கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு ஊழியர்களின் ஊதியம், PF தொகையில் மாற்றம் – Take Home Salary குறைகிறதா? - புதிய ஊதிய கொள்கை விரைவில் அமல்...



 மத்திய அரசு புதிய ஊதிய கொள்கையை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்களுக்கான ஊதியம், பி.எஃப், கிராச்சுவிட்டி முதலானவற்றில் மாற்றங்களை ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய ஊதிய கொள்கை 2021:

2019 ஆம் ஆண்டு ‘The Wage Code 2021’ என்ற சட்ட மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அமல்படுத்துவதற்கான பணிகளை மத்திய தொழிலாளர் நலத்துறை செய்து வருகிறது. இதன் மூலமாக அரசு பணியில் உள்ளவர்களுக்கு வாரத்திற்கு 4 நாள் வேலை, கூடுதல் பணி நேரம் போன்றவை திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



புதிய ஊதிய சட்டத்தின் படி, சிடிசி யில் மாற்றங்கள் கொண்டுவர நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்பட்டன. இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கான ஊதியம், பி.எஃப், கிராச்சுவிட்டி போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும் என நம்பப்படுகிறது. பொதுவாக சம்பளம் என்பது சம்பளம், அகவிலைப்படி மற்றும் பிற சலுகைகள் உள்ளடக்கி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த கொள்கை மூலம் மொத்த சம்பளத்தில் அடிப்படை சம்பளம், அகவிலைப்படியின் அளவு குறைவாகவும், இதர சலுகைகள் அதிகமாகவும் இருக்கும்.


இந்நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட சட்டத்தின் மூலமாக 50% மேலாக பிற சலுகைகள் இருக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 நிமிடம் வேலை செய்தால் அது கூடுதல் நேரம் ஓவர் டைம் ஆக கருதப்பட்டு அதற்கான ஊதியம் வழங்கப்படும். இதன் காரணமாக சம்பள தொகை குறைவாகவும், பிஎப் பணம் அதிகமாகவும் இருக்கும்.


இந்த திட்டம் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இதனால் மாதந்தோறும் வீட்டிற்கு கொண்டு செல்லும் ஊதியம் குறைய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் மாத கடைசியில் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்து பின்னர் விதிகளை அமல்படுத்தும் செயல்முறை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...