கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சட்டமன்றத் தேர்தல் 2021 : பணிகளும்! விதிகளும்! - மு.வீரகடம்ப கோபு...



சட்டமன்றத் தேர்தல் 2021 : பணிகளும்! விதிகளும்! - பகுதி-1

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களுமாகிய நாம் 2021 சட்டமன்றத் தேர்தல் பணியில் இருக்கிறோம். . . இந்தப் பணியில் நாம் சிறப்பாகச் செயல்பட அதனை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

அதற்காகவே இந்தத் தொடர்.

என்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்..

Election dutyக்கு பயிற்சி தான் பிரதானம்.

ஆமாம், பயிற்சியின் போது நாம் தவறவிடக்கூடாத விசயங்கள் தான் இந்தப் பகுதி.

பயிற்சி வகுப்புகளில் நாம் முதலாவதா செய்கிற தவறே "நாம பாக்காத எலக்சனா?" என்பது தான். முதலிலே நாம விட வேண்டியது இந்த எண்ணத்தைத் தான்.

ஆமாங்க,

தேர்தல் ஆணையம் ஒவ்வொரு முறையும் புதுப்புது மாற்றங்களைத் தேர்தல் நடைமுறைகளில் கொண்டு வாராங்க. அதனை முழுமையாக அறியாமல் பயிற்சி வகுப்புகளில நமக்கு தெரிஞ்சது தானேனு அசட்டையா இருக்க வேணாம்.

சரி விசயத்துக்கு வருவோம்.

தேர்தல் நடைமுறையில் மிக முக்கியமானது EVM என்கிற வாக்குப்பதிவு இயந்திரம்.

இதில் இம்முறை முழுமையா VVPAT என்கிற புது இயந்திரத்த இணைச்சிருக்கு தேர்தல் ஆணையம்.

VVPAT (Voter Verifiable Paper Audit Trail) என்பது வாக்காளர் யாருக்கு வாக்களித்தோம்னு தெரிஞ்சுக்கிறதுக்கான இயந்திரம்.

பயிற்சி மையத்தில் பார்வைக்கும் செய்முறைக்கும் வைத்திருக்கிற இயந்திரத்தை ஒருமுறைக்கு இருமுறை முடிந்தால் அதற்குமேலும் இயக்கி பார்த்திருங்க...

Control Unit, VVPAT, Ballot Unit-னு அவை இணைக்கப்பட்டிருப்பதையும், அதன் இணைப்பு வயர்களின் அமைப்பையும் நீங்களே ஓரிருமுறை இணைத்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக,

*பச்சைத்தாள் முத்திரை (Green paper seal),

*சிறப்பு அட்டை ( Special tag),

*ஒட்டு தாள் (Strip seal) அப்புறம்

*முகவரி அட்டை (ADDRESS TAG)

இவைகளை நன்கு பார்த்து அறிந்து கொள்ளுவதோடு அதை எப்படி பயன்படுத்துறது என்பதையும் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க...

*பயன்படுத்தியும் பார்த்துக்கோங்க...

இதைப்பற்றியெல்லாம் பின்னாடி வருகிற பகுதிகளில நாம விரிவா தெரிஞ்சுக்கிட்டாலும். . ., அனுபவம் என்பது அதனை பயிற்சி மையங்களிலே கையாளுகிற போது தான் தெரியும்..

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விசயம் பயிற்சி மையத்தில் வழங்குகிற வாக்குச்சாவடித் தலைமை அலுவலர் கையேட்டை மறக்காம வாங்கி கட்டாயமா படியுங்கள்.

சட்டம் மற்றும் விதிகள் எனக்கு தெரியாதுனு சொல்லி பிரச்சனைகளில இருந்து தப்பிக்க முடியாது.

அதனாலே பயிற்சி வகுப்புகளை லேசா எடுத்துக்காதிங்க...

அடுத்த பகுதியில. . . வாக்குச்சாவடிக்கு போகனும் அதனால் போய் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கோங்க...



சட்டமன்றத் தேர்தல் 2021 பணிகளும்! விதிகளும்! - பகுதி 2 : 

வாக்குப்பதிவு பொருட்கள்

மண்டல அலுவலர் வாக்குப்பதிவுப் பொருட்களை கொடுக்கும் போதே உங்கள் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கையேடில் Annexure-19-ல் உள்ளவாறு ஒரு பட்டியலை கொடுப்பார்.

அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு வாக்குப்பதிவு பொருட்களை நாம சரிபார்க்கனும்.

அதிலே இல்லாத பொருட்களைக் குறித்து வைத்து அடுத்த முறை மண்டல அலுவலர் வரும்போது பட்டியலைக் கொடுத்தால் தவறிய பொருட்களை மண்டல அலுவலர் மீண்டும் உங்களிடத்திலே வழங்கிடுவார்.

வாக்குப்பதிவுக்கான பொருட்களில் எதை எதை எப்படி பார்க்கனும் என இனி சுருக்கமாகப் பார்ப்போம்..

Control unit, Balloting unit (வாக்காளர் எண்ணிக்கையினை பொறுத்து BU ன் எண்ணிக்கை மாறும்) பிறகு VVPAT ஆகியவற்றின் வரிசை எண்களைத் தனியாகக் குறிப்பேட்டில் பதிவு செய்துகொண்டு யாரும் எளிதில் எடுக்க முடியாதவாறும், சூரிய ஒளி நேரடியாக படாதவாறும் மறைவிடத்திலும் வைக்க வேண்டும். Control unit, ballot unit, VVPAT ஆகியவற்றை இணைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுடன் இணைந்து இயக்கி சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக படிவங்களில், படிவம் 17 Register of Voters  வாக்காளர் எண்ணிக்கை அளவிற்கு போதுமானதாக உள்ளதா எனச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்தது Marked copy of electoral roll - 1 & working copy of electoral roll  - 3No's  இருக்கிறதா என பார்ப்பதுடன் அவைகள் பக்க எண்கள் விடுதலின்றி உள்ளதா? எல்லா இணைப்புகளும் சரியாக உள்ளதா? என சரிபார்த்துக் கொள்ளவும். அதிலே மிக முக்கியமா கவணிக்க வேண்டியது வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் நீங்கள் பணிபுரிகிற வாக்குச்சாவடிக்கு உரியது தானா என ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியா கவனமாக இருக்கவேண்டியது Indelible ink. 10 CC அளவிலே இரண்டு பாட்டில்கள் வழங்கப்பட்டிருக்கும். அதில் மை உள்ளதா என்பதை சரிபார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

Green paper seal, Strip seal, Special tag இவைகளையும் கவனமாகத் தனியாக எடுத்து வைத்துக்கொள்வதோடு. அவற்றில் உள்ள வரிசை எண்களைத் தனியாக குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

Distinguishing mark rubber stamp (பிரித்தறி முத்திரை) நீங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடிக்கு உரியது தானா என சரிபார்த்துத் தனியாக உங்களின் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.

Tendered votes க்காக சில வாக்குச்சீட்டுகளும் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். அவற்றையும் அதன் வ.எண்களை குறித்துக்கொண்டு தனியாக எடுத்து உங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுங்கள்

அடுத்ததாக மெட்டல்சீல்.

இவைகளைத் தனியாக பாதுகாப்பாக வைத்த பின்னர் வாக்குப்பதிவு பொருட்களுடன் வழங்கப்பட்ட படிவங்களை தனித்தனியாக எடுத்து நன்றாக படித்துப்பார்த்து நீங்கள் அறியும்வண்ணம் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

முதல் நாளில் உங்களை அணுகும் தேர்தல் முகவர்களிடம் வாக்குப்பதிவு நாளில் வாக்குப்பதிவு துவங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே உரிய ஆவணங்களுடன் வந்து வாக்குச்சாவடி முகவர்களாக பதிவு செய்துகொள்ள தெரிவித்து விடுங்கள்.

பின்னர் வழங்கப்பட்ட போஸ்டர்களை வாக்குச்சாவடிக்கு வெளியில் யாரும் கிழித்துவிடாதபடி பாதுகாப்பாக ஒட்டிவிட்டு  நீங்கள் உறங்கச் செல்லுங்கள். உங்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று பணியாற்றிட போதிய தூக்கமும் அவசியம்...

வாக்குச்சாவடி உள்ளும் புறமும் போஸ்டர்கள் / அறிவுப்புகளை ஒட்டும் பொழுது நீங்களிருக்கும் வாக்குச்சாவடி ஒரு பள்ளியின் வகுப்பறைதான்* என்பதை மறந்துவிடாதீர்கள்.

