கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 23.02.2021 (செவ்வாய்)...

 


🌹ஓராயிரம் கஷ்டங்களை மனதில் ஒளித்து வைக்க பெண்களுக்கு காலம் கற்றுக் கொடுத்த                                      ஒரு வார்த்தை ஒண்ணுமில்லை.!

🌹🌹ஒருவர் நம்முடன்  பேச நேரம் இல்லை என்று சொன்னால்  நம்பிவிடக்கூடாது.

ஏனென்றால் அவர்களின் முன்னுரிமை பட்டியலில் நாம் இல்லை என்பதே உண்மை.!!

🌹🌹🌹வாழ்க்கையை வெறுப்பதற்கு ஆயிரம் காரணம் இருந்தாலும் 

வாழ்க்கையை வாழ ஒரே காரணம் தான்.நாளை எல்லாம் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை மட்டுமே.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம்: அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்.

🍒🍒அரசு மாணவர் விடுதிகளில் முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் வருகைப்பதிவு - சிசிடிவி கண்காணிப்பு.

🍒🍒அரசு ஊழியர்களின் கோரிக்கையான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.

 - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

நாளிதழ் செய்தி

🍒🍒10-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்.

🍒🍒அரசாணைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - தமிழ் வளர்ச்சி துறை.

🍒🍒BT to PG Promotion : வரலாறு பாடத்திற்கு கூடுதல் ஆசிரியர்கள் பெயர் பட்டியல் தேவைப்படுவதால் 2007-08ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு

🍒🍒2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  "சமவேலைக்கு" "சம ஊதியம்" வரும் சட்டப்பேரவையிலேயே 110 விதியின்கீழ் உடனடியாக அறிவிக்க  வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மாண்புமிகு தொல். திருமாவளவன் MP அவர்கள் பேட்டி

🍒🍒கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் வருவாய் துறை அறிவிப்பு

🍒🍒நாடு முழுவதும் ஜேஇஇ மெயின் 2021 இன்று பிப்ரவரி 23 தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.

🍒🍒12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி வெளியீடு

பொதுத்தேர்வு எழுதும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டுபள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பாடங்களுக்குமான வினா வங்கிவெளியிடப்பட்டுள்ளது.

🍒🍒 பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு: தொடக்கக்கல்வி துறையில் சலசலப்பு.

🍒🍒1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் விரைவில்  வழங்கப்படும் என   அமைச்சர் செங்கோட்டையன் தகவல் 

🍒🍒தமிழகத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒கணினி அறிவியல் தேர்வு முறைகேடு தொடர்பாக, புகார்கள் இருந்தால், மார்ச், 1க்குள் அனுப்ப வேண்டும்' என, இரு நபர் விசாரணை கமிட்டி அறிவித்துள்ளது 

🍒🍒தமிழகத்தில் ஆறு நாட்களும் விடுமுறை இல்லாமல் பள்ளிகள் இயங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

🍒🍒பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரியில் ஜனநாயக படுகொலையை அரங்கேறியுள்ளது.

வரும் தேர்தலில், பாஜக கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் 

வைகோ.

🍒🍒பல்வேறு நீர்தேக்கங்களை உருவாக்கியது திமுக அரசு என்று மேட்டூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் பொண்ணையாற்றில் கட்டப்பட்ட தடுப்புப்பாலம் 1 மணி நேரத்தில் உடைந்தது. ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அணை ஒரே மாதத்தில் உடைந்து விழுந்தது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

🍒🍒புதுச்சேரியில் காங். ஆட்சி பதவியிலிருந்து விலகினாலும் மக்கள் மனதிலிருந்து விலக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சாம, பேத, தான, தண்டங்களை கையாண்டு காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் உரிய பாடத்தை புகட்டும் வகையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி எனவும் கூறினார்.

🍒🍒மன்மோகன் சிங் ஆட்சியில் 10சதவிகிதமாக இருந்த நாட்டின்வளர்ச்சி, மோடி ஆட்சியில் 5 சதவிகிதமாக குறைந்துள்ளது என பெட்ரோல். டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் கச்சா விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை உச்சம் தொட்டுள்ளது என ஆ.ராசா கூறியுள்ளார்.

🍒🍒பணத்தைக் கொண்டு ஜனநாயகத்தை விலைக்கு வாங்கும் ஆபத்தான விளையாட்டை மேற்கொள்கிறது பாஜக - கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

🍒🍒38,83,492 முன்கள பணியாளர்களுக்கு இதுவரை முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

🍒🍒பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு  எங்கள் வெற்றியை பாதிக்காது; எரிபொருட்களின் விலை விரைவில் குறையும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

🍒🍒கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது குறித்த திட்டம் பரிசீலனையில் உள்ளது; கிராமங்கள், மக்கள் தொகை உள்ளிட்ட விபரங்கள் கணக்கிடப்பட்டு வருகிறது. காலம் கனியும் போது மாவட்டம் உதயமாகும் - சுவாமிமலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

🍒🍒தமிழகத்தில் இன்னும் 3 மாதத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றும் மக்களாட்சி அமையும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது பெட்ரோல், டீசல் விலை உயர்வு. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. மத்திய, மாநில அரசுகள் வரியை உயர்த்தியது தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க காரணம் எனவும் குற்றம் சாடினார்.

