கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர் படிப்புகள் பயில ஆசிரியர்களுக்கு அனுமதி - முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க இணை இயக்குநர் உத்தரவு...



 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் உயர்படிப்புகளுக்கான அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான அதிகாரம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் எம்.பில், பிஎச்டி போன்ற உயர்படிப்புகளில் சேர்ந்து படித்துக்கொண்டே பகுதி நேரமாக பணியாற்ற அனுமதி வழங்கும்படி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை குறித்து பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர் பொன்னையா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


அவர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை, “அரசு பள்ளி ஆசிரியர்கள் உயர்படிப்புகளை பகுதி நேரமாக படிக்க பள்ளி இயக்குனரகம் சார்பில் உத்தரவுகள் வழங்கப்பட்டன. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட 101 அரசாணையின்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கான பல அதிகாரங்களை அரசு அனுமதித்துள்ளது. அப்போது ஆசிரியர்கள் கூடுதல் கல்வி பெறுவதற்கான அனுமதி வழங்கும் அறிவிப்பை அரசு வழங்கியுள்ளது.


பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு தனித்தனியாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த அரசாணைக்கு பின் வந்த கருத்துருக்கள் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு திரும்ப அனுப்பப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக எந்த கருத்துருக்களும் இயக்குனரகத்தில் இல்லை. இது குறித்த புகார்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிடலாம்”, இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்..

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSTC - Digital / Card / QR Code Payment மூலம் பயணச்சீட்டு வழங்குதல் - அதிக பணமில்லா பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் நடத்துநர்களுக்கு ஊக்கப் பரிசு - மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை

  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் -  Digital / Card / QR Code Payment மூலம் பயணச்சீட்டு வழங்குதல் - அதிக பணமில்லா பரிவர்த்தனைகள் மேற்கொள...