கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் 1 -10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் (விடுபட்டவர்கள்) விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் கடிதம்...

 


பள்ளிக் கல்வி - சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் 1 -10.03.2020 க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் (விடுபட்டவர்கள்) விவரங்கள்  கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 46150/ அ4/ இ1/ 2020, நாள்: 15-03-2021...

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் 

சென்னை-06 


ந.க. எண். 46150/அ4/இ1/2020, நாள். 15.03.2021. 


பொருள்: 


தமிழ்நாடு அமைச்சுப்பணி பள்ளிக் கல்வி - சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல் சார்பு. 


பார்வை: 


1. அரசாணை (நிலை) எண். 37, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (அ.வி. IV) துறை, நாள். 10.03.2020. 


2. அரசாணை (நிலை) எண். 116, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, நாள். 15.10.2020. 


3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் எண். 46150/அ4/இ1/2020, நாள். 23.10.2020. 

 


பார்வை (3)ல் காணும் இவ்வலுவலக செயல்முறைக் கடிதத்தின் மீது அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கலாகிறது. 


10.03.2020க்கு முன்னர் கணக்குத் தேர்வு பாகம்-1ல் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத, தகுதிகாண் பருவம் முடிக்கப்படாத இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பணியாளர்களின் விவரங்களை சில @முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பாமல் இருப்பது அறிய வருகிறது. அவ்வாறு ஏதும் விடுபட்டிருப்பின் இவ்வலுவலக 23.10.2020நாளிட்ட கடிதத்துடன் அனுப்பப்பட்ட படிவத்தில் (Excel Format) பூர்த்தி செய்து 17.03..2021க்குள் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


இணைப்பு: படிவம் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி). 

பெறுநர் - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 46150/ அ4/ இ1/ 2020, நாள்: 15-03-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns