கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விரைவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு – அமைச்சர் செங்கோட்டையன்...


 தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கடந்த மாதம் 19ம் தேதி முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கியது. கொரோனா பாதிப்பால் மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடங்கள் நடத்தப்படுவதால் பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்கவில்லை என ஆசிரியர்கள் தரப்பிலும் முறையாக கல்வி கற்க முடியவில்லை என மாணவர்கள் தரப்பிலும் புகார்கள் எழுந்ததால், பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.


அதன் படி, பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கான பொதுத் தேர்வு அறிவிப்புகள் இன்னும் வெளியாகாமல் இருக்கும் சூழலில், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது என்றும் உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை, உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை என்றும் அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

What will be the tomorrow's important announcement?

 நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும்? What will be the major announcement tomorrow? தமிழ்நாட்டில் இரும்புக் காலம் முன்னதாக...