பல்வேறு கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளுக்காக பலரிடம் கையேந்தி நிதி திரட்டி வண்ணமயமாக வகுப்பறைகளை மாற்றியிருப்பர். நாம் ஒட்டும் போஸ்டர்கள் அந்த அழகைச் சிதைத்துவிடாதபடி கவனத்தோடே ஒட்டுங்கள். போஸ்டரில் முழுக்க பசையைத் தடவாது மூலைகளில் மட்டும் தடவி ஒட்டுவது நல்லது. அறையின் உள்ளே ஒட்டும் போது வாய்ப்பிருப்பின் செல்லோடேப் பயன்படுத்துங்கள்.


சட்டமன்றத் தேர்தல் 2021 பணிகளும்! விதிகளும்! - பகுதி 3 : Booth Agents & Mock Poll

இந்தப்பகுதி *வாக்குப்பதிவு நாளில் வாக்குப் பதிவிற்கு முன் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் செய்ய வேண்டிய பணிகளை*  பற்றி விளக்க இருக்கிறது.

*வாக்குப்பதிவு நடைமுறைகள் சட்டப்பூர்வமானவை.* இதில் ஏதேனும் தவறுகள் நேர்ந்தால் *தேர்தல் பாதிக்கப்படும், மறு தேர்தல் கூட நடத்திட உத்தரவிடப்படலாம்* என்பதையும் தாண்டி *கடுமையான தண்டனைக்கு ஆட்படுவோம்* என்பதால் மிகுந்த கவனத்தோடு இப்பணிகளினை செய்திட வேண்டும்.

வாக்குப்பதிவு நேரத்திற்கு *ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே* வாக்குச்சாவடி முகவர்களை நாம் நியமனம் செய்திடவும் அவர்கள் முன்னிலையில் *மாதிரி வாக்குப்பதிவு* நடத்திடவும் வேண்டும்.

வாக்குச்சாவடி முகவர்களை பொறுத்தவரையில் வேட்பாளர் ஒருவர் வாக்குச்சாவடியில் முகவராக  *படிவம் 10ல் ஒருவரை நியமனம் செய்து* வழங்கி இருப்பார். அவர் அந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பவராகவோ அல்லது அந்த தொகுதியில் ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க தகுதியானவராகவோ இருப்பது அவசியம்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு வாக்குச்சாவடி முகவரும் இரு  மாற்று வாக்குச்சாவடி முகவரும் நியமனம் செய்யப்படலாம். எனினும் *ஒரு சமயத்தில் ஒரே ஒரு முகவர் மட்டுமே வாக்குச்சாவடியினுள் இருக்க இயலும்.*

அவ்வாறு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர் ஒருவர் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் முன்பாக அறிவிப்பு  ஒன்றில் கையொப்பமிட வேண்டும்.

வாக்குச்சாவடியினுள் இருக்கும் முகவர், உள்ளே இருந்து வாக்காளர் பட்டியலையோ அல்லது துண்டுச்சீட்டுகளையோ வெளியில் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.

வாக்குச்சாவடியினுள் முகவர்கள் வாக்குச்சாவடியினுள் நுழையும் வாக்காளர் வெளியில் செல்லும் வரையிலான  நடைமுறைகளை பார்க்கும் வண்ணம் அமரவைக்கப்பட வேண்டும்.

உள்ளே அமரவைக்கப்படும் முகவர்கள் முதலில்,

1. அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் 

2. மாநில கட்சிகளின் முகவர்கள்

3. பிற மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்டு பொது சின்னத்தில் இந்த மாநிலத்தில் போட்டியிடும் கட்சிகளின் முகவர்கள்.

4. பதிவு செய்யப்பட்ட & அங்கீகரிக்கப்படாத கட்சி  வேட்பாளரின் முகவர்கள்...

5. சுயேட்சை வேட்பாளர்கள் என அமரவைக்கப்பட வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் *முகவர்களை நியமிக்க கால அவகாசம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை* ஆதலால் எந்த நேரத்திலும் முகவர் ஒருவர் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகளை தொடர அனுமதிக்கலாம்.

வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மிக முக்கியமானது.

தேர்தலின் ஒவ்வொரு பகுதியிலும் அவர்களின் பங்களிப்பு தேவைப்படும்..

வாக்குச்சாவடி முகவர் நியமனத்திற்கு அடுத்ததாக நாம் செய்ய வேண்டியது MOCK POLL.

