கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Appointment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Appointment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பயிற்சி முடித்த நேரடி நியமன மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு - செயல்முறைகள் வெளியீடு

 



Allocation of posting places for directly recruited District Educational Officers upon completion of training – DSE Proceedings


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் (மு.கூ.பொ) செயல்முறைகள், சென்னை-06.


முன்னிலை திருமதி.ந.லதா


ந.க.எண்.052548/அ1/இ1/2020, நாள்.31.08.2026.


பொருள்:


தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - 2014-17 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தினால் தேர்வு செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021,  தீர்ப்பாணை நாள். 29.04.2024) தெரிவுப்பட்டியலின்படி மறு வரையறை செய்யப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலராக நேரடி நியமனம் செய்யப்பட்டவர்கள் பயிற்சி முடித்து முறையான மாவட்டக்கல்வி அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் சார்பு.


பார்வை:


1. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் திரு.எஸ்.நிர்மல்குமார் உள்ளிட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு எண். (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021 I. இன் மீதான தீர்ப்பாணை நாள்.  29.04.2024


2. அரசாணை (3டி) எண்.01. பள்ளிக்கல்வித் (ப.க.1(1)) துறை, நாள்.11.02.2026.


3. சென்னை -06, தமிழ்நாடு செயல்முறைகள்.  பள்ளிக்கல்வி இயக்குநரின் ந.க.எண்.052548/அ1/இ1/2020, நாள் .19.02.2026.


4. அரசாணை (நிலை) எண். 146, பள்ளிக்கல்வித் (ப.க.1(1)) துறை, நாள் 25.08.2026. 


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2014-17 ஆம் ஆண்டிற்கு மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் தெரிவுப் பட்டியல் சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021, தீர்ப்பாணை நாள்.29.04.2024) மறுவரையறை செய்யப்பட்ட தெரிவுப்பட்டியலை ஏற்பளிப்பு செய்தும், அப்பட்டியலின்படி (1) திரு.S.நிர்மல்குமார், (2)திரு.Z.சூசைமரியநாதன், (3) திருமதி.S.இளையராணி, ஆகிய "03" அலுவலர்களை 06 மாதகால நிருவாக பயிற்சிக்கு மாற்றுப்பணியில் நியமனம் செய்தும், நிருவாக பயிற்சியினை மேற்கொள்ளயேதுவாக 03 மிகைப்பணியிடங்களை தோற்றுவித்தும், பார்வை-2 இல் காணும் அரசாணையின்படி அரசளவில் ஆணைகள் வழங்கப்பட்டது.


2. இதன்தொடர்ச்சியாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது நிருவாக பயிற்சியினை நிறைவுசெய்ததையடுத்து, அன்னார் மாவட்டக்கல்வி அலுவலராக பயிற்சியில் சேர்ந்த நாள் முதல், தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி சிறப்பு விதிகளில் வகுப்பு IV கீழ் வரும் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்தில் முறையான நியமனம் வழங்கியும், அவரவர் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிலமர்த்தியும் இதன் வழி ஆணையிடப்படுகிறது.



>>> செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


180 உடற்கல்வி ஆசிரியர்கள் SMC மூலம் நியமனம்



சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 180 உடற்கல்வி ஆசிரியர்கள் (PET) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை


க.து.ந.க.எண்.D1/ சிறப்பு/2025


பெருநகர சென்னை மாநகராட்சி,

கல்வித்துறை.

நாள். 14.05.2026


சுற்றறிக்கை


பொருள்:


பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறை சென்னை தொடக்க, நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிக SMC உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்தல் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பரிந்துரை கோருதல் -தொடர்பாக.


பார்வை:


மாண்புமிகு மேயர் அவர்களின் 2026-2027ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பு எண். 2


பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் தற்காலிக அடிப்படையில் (ஜூன் முதல் மார்ச் வரை 10 மாதங்களுக்கு மட்டும்) உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.


