கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 27.02.2021 (சனி)...

 


🌹சிலருக்கு நாம் கொடுக்கும்போது நல்லவர்கள்

அதையே திரும்ப கேட்கும்போது கெட்டவர்கள்

அது பாசம் என்றாலும் சரி 

பணமென்றாலும் சரி.!

🌹🌹அளவுக்கு அதிகமாக அன்பை பிறரிடமிருந்து பெறவும்கூடாது.

பிறருக்கு கொடுக்கவும் கூடாது.             ஏனெனில் இரண்டுமே வேதனையைத் தரும்.!!

🌹🌹🌹காயப்படுத்தும் போது கூட வலிக்கவில்லை.

ஆனால் காயப்படுத்தி விட்டு அதை நியாயப்படுத்தும் போது தான் வலிக்கிறது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும்- சுனில் அரோரா அறிவிப்பு.

👉வேட்புமனு தாக்கல் தொடக்கம் -  10.03.21

👉வேட்புமனு தாக்கல் நிறைவு - 19.03.21

👉வேட்புமனு  பரிசீலனை - 20.03.21

👉வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் - 22.03. 21 

👉தேர்தல் நாள் : 06.04.21

👉வாக்கு எண்ணிக்கை : 02.05.21

🎀🎀தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு.       

🎀🎀தேர்தல் அறிவிப்புக்கு பிறகு எந்த வித புதிய திட்டங்கள் அரசாணை வெளியிடக் கூடாது என அனைத்துத் துறை செயலர்களுக்கு தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

🎀🎀சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையர்

🎀🎀அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது - பதவி உயர்வும் வழங்கக்கூடாது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

🎀🎀GOVT LETTER-7000/2020-11 DATE-25.1.2021-மாற்றுத்திறன் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2021 தேர்தலில் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளித்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவு வெளியீடு

🎀🎀தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு நாளை 28-02-2021(ஞாயிற்றுக்கிழமை)அன்று திட்டமிட்டப்படி நடைபெறும்.

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்

🎀🎀கருணை அடிப்படையில் பணி நியமனம் 02.02.2016 முதல் 31.12.2019 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப் படுத்துதல் - ஆணை வெளியீடு.

🎀🎀ஊதியக் குறை தீர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல் - தனி ஊதியத்தில் (Personal Pay) கோரப்பட்ட ஐயங்களுக்கு தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு

🎀🎀பள்ளி மான்யம் 31-03-2021க்குள் மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறையில் படி செலவினம் மேற்கொள்ள உத்தரவு.

🎀🎀நாடு முழுவதும் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

🎀🎀தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற, சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது

🎀🎀கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.

🎀🎀தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

🎀🎀ஆசிரியர் பணி வயது வரம்பு அரசாணையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

🎀🎀பிளஸ் 2 தேர்வுக்கு இன்று முதல் தனி தேர்வர் விண்ணப்பிக்கலாம்

🎀🎀SHAALA SIDDHI முடிக்காதவர்கள் விரைவாக முடித்துக்கொள்ளவும் - Last Date: Feb.28

🎀🎀மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) முடிவுகள் www.cbse.nic.in இணையதளத்தில் வெளியானது.

கடந்த ஜனவரி 31ம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்திய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

முதல் தாளில் 4,41,798, இரண்டாம் தாளில் 2,39,501 பேரும் தகுதி பெற்றிருப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

🎀🎀3 days training for BT teachers - Proceedings - 3 நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பரிந்துரை செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

🎀🎀10 மற்றும் 12ம் வகுப்பு பாடங்களை ஒலிப் பாடங்களாக ( Audio Lessons) அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்தல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது

🎀🎀 The India Toy Fair 2021 " பிப்ரவரி மாதம் 27.02.2021 முதல் 02.03.2021 வரை இணையதள வழியாக கண்காட்சி - பள்ளிகள் கலந்து கொள்ள உத்தரவு

🎀🎀மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா. பாண்டியன் காலமானார்

🎀🎀ஆஸ்கர் விருது பொது பிரிவில் 366 படங்களில் சூரரைப் போற்று நீடிக்கிறது. 

