கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (02-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 02, 2021


மாசி 18 - செவ்வாய்

பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும். வாகனங்களால் லாபம் உண்டாகும். வாக்குவாதங்களை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். புதிய நபர்களின் வருகையால் சுபவிரயங்கள் உண்டாகும். துணிச்சலுடன் புதிய செயல்திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : லாபகரமான நாள்.


பரணி : சுபவிரயங்கள் உண்டாகும்.


கிருத்திகை : கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 02, 2021


மாசி 18 - செவ்வாய்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும். புதிய நபர்களின் ஆதரவால் தனவரவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



கிருத்திகை : சிந்தனைகள் தோன்றும்.


ரோகிணி : நன்மையான நாள்.


மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

மார்ச் 02, 2021


மாசி 18 - செவ்வாய்

வெளிநாட்டு பயணங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் குறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். இறைவழிபாட்டால் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


திருவாதிரை : சுபவிரயங்கள் உண்டாகும்.


புனர்பூசம் : புத்துணர்ச்சி ஏற்படும்.

---------------------------------------




கடகம்

மார்ச் 02, 2021


மாசி 18 - செவ்வாய்

தொழில் தொடர்பான முக்கிய பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். அறிந்த கலைகளால் தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத பயணங்கள் மற்றும் அலைச்சல்கள் ஏற்படும். வாரிசுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தர்ம ஸ்தாபனங்கள் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும்.



 அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.


பூசம் : அலைச்சல்கள் ஏற்படும்.


ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

மார்ச் 02, 2021


மாசி 18 - செவ்வாய்

தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பயணங்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். வாக்குவன்மையால் பொருட்சேர்க்கை ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : அனுபவம் கிடைக்கும்.


உத்திரம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




கன்னி

மார்ச் 02, 2021


மாசி 18 - செவ்வாய்

இளைய சகோதரர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கண் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நிர்வாகம் சம்பந்தமான செயல்பாடுகளில் தனித்திறமைகள் புலப்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



உத்திரம் : முயற்சிகள் மேம்படும்.


அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


சித்திரை : தனித்திறமைகள் புலப்படும்.

---------------------------------------




துலாம்

மார்ச் 02, 2021


மாசி 18 - செவ்வாய்

கூட்டாளிகளால் சுபவிரயங்கள் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். சர்வதேச வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். மனைவியிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சாமர்த்தியமான பேச்சுக்களால் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : அபிவிருத்தியான நாள்.


சுவாதி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


விசாகம் : அறிமுகம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 02, 2021


மாசி 18 - செவ்வாய்

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்கு தொழிலில் எண்ணிய லாபம் உண்டாகும். மனக்குழப்பங்களின் மூலம் பணியில் மந்தத்தன்மை ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



விசாகம் : விருப்பங்கள் நிறைவேறும்.


அனுஷம் : மந்தமான நாள்.


கேட்டை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

மார்ச் 02, 2021


மாசி 18 - செவ்வாய்

மனதில் இருந்துவந்த சஞ்சலமான எண்ணங்களால் மனக்குழப்பம் ஏற்படும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். மனதைரியத்துடன் செயல்பட்டு தொழிலில் இருந்துவந்த பிரச்சனைகளை களைவீர்கள். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். கால்நடைகளினால் லாபம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மூலம் : முன்னேற்றமான நாள்.


பூராடம் : பொறுமை வேண்டும்.


உத்திராடம் : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------




மகரம்

மார்ச் 02, 2021


மாசி 18 - செவ்வாய்

பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். சாஸ்திர கல்வி பற்றிய தெளிவு பிறக்கும். வியாபாரிகளுக்கு அனுகூலமான சூழல் அமையும். வாரிசுகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடைவீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். உயர் அதிகாரிகளினால் சாதகமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.


திருவோணம் : பெருமை உண்டாகும்.


அவிட்டம் : சாதகமான நாள்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 02, 2021


மாசி 18 - செவ்வாய்

எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்ப நபர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சலும், கோபமும் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் காலதாமதமாக கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : நெருக்கடியான நாள்.


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

மார்ச் 02, 2021


மாசி 18 - செவ்வாய்

திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரங்களில் மரியாதைகள் உயரும். புதிய அணிகலன்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்புகள் உயரும். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறைந்து சுமூகமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : எண்ணங்கள் நிறைவேறும்.


உத்திரட்டாதி : மரியாதைகள் உயரும்.


ரேவதி : மனம் மகிழ்வீர்கள்.

---------------------------------------

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...