வ.எண்     பள்ளிகள்     பணியிடங்கள்  கல்வித்தகுதி   சம்பளம்


1   சென்னை தொடக்கப்பள்ளிகள்     101   C.P.Ed/B.P.Ed    ரூ. 18,000


2     சென்னை நடுநிலைப்பள்ளிகள்      29     B.P.Ed/M.P.Ed    ரூ. 20,000


3 சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்    50    B.P.Ed/M.P.Ed   ரூ. 25,000


மொத்தம்    180


எனவே, இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களின் விவரங்களுடன் கூடிய பரிந்துரையை உரிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட உதவி கல்வி அலுவலரிடம் உடனடியாக சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


கல்வி அலுவலர்


பெறுநர்:


1 இணை ஆணையர்(கல்வி) அவர்களுக்கு பணிந்து சமர்பிக்கப்படுகிறது.


2 அனைத்து உதவி கல்வி அலுவலர்கள்


3. அனைத்து சென்னை தொடக்க நடுநிலை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்



6 தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர்



ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 6 தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்


TRB - Direct Recruitment of SGTs - Reserve List

 

 

TRB - Direct Recruitment of SGTs - Reserve List


ஆசிரியர் தேர்வு வாரியம் - இடைநிலை ஆசிரியர் நேரடி பணி நியமனம் 2024


TEACHERS RECRUITMENT BOARD 


DIRECT RECRUITMENT FOR THE POST OF SECONDARY GRADE TEACHERS – 2024


RESERVE LIST



TEACHERS RECRUITMENT BOARD DIRECT RECRUITMENT FOR THE POST OF SECONDARY GRADE TEACHERS – 2024

Notification No.01/2024 on 09.02.2024, Addendum 01-A/2024 Dated:16.07.2024 and 26.03.2025 

RESERVE LIST

In obedience with the order passed by the Hon’ble Madurai Bench of Madras High Court

in W.P.(MD). No.29657 of 2025 and Tamil Nadu Government Servants (Conditions of Service) Act 2016 Section 3(U), the Board here by releases the list of candidates who have been placed in the reserve list for the Post of Secondary Grade Teachers in the Special Rules for the Tamil Nadu Elementary Education Subordinate services. This release is subject to the outcome of the final orders in the Appeal to be filed by this Board on the aforesaid Judgment. The position of the candidates in the reserve list is furnished in the brackets against their Roll number:



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை SMC மூலம் நிரப்பிட அனுமதி - அரசாணை வெளியீடு

 

G.O. No. 05, Dated : 22-01-2026


அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) மூலம் தற்காலிகமாக நிரப்பிட அனுமதி வழங்கி அரசாணை (ப) எண்: 05, நாள் : 22-01-2026 வெளியீடு


அரசாணை எண். 05 - SMC Teachers Appointment


Government Order (P) No. 05, dated 22-01-2026, granting permission to temporarily fill the vacant teaching posts in Government Kallar Reform Schools through the School Management Committee (SMC)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


New Teachers Joining on 16-02-2026 - மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்


 புதிய ஆசிரியர்கள் 16-02-2026 அன்று பணி ஏற்பு - மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்


New teachers to take up duties on 16-02-2026 - Activities to be carried out


நண்பர்களே வணக்கம் 🙏

 

புதிய முதுகலை ஆசிரியர்கள் 16-02-2026 திங்கள் கிழமை பணி ஏற்பு செய்ய உள்ளார்கள் 🙏


 *அது சார்ந்த பதிவுகள்* ...


1) தங்களின் பள்ளியில் *காலிப் பணியிடங்கள்* இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


2) *மருத்துவ தகுதிச் சான்றிதழ்* கொண்டு வருவார்கள் 


3) இவர்கள் அனைவரும் *TRB exam* மூலம் தான் நியமனம்..

சான்றிதழ்களை TRB / CEO office verify செய்து இருக்கும்...

இருப்பினும்...

( நியமன ஆணையில் சார்ந்த தலைமை ஆசிரியர் ஒருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள் என்று இருக்கும்) 

 


4) பணி ஏற்கும் போது *appointment order, joining request letter போதும்*

( அனுப்புநர்


பெறுநர்

தலைமை ஆசிரியர்...


பொருள்...

பணி ஏற்க அனுமதி....


Etc...


கையால் எழுதினால் கூட போதும்)


மாதிரி இணைத்துள்ளேன் 😊


5) joining report JD HS முகவரிக்கு  இருக்க வேண்டும் *joining report நீங்க CEO office அனுப்ப வேண்டும்*  (இரண்டு நகல்) ...  அவர்கள் மொத்தமாக தொகுத்து JD office அனுப்பி விடுவார்கள் 


முதல் நாளில் இது மட்டும் போதும்..


6) ஒன்றுக்கு மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருப்பின்...

வர வர அவர்களின் பெயரை எழுதிக் கொள்ளலாம்..

முதலில் பணி ஏற்பவர் தான் senior என கிடையாது...


( TRB ranking படி தான் seniority) 

( different subjects ஆக இருந்தாலும்)


அடுத்த மாதம் சரி செய்து எழுதி விடலாம்... 

PG/PD/Computer instructor Gr 1 எல்லாம் ஒரே தொகுதி தான்... 


தற்போதைக்கு இவை மட்டுமே...


 *இனி வரும் நாட்களில்* ...


7) IFHRMS ID create செய்ய வேண்டும்...

தற்போது IFHRMS ID create செய்யும் போதே CPS number generate ஆகி விடும் ( தனியே CPS விண்ணப்பிக்க தேவையில்லை).

( ஏற்கனவே அரசு பணியாளர் எனில் அதே number பயன்படுத்தி கொள்ளலாம்) 


8) Bank account வேண்டும் ( GOVT MOU signed bank ( SBI/BOB/ IOB / canara Bank/ etc.. ) ஆக இருப்பது நன்று.. insurance coverage கிடைக்கும் ... 

Front page xerox copy needed.


9) PAN , Aadhar, family details, nominee, education qualification details... Xerox copy வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் ( IFHRMS I'd create செய்ய தேவைப்படும்)


10) spouse already govt employed எனில் NHIS deduction வேண்டாம்... 


இல்லை என்றால் NHIS deduction IFHRMS இல் செய்து விடலாம்.

New card க்கு கருவூலத்தில் விண்ணப்பிக்க வேண்டும் ( பிடித்தம் இப்போதே செய்யலாம் NHIS Card/number வந்த பிறகு தான் பிடித்தம் என்று இல்லை)


11) pay பெற்றுத்தர தனி order எதுவும் வராது... 

16/2/26 முதல் ஊதியம் பெற்று வழங்கலாம்...


12) தொழில் வரி இந்த முறை (2025-26) வேண்டாம்...


13) 18/2/26 சென்னை induction programme உள்ளது...


SR opening...

Genuineness....

IFHRMS new ID creation... 

சார்ந்த பதிவுகள் ஒவ்வொன்றாக வரும் நாட்களில் பகிர்கிறேன் 😊



சிலருக்கு ஏற்கனவே பள்ளி சூழல் தெரிந்து இருக்கும்...

பலருக்கு இது முதல்/ *புதிய அனுபவமாக* இருக்கலாம்...


அரசுப் பணி பல்வேறு கனவுகளுடன் *அவர்கள் *பணி ஏற்பு* செய்கிறார்கள் 💐💐💐..


புதிய சூழ்நிலையில் அவர்கள்....


அவர்களுக்கு 

வழிகாட்டி நல்வழியில் அன்புடன் கொண்டு செல்வது நமது அனைவரின் கடமையாகும் 👍🙏...


தீபாவளிக்கு / ஊர் திருவிழாவிற்கு மட்டுமே புத்தாடைகள் பெறும்

பல  குழந்தைகளைப் போல..

🤪


பல பள்ளிகளில் புதிய " *நியமனம்* " என்றால் மட்டுமே எங்களுக்கு 

ஆசிரியர்கள் கிடைப்பார்கள்

என *ஏங்கிய* 

நமது குழந்தைகளுக்கு


 *புதிய ஆசிரியர்கள்* கிடைத்து உள்ளார்கள் 🤗...