சிறந்த நடிகர், நடிகை, படம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி. 

இதற்கான வாக்கு பதிவு மார்ச் 5 - 10 வரை நடைபெறுகிறது. மார்ச் 15 இறுதி பட்டியல் வெளியிடப்படும். 

1000 படங்கள் போட்டியிட்டன.

🎀🎀திமுகவை பற்றி வாய்க்கு வந்ததை பேசுவதை மோடி இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் - மு.க.ஸ்டாலின்

🎀🎀மத்திய அரசின் நோக்கம் பொதுத்துறை நிறுவனங்களை முடிந்தவரை தனியார்மயம் ஆக்குவதே எங்கள் நோக்கம்

- பிரதமர் நரேந்திர மோடி

🎀🎀வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தற்காலிகமானதே;  6 மாதங்களுக்குப் பின் மாற்றி அமைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.

🎀🎀வாக்குப்பதிவு நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு. 

🎀🎀80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்குமுறையை பயன்படுத்தலாம். 

- சுனில் அரோரா

🎀🎀தமிழகத்தில் அதிக தேர்தல் செலவுகள் நடைபெறும் என்பதால் முக்கியமான மாநிலமாக பார்க்கப்படுகிறது

- சுனில் அரோரா

🎀🎀குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் அது பற்றிய விவரங்களை 

ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

🎀🎀ஒரு சட்டமன்ற தொகுதிக்கு அதிகபட்சமாக ரூ.30.8 லட்சம் மட்டுமே தேர்தல் செலவுக்கு அனுமதி

 - சுனில் அரோரா

🎀🎀தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல்

🎀🎀மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும்  எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்

- சுனில் அரோரா.

🎀🎀பழ.கருப்பையாவுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு

🎀🎀மறைந்த மூத்த கம்யூனிஸ்ட்  தலைவர் தா.பாண்டியன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி.

🎀🎀வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு சட்டமசோதா நிறைவேற்றியமைக்காக முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார் மருத்துவர் ராமதாசு

🎀🎀"நான் நாட்டின் ஒரே பெண் முதல்வர், பாஜகவின் செயல்களுக்கு நான் ஒருபோதும் பயப்பட மாட்டேன்".

- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

🎀🎀சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா அல்லது  தனித்து போட்டியா என்று விரைவில் அறிவிக்கப்படும் 

-சென்னையில் கமல்ஹாசன் பேட்டி

🎀🎀அதிமுக- பா.ம.க இடையே இன்றே தொகுதி பங்கீடு இறுதி ஆக வாய்ப்பு.

🎀🎀தமிழகத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர்கள் இடமாற்றம். 

மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு கூடுதல் இயக்குனராக சாந்திமலர் நியமனம்.

🎀🎀அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவிப்பு

🎀🎀சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ஜனநாயக கட்சி - சமத்துவ மக்கள் கட்சி இடையே கூட்டணி உறுதி ஆகியுள்ளது.

விஜயகாந்த், கமலும் கூட்டணிக்கு வர வேண்டும் என சரத்குமார் அழைப்பு.

🎀🎀வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு அகில இந்திய பார்வார்டு பிளாக் எதிர்ப்பு. 

மசோதாவை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அறிவிப்பு.

🎀🎀திருச்சியில் நடைபெற இருந்த திமுக மாநில மாநாடும், மற்றும் வரும் 7 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக் குழு கூட்டமும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பு

🎀🎀கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுகவின் தொகுதி பங்கீடு குழு அறிவிப்பு                                                      

🎀🎀1598 சிறப்பாசிரியர்கள் காலி பணியிடத்தை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை வெளியீடு-ஆசிரியர் தேர்வு வாரியம்

👉1) Physical Education Teacher - 801

👉2) Art Master - 365

👉3) Music Teacher - 91

👉4) Craft  (Sewing) -341

Total Post - 1598

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns