இடுகைகள்

The Wage Code 2021 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

12 மணிநேரம் வேலையா..? ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்குமா புதிய கொள்கை.. உண்மை என்ன...?

படம்
  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு உள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம் ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பிஎப் தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை அடைய உள்ளது. இதில்  குறிப்பாக ஊழியர்களின் வேலை நேரத்தில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் ஊழியர்கள் மத்தியில் அதிகளவிலான பயத்தையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. புதிய ஊதிய குறியீடு மசோதா மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய ஊதிய குறியீடு மசோதாவில் மக்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது, குறிப்பாகத் தற்போது இருக்கும் 9 மணிநேர வேலை நேரத்தை 12 மணிநேரம் உயர்த்துவது குறித்து ஊழியர்கள் மட்டத்தில் அச்சம் எழுந்துள்ளது. 4 நாட்கள் மட்டுமே வேலை உலக நாடுகளில் பல நிறுவனங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்திப் பெரிய அளவிலான வர்த்தக மாற்றத்தைச் செய்துள்ளது. இது ஊழியர்களுக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி அதிகளவிலான லாபம் அளிப்பதாக ஆய்வுகள் கூறும் நிலையில், இந்தியாவிலும் இதுபோன்ற முறையை அமல்படுத்த நிறுவனங்களுக்கு இந்தப் புதிய ஊதிய குறியீடு மசோதா மூலம

அரசு ஊழியர்களின் ஊதியம், PF தொகையில் மாற்றம் – Take Home Salary குறைகிறதா? - புதிய ஊதிய கொள்கை விரைவில் அமல்...

படம்
 மத்திய அரசு புதிய ஊதிய கொள்கையை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்களுக்கான ஊதியம், பி.எஃப், கிராச்சுவிட்டி முதலானவற்றில் மாற்றங்களை ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஊதிய கொள்கை 2021: 2019 ஆம் ஆண்டு ‘The Wage Code 2021’ என்ற சட்ட மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அமல்படுத்துவதற்கான பணிகளை மத்திய தொழிலாளர் நலத்துறை செய்து வருகிறது. இதன் மூலமாக அரசு பணியில் உள்ளவர்களுக்கு வாரத்திற்கு 4 நாள் வேலை, கூடுதல் பணி நேரம் போன்றவை திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஊதிய சட்டத்தின் படி, சிடிசி யில் மாற்றங்கள் கொண்டுவர நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்பட்டன. இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கான ஊதியம், பி.எஃப், கிராச்சுவிட்டி போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும் என நம்பப்படுகிறது. பொதுவாக சம்பளம் என்பது சம்பளம், அகவிலைப்படி மற்றும் பிற சலுகைகள் உள்ளடக்கி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த கொள்கை மூலம் மொத்த சம்பளத்தில் அடிப்படை சம்பளம், அகவிலைப்படியி

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...