 *வாழ்த்துகள்* .....


நாம் அவர்களுக்கு சிறப்பாக வழிகாட்டுவோம்

அவர்கள் நமது குழந்தைகளை " *சிறப்பாக வழி* *நடத்துவார்கள்* "...


 *அதிகாரம்* மிகக் குறுகிய எல்லை உடையது...


ஆனால் *அன்பு*  எல்லை அற்றது 😊


மகிழ்வுடன்....

 *க.செல்வக்குமார்* 

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம்

14/2/26


PGTRB Appointment Order Ceremony - DSE Proceedings

 

PGTRB பணிநியமன ஆணை வழங்கும் விழா 13.02.2026 அன்று நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


PG TRB Appointment Order Ceremony to be held on 13.02.2026 - Proceedings of the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு - முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

 


முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்


பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் , நாள் : 02-02-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


தமிழ் பண்டிதர் பயிற்சி (TPT) பெற்றவர்களுக்கு விதித்தளர்வு மேற்கொண்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணிநியமன ஆணை வழங்க அனுமதித்து அரசாணை வெளியீடு


தமிழ் பண்டிதர் பயிற்சி (TPT) பெற்றவர்களுக்கு விதித்தளர்வு மேற்கொண்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணிநியமன ஆணை வழங்க அனுமதித்து அரசாணை (நிலை) எண்: 268, நாள் : 20-11-2025 வெளியீடு


Government Order G.O.  (Ms) No.: 268, Dated: 20-11-2025


Government Order issued to relax rules and issue appointment orders as graduate teachers to Tamil Pandit Training (TPT) graduates


பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர் / வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர் (BT / BRTE) 2023ஆம் ஆண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வு மூலம் தெரிவு பெற்ற தமிழ் பண்டிதர் பயிற்சி (TPT) பெற்ற 8 பணிநாடுநர்களுக்கு விதித்தளர்வு மேற்கொண்டு தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக B.T. Assistant பணிநியமன ஆணை வழங்க அனுமதி வழங்குதல் வெளியிடப்படுகிறது. ஆணை


தமிழ் பண்டிதர் பயிற்சி (TPT) பெற்ற 8 பணிநாடுநர்களுக்கு விதித்தளர்வு மேற்கொண்டு தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக பணிநியமன ஆணை வழங்க அனுமதித்து அரசாணை வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




TNPSC மூலம் பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 167 பேருக்கு பணிநியமன ஆணைகள்

TNPSC மூலம் பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 167 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள்


 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 167 பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வழங்கி, வாழ்த்தினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள்




அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர்கள் நிரந்தரமாக நியமனம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர்கள் நிரந்தரமாக நியமனம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 


2,708 assistant professors to be appointed permanently in Government arts and science colleges - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



2708 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் உத்தரவு - TRB மூலம் விரைவில் தேர்வு செய்யப்படுவர் என தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட உள்ளனர். 


நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் தேர்வு - உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு. 


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட உள்ளனர் -   உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்



881 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் - அறிவிப்பு, காலிப் பணியிடங்கள் விவரம் & விண்ணப்பிக்கும் முறை வெளியீடு



881 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் - அறிவிப்பு, வழிகாட்டு நெறிமுறைகள், காலிப் பணியிடங்கள் விவரம் & விண்ணப்பிக்கும் முறை வெளியீடு 


881 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு விண்ணப்பம்


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 881 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க முடிவு; tngasa.org என்ற இணையதளம் மூலமாக அக்டோபர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


முன்பு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கும் போது, விண்ணப்ப எண்களை பதிவு செய்து கட்டண விலக்கு பெறலாம்; கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் - அமைச்சர் கோவி.செழியன் அவர்கள் அறிவிப்பு



>>> 881 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் - வழிகாட்டு நெறிமுறைகள் 



>>> மாவட்ட வாரியான காலிப் பணியிடங்கள் விவரம் 



>>> விண்ணப்பிக்கும் முறை 



கிராம உதவியாளர் நியமனம் : அதிகபட்ச வயது வரம்பு குறித்து வருவாய் துறை புதிய உத்தரவு

 



கிராம உதவியாளர் நியமனம் : அதிகபட்ச வயது வரம்பு குறித்து  வருவாய் துறை புதிய  உத்தரவு



பொது - 32

பி.சி, எம்.பி.சி, டி.என்.சி - 39, 

எஸ்.சி - எஸ்.டி , ஆதரவற்ற விதவைகளுக்கு 42 ஆண்டுகள் என வயது வரம்பு உயர்வு - கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



Revenue and Disaster

Management [Ser.8(1)] Department

Secretariat, Chennai-600 009.


Letter (Ms) No.636/Ser.8(1)/2025, Dated 18.09.2025

From

Tmt. P. Amudha, I.A.S.

Additional Chief Secretary to Government.

To

The Additional Chief Secretary/

Commissioner of Revenue Administration,

Chepauk, Chennai -600 005.

Sir,

Sub:

Public Service - Revenue and Disaster Management Department - Village Assistants - Rules to be followed for maximum age limit - Clarification - Issued - Regarding.

Ref:

1. G.O Ms.No.521, Revenue [Ser.7(2)] Department, dated 17.06.1998.

2. G.O.(Ms)No.91, Human Resources Management (S) Department, dated 13.09.2021.


I am directed to state that the post of Village Assistants is governed by Special Rules for the Tamil Nadu Village Assistants with effect from 01.06.1995 in the reference first cited.


2. I am directed to state that, regarding the age qualification for the post of Village Assistants, the following Rule/Provision to be considered:-

i. The provisions of the Special Rules will prevail over the provisions of the Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 as per Section 68 of the said Act.

ii. As per Section 20(8) of the above Act, the maximum age limit provided in the Special Rules shall not apply. But the maximum age limit prescribed in Section 20(8) of the Act shall apply.

iii. The qualification prescribed for the post of Village Assistant is"Appeared for the SSLC Examination" vide G.0.(Ms).No.266, Revenue and Disaster Management [Ser.8(1)] Department, dated 22.05.2025.

iv. As per the first proviso to Section 20(8) of the Act, the maximum age limit shall be increased by five years in respect of candidates belonging to Scheduled Castes or Scheduled Tribes or in respect of destitute widows of all castes, who do not possess a general educational qualification, which is higher than the minimum general educational qualification.

v. As per the second proviso to Section 20(8) of the Act, the maximum age limit shall be increased by two years in respect of candidates belonging to Backward Class Muslims, Backward Classes, Most Backward Classes or Denotified Communities, who do not possess a general educational qualification, which is higher than the minimum general educational qualification.

/P.T.0/

vi. Moreover, the maximum age limit has been increased by two years for COVID-19, vide G.O.Ms. No.91, Human Resources Management(S) Department, dated 13.09.2021. It has also been clarified that,the said increase of two years shall be applicable for direct recruitments made from 13.09.2021 to 12.09.2026 vide letter No.5871863/S/2023-1, Human Resources Management (S) Department,dated 28.04.2025.

3. In the above position, I am directed to state that the maximum age limit for direct recruitment of Village Assistant shall be as follows:-

Categories : Age limit prescribed in Special Rules (in years) / Age limit as per TNGS(CoS) Act,2016 (in years)  / Extension prescribed for COVID-19 (in years) / Total maximum age limit to be adopted (in years)


OC / GT  : 30 / - / 2 / 32

BC / MBC / DNC  : 35/ 2 / 2 / 39

SC / ST / Destitute Widow :  35 / 5 / 2 / 42


4. I am, therefore, directed to request you to instruct the position at para 3 above to the District Collectors to follow the same, while processing the recruitment for the post of Village Assistants.

5. This letter issued with the concurrence of the Human Resources Management Department, vide its U.O.No.Secy/3/2025, dated 18.09.2025.