*மாதிரி வாக்குப்பதிவு : Mock poll*

Mock poll என்பது வாக்குப்பதிவு இயந்திரம் முறையாக வேலை செய்கிறது என வாக்குப்பதிவு அலுவலர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் அறிந்து கொள்வதற்கான நடைமுறை ஆகும்.

தேர்தல் நடைமுறைகளில் மிக மிக முக்கியமான முன்-நிகழ்வு இது. இதனை முறையாக  நடத்தாவிடில் *ஒட்டு மொத்த வாக்குப்பதிவும் செல்லாததாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.* எனவே இந்த நடைமுறைகளைக் கவனமாக கையாளவும்.

தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பாளர்களுக்கு / முகவர்களுக்கு Mock poll வாக்குப்பதிவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்  துவங்குவது குறித்து  தொடர்பான எழுத்துப்பூர்வமாக தெரிவித்திட வேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவு துவங்கும் போது *குறைந்தபட்சம் இரு வேட்பாளர்களுடைய வாக்குச்சாவடி முகவர்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்.* முகவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பின் *அடுத்த 15 நிமிடங்கள் வரை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் காத்திருக்க வேண்டும்.*

அவகாசம் அளிக்கப்பட்ட நேரத்திற்கு பின் ஒரு முகவர் மட்டும் வந்திருந்தாலோ அல்லது எவரும் வரவில்லை என்றாலோ வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மாதிரி வாக்குப் பதிவினை தொடர்ந்து நடத்தலாம். இந்நிகழ்வில் *வாக்குச்சாவடி முகவர்களின் வருகை இன்மை குறித்து மாதிரி வாக்குப்பதிவு சான்றிதழில் Mock poll certificate-ல்* வாக்குச்சாவடி தலைமை அலுவலர் குறிப்பிட வேண்டும்.

மாதிரி வாக்குப்பதிவின் போது *ஒரு வாக்குப்பதிவு அலுவலரும் ஒரு முகவரும் வாக்களிப்பதற்கான மறைவிடத்தில் இருக்க வேண்டும்.*

*வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு ஏதும் பதிவாகி இருக்கவில்லை என்பதையும் VVPAT உள்ளே வாக்கு பதிவு செய்யப்பட்ட சீட்டுகள் எதுவும் இல்லை என முகவர்களிடம் காட்டி உறுதி செய்த பின்னர் Ballot பட்டனை அழுத்தி  ஒவ்வொரு முகவரையும் வாக்குப்பதிவு செய்திட அனுமதிக்க    வேண்டும்.*

மாதிரி வாக்குப்பதிவில் *குறைந்தது 50 வாக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.* எந்த ஒரு வேட்பாளருக்கான தேர்தல் முகவர் இல்லையோ அந்த  வேட்பாளருக்கு பதிலாக வாக்குச்சாவடி அலுவலர்களில் ஒருவரோ அல்லது வருகை தந்திருக்கும் முகவர்களில் ஒருவரோ வாக்களிக்க வேண்டும். எல்லா வேட்பாளருக்கும் வாக்களிக்கப்பட்டுள்ளதை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உறுதி செய்ய வேண்டும். நேரமிருப்பின் 50 ற்கும் அதிகமாகவும் வாக்குப்பதிவு செய்திட அனுமதிக்கலாம்.

அனைத்து முகவர்களையும் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட பின் *கட்டுப்பாட்டு எந்திரத்தில் Close பட்டனை அழுத்தி Result பட்டனை அழுத்தி பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் விபரம் , வேட்பாளர் வாரியாக பெற்றவாக்குகளின் விபரம் , VVPAT ல் அச்சாகியுள்ள வாக்குகளின் விபரம் ஆகியவற்றை சரிபார்த்து முகவர்களிடம் உறுதி* செய்ய வேண்டும்.

*வாக்குப்பதிவிற்கு இடையில் VVPAT அல்லது  வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டாலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்.*

மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின் *Clear பட்டனை அழுத்தி எந்த வாக்காளர்களுக்கும்  வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை என முகவர்களிடம் காட்டி உறுதி செய்யவும்.*

*VVPAT-ல் உள்ள சீட்டுகளை எடுத்து mock poll என முத்திரையிட்டு அதற்கென வழங்கப்பட்ட கருப்பு நிற கவரில்* வைத்து  தனி பெட்டியில் வைத்து *மண்டல அலுவலரிடம் இறுதியாக பொருட்கள் ஒப்படைக்கும் போது தனியாக ஒப்படைக்கவும்.*

மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் கையேடு *Annexure 14-ல் உள்ளவாறு Mock Poll Certificate தயார் செய்து வாக்குச்சாவடி முகவர்கள் ஒப்பம் பெற்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர். நேரம் மற்றும் தேதியுடன் ஒப்பமிடவும்*

மாதிரி வாக்குப்பதிவு என்பது சட்டப்பூர்வமான நடைமுறை என்பதை கவனத்தில் வைத்து முறையாக இதனை நடத்துவது வாக்குச்சாவடி தலைமை அலுவலரின்  கடமையாகும்.

Mock Poll முடிச்சாச்சு.. இனி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு Seal வைப்பது தான்...

நமக்கு வாக்குப்பதிவு பொருள்களோடு வழங்கப்பட்ட  Green paper seal, SPL Tag, Address tag, Strip seal இவைகளை எடுத்துக்கோங்க...

அதனை எப்படி பயன்படுத்துறதுனு அடுத்த பகுதியில பார்ப்போம்.


சட்டமன்றத் தேர்தல் 2021 பணிகளும்! விதிகளும்! - பகுதி 4 : 

வாக்குப்பதிவு இந்திரங்களை முத்திரையிடல் :

மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின் வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் VVPAT ஆகியவற்றை சீல் வைக்கும் பணி என்பது *பொறுமையுடனும் பொறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலமாகும்.*

*Mock poll முடிந்த பின்னர் VVPAT ல் அச்சாகி விழுந்திருக்கும் சீட்டுகளை எடுத்து அதன் பின்புறம் rubber stamp உதவியுடன் *MOCK POLL SLIP* என முத்திரையிட்டு அதற்கென வழங்கப்பட்ட கருப்பு நிற கவரில் வைத்து அரக்கு முத்திரையிடப்பட வேண்டும்.

*அந்த கவரின் மேல் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஒப்பமிட்டு *VVPAT  Paper slips of MOCK POLL* என எழுதி வைக்க வேண்டும்.

VVPAT ல் இருந்த paper slip-கள் எடுக்கப்பட்ட பின்னர் காலியாக இருக்கும் VVPAT-ஐ முகவர்களுக்கு காண்பித்துவிட்டு அரக்கு முத்திரை இட வேண்டும்.

அடுத்தபடியாக முத்திரையிட வேண்டியத Control unit-ஐ *Green Paper Seal, Special Tag,* மற்றும், *Strip Seal* ஆகியவற்றால் சீலிடப்பட வேண்டும்.

*Green Paper Seal, Spl.Tag & Strip seal ஆகியவை வரிசை எண்கள் வழங்கப்பட்டவை என்பதாலும் அவை குறித்த பதிவுகள் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அவர்களின் நாட்குறிப்பில் பதிவு செய்யப்படும் என்பதாலும் மிகக் கவனமாக கையாளப்பட வேண்டும்.*

*Control unitஐ சீலிடுவது எப்படி? :*

1. *_GREEN PAPER SEAL :_*

Green paper seal ஐ பயன்படுத்தும் முன்னர்  *அதன் Serial No-ஐ குறித்துக்* கொண்டு Serial no அருகில் *வெள்ளை பக்கத்தில்  வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒப்பமிடவும் முகவர்களிடமும் ஒப்பம் பெற வேண்டும்.*

Control Unit-ஐ பொறுத்தமட்டில் *முதலில் நாம் முத்திரையிடுவது Result section.*

Result , Clear, Print என்ற மூன்று பகுதிகள் உள்ள Result Section ன் மூடி போன்ற பகுதியில் உள்ள Frame-ல் Green paper seal-னை நுழைத்து Green Paper seal ன் இரு முனைகளும் சமமாக இருக்கும் வண்ணம் வைத்துக் கொள்ளவும். பிறகு Result Section பகுதியினை மூடி விடவும்.

Result section சீல் வைக்கும் போது *பேப்பர் சீலின் எண் மேல் பக்கம் தெரியுமாறு வைக்கவேண்டும்*.

