கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Union Budget 2021 : “அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேர பணி அறிமுகம்” நிர்மலா சீதாராமன் அறிவிப்பு...

 


அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேர பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 

இந்திய வரலாற்றில் காகிதம் இல்லாத முதல் பட்ஜெட்டை பாஜகவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து புதிய சாதனை படைத்தார். பட்ஜெட்டின்போது பேசிய அவர், அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்பட உள்ளது என்றும், நாடு முழுவதும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்பட உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.


மேலும், அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேர பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும், சிறு – குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.


மேலும், நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட் உள்ளதாகவும், வரும் நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என்றும், வரும் 2025 – 2026-ஆம் ஆண்டுக்குள் இந்த நிதிப்பற்றாக்குறையை 4.5 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


மேலும், தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நலனை காக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ளவும், பல்லுயிர் பெருக்கத்தை கட்டிக்காக்கவும் ஆழ்கடல் ஆய்வு அமைப்பு ஏற்படுத்தப்படும் என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...