கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Union Budget 2021 : எந்தெந்தப் பொருட்களின் விலை குறையப் போகிறது? எந்தெந்தப் பொருட்களின் விலை அதிகரிக்கப் போகிறது? பட்ஜெட் அறிவிப்பு...



 2021-22ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில், வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளதால், வரும் காலத்தில் தங்கம்,வெள்ளி ஆகியவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அதேசமயம், வீடுகளில் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ், ஏ.சி., எல்இடி விளக்குகள், மொபைல் போன்கள் ஆகியவற்றின் விலை அதிகரிக்கக்கூடும்.


இவற்றுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட பொருட்களாக வந்தாலும், புதிய பொருட்களாக வந்தாலும் விலை அதிகரிக்கும்.


விலை அதிகரிக்கும் பொருட்கள்:

1. ஃபிரிட்ஜ்,ஏ.சி.களில் பொருத்தப்படும் கம்ப்ரஸர்கள்

2. எல்இடி விளக்குகள்

3. சர்க்கியூட் போர்ட், அதன் உதரிபாகங்கள். 4. கச்சா பட்டு மற்றும் பருத்தி வகைகள்

5. சோலார் பேனல், இன்வெர்ட்டர்கள்,

6. வாகனங்களில் பயன்படுத்தப்படும் கடினத்தன்மை கொண்ட கண்ணாடிகள்

7. வாகனங்களில் பயன்படுத்தப்படும் வைப்பர்கள், சென்சார்கள்

8. மொபைல் போனில் பாகங்கள், பிசிபிஏ, கேமரா, கனெக்டர்கள், பேக்கவர்

9. மொபைல் போன் சார்ஜர்கள்

10. லித்தியம் அயன் பேட்டரியின் உள்ளீடு பாகங்கள்

11. பிரிண்டர்களில் பயன்படுத்தப்படும் காட்ரேஜ்

12. விற்பனைக்குத் தயாராக இருக்கும் தோல் பொருட்கள்

13. நைலான் ஃபைபர், பிளாஸ்டிக்

14. செயற்கை கற்கள், பட்டை தீட்டப்பட்ட கற்கள், ஜிர்கோனியா


விலை குறையும் பொருட்கள்

1. தங்கம், வெள்ளி தாதுப்பொருட்கள்.

2. தங்கம், வெள்ளிக் கட்டிகள்

3. பிளாட்டினம், பளாடியம்

4. சர்வதேச அமைப்புகள் மூலமாக இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSTC - Digital / Card / QR Code Payment மூலம் பயணச்சீட்டு வழங்குதல் - அதிக பணமில்லா பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் நடத்துநர்களுக்கு ஊக்கப் பரிசு - மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை

  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் -  Digital / Card / QR Code Payment மூலம் பயணச்சீட்டு வழங்குதல் - அதிக பணமில்லா பரிவர்த்தனைகள் மேற்கொள...