விசாகம் : பேச்சுவார்த்தைகள் சாதகமாகும்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 17, 2021


மாசி 05 - புதன்

செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உயர் அதிகாரிகளின் உதவிகளால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் உறவுகளின் மூலம் ஆதரவு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் மகிழ்ச்சி ஏற்படும். தள்ளிப்போன சில விஷயங்களை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் அவ்வப்போது சிறு சிறு குழப்பங்களும், கவலைகளும் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : எதிர்ப்புகள் குறையும்.


அனுஷம் : பொறுமை வேண்டும்.


கேட்டை : குழப்பமான நாள்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 17, 2021


மாசி 05 - புதன்

எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகள் ஈடேறும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் குடும்பத்தினருடன் முதலீடுகள் மேம்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு கலந்து ஆலோசித்து முடிவு காண்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களுக்கு சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மூலம் : புரிதல் உண்டாகும்.


பூராடம் : முதலீடுகள் மேம்படும்.


உத்திராடம் : அலைச்சல் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 17, 2021


மாசி 05 - புதன்

உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் நன்மையை அளிக்கும். உறவினர்களின் ஆதரவால் தனவரவுகள் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : மாற்றமான நாள்.


திருவோணம் : தனவரவுகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 17, 2021


மாசி 05 - புதன்

திட்டமிட்ட காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணைவரிடம் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பதற்கான தருணங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். நீண்ட தூர உறவினர்களின் சந்திப்பு மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : காரியங்கள் நிறைவேறும்.


சதயம் : முடிவுகளை எடுப்பீர்கள்.


பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 17, 2021


மாசி 05 - புதன்

கடினமான செயல்களையும் எளிய முறையில் செய்து முடிப்பீர்கள். மூத்த சகோதரர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் மூலம் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், உங்களின் மீதான நம்பிக்கையும் மாறுபடும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும்.


அதிர்ஷ்ட திசை: கிழக்கு


 அதிர்ஷ்ட எண்: 3 


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை


பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும் 


 உத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும் 


ரேவதி : சாதகமான நாள்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...