Yours faithfully

for Additional Chief Secretary to Government


புதிதாக அரசுப் பணிகளில் நியமனம் பெறுவோருக்கு மகப்பேறு விடுப்பு அனுமதி தொடர்பான அரசாணை : G.O. (Ms) No: 164 , Dated: 25-10-2019

 

புதிதாக அரசுப் பணிகளில் நியமனம் பெறுவோருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்திருந்தால் 365 நாட்களில் குழந்தை பிறந்த நாள் முதல் தற்போது வரை உள்ள நாட்களைக் கழித்து விட்டு மீதமுள்ள நாட்களை மகப்பேறு விடுப்பாக அனுபவித்துக் கொள்ளலாம் - G.O. (Ms) No: 164 , Dated: 25-10-2019


புதிதாக நியமனம் செய்யப்பட்ட 2222 பட்டதாரி  ஆசிரியர்களில் யாருக்கேனும் ஓராண்டுக்குள் குழந்தை பிறந்திருந்தால் குழந்தை பிறந்த நாட்கள் முதல் தற்போது வரை கழித்து விட்டு  (365 நாட்களில்) மீதமுள்ள நாட்களை மகப்பேறு விடுப்பாக Maternity Leave அனுபவித்துக் கொள்ளலாம் என்பதற்கான அரசாணை (நிலை) எண்: 164 - P & AR நாள்:25.10.2019



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


புதிதாக நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்துரை - DSE செயல்முறைகள்

 

புதிதாக நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர்  வாழ்த்துரை - 20.09.2025 அன்று சென்னையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில்  பங்கேற்க பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணிநாடுநர்களுக்கு பாடவாரியாக பணிநியமன ஆணை வழங்கப்படும் இடங்கள் - DSE செய்திக் குறிப்பு



TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணிநாடுநர்களுக்கு பாடவாரியாக 03.09.2025 அன்று சென்னையில் பணிநியமன ஆணை வழங்கப்படும் கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் - DSE செய்திக் குறிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


5 Days Training to SGTs : SCERT Proceedings


புதிதாக பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி : SCERT இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 29-07-2025


5 Days Training to newly appointed Secondary Grade Teachers : SCERT Director Proceedings, Dated : 29-07-2025


காலை, மாலை தேநீர், மதிய உணவு, பயணப்படி (Actual Travelling Expenditure) வழங்கப்படும்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


புதிதாக பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு SGT EMIS ID Create செய்யும் முறை

 

புதிதாக பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு EMIS ID Create செய்யும் முறை 


புதிதாக பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு EMIS ID CREATE செய்யும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


ஏற்கனவே அவர்கள் TEMPORARY STAFF ஆக பணிபுரிந்து இருப்பின்‌ அதே ID யில் REGULAR STAFF என்று திருத்தம் மேற்கொண்டு பயன்படுத்தி கொள்ளலாம்.


SCHOOL LOGIN

STAFF 

STAFF LIST

ADD


Category

Teaching 


* Designation

Secondary Grade Teacher 


* Nature of appointment

Regular


இடைநிலை ஆசிரியர்கள் பணியேற்பின் பொழுது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை




இடைநிலை ஆசிரியர்கள் பணியேற்பின் பொழுது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை


இன்று (24/7/25) பணிநியமன ஆணை பெற்று  பணி ஏற்க உள்ள இடைநிலை ஆசிரியர்களை  வாழ்த்தி வரவேற்கிறோம்

💐💐💐💐💐💐💐💐💐


பணியேற்பின் பொழுது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியவை


அசல் மற்றும் நகல் ஒரு செட்


1) பணி நியமன ஆணை 

2) அனுமதி கடிதம் 

3) 10 & +2 சான்றிதழ்

4) D T Ed சான்றிதழ் 

5) TET சான்றிதழ் 

6) சாதிச் சான்றிதழ் 

7) வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழ் 

8) ஆதார் அட்டை 

9) PAN CARD

10) BANK PASSBOOK FIRST PAGE

11) Physical fitness certificate


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-09-2026

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்