🍒🍒மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 90வது நாளாக விவசாயிகள் போராட்டம்

🍒🍒பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியாக 21 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தும் மத்திய அரசு விலையை குறைக்காதது கொடூரமானது என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

🍒🍒டாலர்' சிட்டியாக இருந்த திருப்பூர், அதிமுக ஆட்சியில் 'டல்' சிட்டியாக மாறிவிட்டது.

மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு.

🍒🍒முதல்வர் உத்தரவை அடுத்து சென்னையில் நேற்று முதல் மெட்ரோ ரயில் கட்டண குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். சென்னை மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணம் 70ல் இருந்து ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது

🍒🍒போராட்டத்தில் அரசு ஊழியர்களைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை தேவை: முதல்வர் பழனிசாமிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

🍒🍒மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என கூறுவதை ஏற்க முடியாது.

முடியவில்லை என்றால் அமைச்சரவையில் இருந்து விலகட்டும் -  திமுக பொருளாளர் டி. ஆர். பாலு

🍒🍒புதுச்சேரியில் ராஜினாமா செய்த திமுக எம்எல்ஏ வெங்கடேசன் கட்சியில் இருந்து நீக்கம்- பொதுச்செயலாளர் துரைமுருகன்.

🍒🍒இந்தியா-மொரீசியஸ் நாடுகள் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) நேற்று கையெழுத்தாகி உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் முதல் நாடாக மொரீசியஸ் இந்தியாவுடன் FTA ஒப்பந்தத்தில் கையெழுத்து.

🍒🍒தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் B.Ed., படிப்பில் சேர விரும்புவோர் tnou.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொலைதூரக் கல்வி மூலம் B.Ed., படிப்பை நடத்த NCTE, UGC அனுமதி வழங்கி உள்ளதாக திறந்தநிலை பல்கலைக்கழகம் தகவல்.

🍒🍒திருவள்ளுவரைCBSE 8 ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் புரோகிதர் போன்று சித்தரித்து வெளியிட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைகழக மாணவர்கள்  மோடிக்கு திருவள்ளுவர் படம் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

மொழி வளர கைகொடுங்கள்.

🍒🍒கனடாவில் உள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தேவைப்படும் நிதியை வழங்குமாறு தமிழக அரசிற்கு கமல்ஹாசன் அவர்கள் கோரிக்கை.

🍒🍒த‌மிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

🍒🍒அரசு ஊழியருக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையுடன், ரூ.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு.

🍒🍒தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

ரேஷன் கடை ஊழியர்களுக்கான தொகுப்பு ஊதியம் 5000 ரூபாயில் இருந்து 6520 ரூபாயாக உயர்வு

கட்டுனர்களுக்கான தொகுப்பு ஊதியம் 4250 ரூபாயில் இருந்து 5500 ரூபாயாக உயர்வு

ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு தொகுப்பு ஊதியம் உயர்வு

ஊதியங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

🍒🍒அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற தலைப்பில் அரசு செலவில் விளம்பரம் ஆயிரம் கோடி ரூபாய்க்குச் செலவிடப்படவில்லை. ரூ.64.72 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால், தமிழக அரசின் சார்பில், அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு, 'வெற்றிநடை போடும் தமிழகம்' என்ற தலைப்பில் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடப்படுகிறது.

இந்த விளம்பரங்களுக்குத் தடைவிதிக்கக் கோரி திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வாறு வெளியிடப்படும் விளம்பரங்களுக்கான தொகையை அதிமுகவிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார்.

அதிமுக அரசின் வெற்றிநடை போடும் தமிழகம் விளம்பரம் பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

அதிமுக அளித்துள்ள விளக்கம் குறித்து பரிசீலித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

🍒🍒புதுச்சேரி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது - பேரவையில் சபாநாயகர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தலைமையிலான அரசு தோல்வி                                            👉புதுச்சேரியில் நடைபெறும் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

👉மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு போதிய நிதி கிடைக்கவில்லை.

👉புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி அன்றாடம் தொல்லை கொடுத்து வந்தார்

👉மத்திய அரசு நிதி அளிக்காதபோதும் நலத்திட்டங்களை செயல்படுத்தினோம்.                                    👉மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம்தான் ஆனால் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சி 10.20 சதவீதம்                                                            👉புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

👉கிரண்பேடி அளித்த நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம்

👉எதிர்கட்சிகள் எனக்கு எதிராக சதி

👉புதுச்சேரி துணை நிலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார் நாராயணசாமி

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள சென்னை உயர் நீதிமன்ற அனுமதி அளித்துள்ளது.

தமிழக மின்சார வாரியத்தில் 5000க்கும் மேற்பட்ட கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கு 2019ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழக மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிற ஊழியர்கள் தங்களை நிரந்தரம் செய்யாமல் கேங்மேன் பணிக்கு புதிதாக ஆட்களை எடுப்பதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தங்களுடைய பணியை நிரந்தரம் செய்தபிறகுதான், புதிதாக ஆட்களை எடுக்கவேண்டும் என்றும், 2019 உத்தரவை ரத்துசெய்யவேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

ஆனால் தமிழக அரசு தரப்பில், அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டிருப்பதாகவும், உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட 70% பணிகள் முடிந்துள்ளது எனவும், ஏற்கெனவே தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 2019ஆம் ஆண்டு அறிவிப்பின் அடிப்படையில் பணிகளைத் தொடரலாம் என்று கூறி வழக்கை முடித்துவைத்துள்ளனர்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...