கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Union Budget 2021 : 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு...

 


75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அறிவிக்கப்பட்டிருப்பதாவது, 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் மற்றும் வட்டியை மட்டுமே நம்பியிருப்போர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


2021-22-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.


அதில், சிறிய அளவிலான வருமான வரி பிரச்னைகளை தீர்த்து வைக்க புதிய அமைப்பு உருவாக்கப்படும்.


மாத வருவாயாக, ஓய்வூதியம் மற்றும் வட்டியை மட்டுமே நம்பியுள்ள 75 வயதுக்கு மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்பும் போது இரட்டை வரி விதிப்பு முறைக்கு ஆளாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Centennial Schools - District wise

  நூற்றாண்டு பள்ளிகளின் பட்டியல் - மாவட்ட வாரியாக  List of Centennial Schools - District wise  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவு...