கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (25-02-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 25, 2021


மாசி 13 - வியாழன்

வியாபாரத்தில் எண்ணிய லாபம் கிடைக்கும். உறவினர்களின் மூலம் மேன்மை உண்டாகும். வேலையாட்களிடம் அமைதியுடன் செயல்படவும். விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். அரசாங்க அனுகூலத்தின் மூலம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனைகளில் வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : லாபம் கிடைக்கும்.


பரணி : பாராட்டப்படுவீர்கள்.


கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 25, 2021


மாசி 13 - வியாழன்

கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பிள்ளைகள் சாதகமாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளை கற்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் மறையும்.


ரோகிணி : நம்பிக்கை அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : சாதகமான நாள். 

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 25, 2021


மாசி 13 - வியாழன்

போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். தனவரவுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தேவையற்ற சிந்தனைகளால் மன உளைச்சல் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மிருகசீரிஷம் : வெற்றி கிடைக்கும்.


திருவாதிரை : தடைகள் நீங்கும்.


புனர்பூசம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 25, 2021


மாசி 13 - வியாழன்

போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வித்தியாசமான புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். மாமனார் வழியில் ஆதரவும், ஆதாயமும் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : சாதகமான நாள்.


பூசம் : உதவிகள் கிடைக்கும்.


ஆயில்யம் : பிரச்சனைகள் குறையும். 

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 25, 2021


மாசி 13 - வியாழன்

நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு பிடித்த புதிய ஆடைகளை வாங்குவீர்கள். நினைத்த காரியங்கள் சில மனப்போராட்டங்களுக்கு பின்பு நிறைவேறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உபரி வருமானம் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



மகம் : விருப்பங்கள் நிறைவேறும்.


பூரம் : அனுகூலம் உண்டாகும்.


உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 25, 2021


மாசி 13 - வியாழன்

பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழல் உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் முன்னேற்றத்திற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : முன்னேற்றமான நாள்.


அஸ்தம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சித்திரை : மனம் மகிழ்வீர்கள்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 25, 2021


மாசி 13 - வியாழன்

உங்களை பற்றிய புரிதலும், தெளிவும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் தொழில் தொடர்பான ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



சித்திரை : தெளிவு கிடைக்கும்.


சுவாதி : ஆதாயம் உண்டாகும்.


விசாகம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சகம்

பிப்ரவரி 25, 2021


மாசி 13 - வியாழன்

தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். பொதுக்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


அனுஷம் : அனுபவம் உண்டாகும்.


கேட்டை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 25, 2021


மாசி 13 - வியாழன்

கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்களிடம் வாக்குறுதிகளை தவிர்க்கவும். நண்பர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். மற்றவர்களின் மனம் புண்படும்படி பேசுவதை தவிர்க்கவும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


பூராடம் : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.


உத்திராடம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 25, 2021


மாசி 13 - வியாழன்

மனைவி வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் தடைபட்டு வந்த பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.


திருவோணம் : அங்கீகாரம் கிடைக்கும்.


அவிட்டம் : மதிப்புகள் உயரும்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 25, 2021


மாசி 13 - வியாழன்

வழக்கில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். வாரிசுகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு மறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அவிட்டம் : தீர்ப்புகள் கிடைக்கும்.


சதயம் : நுணுக்கங்களை கற்பீர்கள்.


பூரட்டாதி : கவனம் வேண்டும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 25, 2021


மாசி 13 - வியாழன்

புதிய முயற்சிகளுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உடல்நலம் சீராகும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.


ரேவதி : ஒற்றுமை பிறக்கும்.

---------------------------------------

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...