பயன்படுத்துகையில் சேதமான green Paper Seal களை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்திய மற்றும் பயன்படுத்துகையில் சேதமடைகிற Green paper seal களின் எண்களைகுறித்து வைத்து *படிவம் 17-C ல்  பகுதி-1 இனம் 10-ல்* குறிப்பிட வேண்டும். பயன்படுத்தாத Green paper seal கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்

நாம் வாக்குப் பதிவு எந்திரத்தில் பயன்படுத்தியுள்ள *Green Paper Seal ன் வரிசை எண்ணை முகவர்கள் குறித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.*

2. *_Special Tag :_*

Result section-ல் Green paper seal வைத்த பின்னர்  Outer cover பகுதியினை முழுவதுமாக பாதுகாக்கும் பொருட்டு Special Tag மற்றும் Strip seal பயன்படுத்தப்படுகிறது.

Outer cover-ன் பகுதியில் Close button இருக்கும் பகுதியினை திறப்பாக வைத்து. Special Tag வைக்கப்படும்.

result section inner cover-ல் உள்ள துளையில் தேர்தல் ஆணையத்தினால் வழங்கப்பட்ட நூலினை நுழைத்து அதில் Special Tag-ஐ பொறுத்தி  அதில் அரக்கு முத்திரை வைக்கவேண்டும்.

அரக்கு முத்திரை வைக்கும் முன்பாக Special  tag-ல் *Control unit ன் வரிசை எண்ணை குறித்தும் அதன் பின்புறம் வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் கையொப்பம் இட்டு முகவர்களின் ஒப்பத்தினையும் பெற்றிருக்க வேண்டும்.*

*Special tag ல் உள்ள வரிசை எண்ணை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தாமும் குறித்துக்கொண்டு சத்தமாக வாசித்து முகவர்களையும் குறித்துக்கொள்ள தெரிவிக்கவும்.*

பின்னர் Special Tagஐ வாக்குப்பதிவு எந்திரத்தின் close பொத்தானுக்கு இடையுறு இல்லாமல் பொறுத்தி outer cover ஐ மூடி அதனையும் நூல் கொண்டு  address tagஐ வாக்குச்சாவடி விபரங்களை பூர்த்தி செய்து இணைத்து அரக்கு முத்திரை இடவும்.

*சேதமடைந்த Special tag னை எந்த காரணத்தினை கொண்டும் பயன்படுத்தக்கூடாது.*

3. *_Strip seal :_*

அடுத்த படியாக Result section inner cover-ல் இணைத்திருக்கும் Green paper seal-ஐ strip seal உடன் இணைக்கும் பணி.

*Strip seal, 1 inch அகலமும் 23.5 inch நீளமும் A,B,C,D என ஏற்கனவே பசையிடப்பட்ட நான்கு பகுதிகளையினையும் கொண்டிருக்கும்.*

இதற்கென உள்ள வரிசை எண்ணை நீங்களும் குறித்துக்கொண்டு முகவர்களுக்கும் சொல்லுங்கள்..

Strip seal ன் A என்ற பகுதியினை ஏற்கனவே inner cover ல் வைத்துள்ள green paper seal-க்கு மேல் பகுதியில் Close பட்டனுக்கான ரப்பர் உறைக்கு கீழாக வைத்து green paper seal கீழ் முனையினை Strip sealன் A. என்ற பகுதியில் ஒட்டவும்.

பின்னர் strip seal ன் B என்ற பகுதியினை மடித்து A பகுதியின் மீது வைக்கப்பட்ட green paper seal மீது ஒட்டவும்.

green paper seal ன் outer cover-ல் மேல் இருக்கும் பகுதியினை எடுத்து இப்போது Strip seal ன் C என்ற பகுதி மீது ஒட்டவும்.

இப்போது strip seal னை Control unit-னை சுற்றி close பட்டனுக்கு கீழாக சுற்றி D என்ற பகுதியினை Green paper seal-ன் மடித்து வைக்கப்பட்ட பகுதி மீது ஒட்டிவிடவும்.

வாசிக்கும் போது குழப்பமாக இருக்கும் இம்முறையினை பயிற்சி வகுப்பினில் கவனமாக அறிந்து ஒருமுறை செய்து பார்த்துக் கொண்டால் அல்லது *இணைப்பில் உள்ள படக்காட்சியைப் பார்த்தால் அருமையாகப் புரியும்.* அதன்பின் வாக்குச்சாவடியிலும் எளிதாக இருக்கும்.

இப்போது சீல் வைக்கும் பணி நிறைவடைந்து வாக்குப் பதிவிற்கு தயாராகும் நேரம்.

வாக்குப்பதிவினை துவங்க தயாராகும் முன் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்..

இனி non stop கொண்டாட்டம் தான்.

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...