கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Election லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Election லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அமெரிக்காவை ஆளப் போவது யார்? - கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி




நாளை வாக்குப்பதிவு நடைபெறும் அமெரிக்கத் தேர்தல் ஒரு பார்வை


அமெரிக்காவை ஆளப் போவது யார்? நாளை வாக்குப்பதிவு - கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடும் போட்டி


*✍️ உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவை ஆளப் போவது யார் என்பதை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


🔘  வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதில், இந்திய வம்சாவளியும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.


🔘 அமெரிக்காவில் அதிபர் தேர்தல் ஒவ்வொரு 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார். குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் தோல்வியை சந்தித்தார். பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதியுடன் முடிகிறது. இதற்கு முன்னதாக, அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடக்க உள்ளது.


🔘 இதில், அதிபர் ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகியதால் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். ஆரம்பத்தில் பைடன் களத்தில் இருக்கும் வரை, டிரம்ப்பின் கை ஓங்கியிருந்த நிலையில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் மாற்றப்பட்ட பிறகு நிலைமை மாறியது. டிரம்ப்புடனான நேரடி விவாதத்தில் கமலா ஹாரிசின் படபட பதில்கள் அமெரிக்க மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்தன. இதனால் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றார்.


🔘 எனவே கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக காணப்படுகின்றன. அவர் வெல்லும் பட்சத்தில் பல்வேறு சாதனைகளையும் படைப்பார். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர் வெள்ளை மாளிகையில் நுழைவார். இதுவரை 2016ல் ஹிலாரி கிளிண்டன் மட்டுமே பெண் வேட்பாளராக தேர்தலை சந்தித்துள்ளார். அதிலும் அவர் டிரம்ப்பிடம் தோற்றார். இதனால் கமலா ஹாரிஸ் வெல்லும் நிலையில், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரும் திருப்பமாக பார்க்கப்படும்.


🔘 மேலும், அமெரிக்க அதிபராகும் முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையும் கமலா ஹாரிசுக்கு கிடைக்கும். அதே சமயம் டிரம்ப்பை பொறுத்த வரையில் தொழிலதிபர்களின் ஆதரவை பெற்றுள்ளார். குறிப்பாக, உலக நம்பர்-1 பணக்காரர் எலான் மஸ்க், டிரம்ப்புக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால், ஆரம்பத்தில் கமலாவிடம் பின்தங்கிய டிரம்ப் பின்னர் கடும் போட்டியாளராக மாறியிருக்கிறார். எனவே டிரம்ப் வெல்வதற்கும் வாய்ப்புகள் இருப்பதால், இம்முறை அதிபர் தேர்தல் முடிவு கணிக்க முடியாததாகவே உள்ளது.


🔘 கிட்டத்தட்ட 18.65 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 4.5 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி தங்கள் வாக்கை செலுத்தி விட்டனர். தபால் மூலமாகவும் வாக்குகளை செலுத்தலாம். முதியவர்கள், தேர்தல் நாளன்று பணி நிமித்தம் காரணமாக பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் உள்ளிட்டோர் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதி மூலம் 81 வயதான அதிபர் ஜோ பைடனும் ஏற்கனவே தனது வாக்கை செலுத்திவிட்டார்.


🔘இத்தகைய வசதி தந்தும், கடந்த 2020ல் தான் கடந்த 100 ஆண்டில் அதிகபட்சமாக 66.6 சதவீத வாக்குகள் பதிவானது. இம்முறை கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவுவதால் வாக்கு சதவீதம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 5ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடக்கும். அதைத் தொடர்ந்து, உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். நள்ளிரவில் அல்லது அடுத்த நாள் அதிகாலையில் அமெரிக்காவின் 47வது அதிபர் யார் என்பது தெரியவரும்.


*இந்தியர்கள் யாருக்கு ஆதரவு?


இந்திய வம்சாளியான கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக வேண்டுமென்பதில் பெரும்பாலான அமெரிக்க வாழ் இந்தியர்கள் விருப்பம் கொண்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. கடந்த முறை டிரம்ப்புக்கு வாக்களித்த பலரும் இம்முறை கமலாவுக்குதான் தங்களின் வாக்கு என கூறி உள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 52 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


🔘 ஏஏபிஐ எனும் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, 55 சதவீத இந்திய அமெரிக்கர்கள் கமலா ஹாரிசுக்கு வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 26 சதவீதத்தினர் மட்டுமே டிரம்ப்பை ஆதரித்துள்ளனர். கார்னெகி எண்டோவ்மென்ட் எனும் மற்றொரு நிறுவனம் கடந்த மாதம் நடத்திய ஆய்வில், 61 சதவீத இந்தியர்கள் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், 32 சதவீத இந்தியர்கள் டிரம்ப்பை ஆதரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய பெண்களில் 67 சதவீதம் பேரின் ஓட்டு கமலாவுக்கு தான் என கூறி உள்ளனர்.


*1.4% கமலா முன்னிலை


கடந்த அக்டோபர் 30ம் தேதி நிலவரப்படி, அதிபர் தேர்தல் கணிப்பில், கமலா ஹாரிஸ் 1.4 சதவீத முன்னிலையில் உள்ளார். அவர் 48.1% மக்கள் ஆதரவை பெற்றுள்ளார். அதுவே டிரம்ப்புக்கு 46.7 சதவீத ஆதரவு உள்ளது. 5.2 சதவீத மக்கள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யவில்லை என புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. கணிப்புகளை பொறுத்த வரையில் கமலாவுக்கே வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.


* 7 போர்க்களங்கள்


பெரும்பாலான மாகாணங்கள் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி என இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளன. இதில் இழுபறி நிலவும் 7 மாகாணங்கள் போர்க்களங்களாக கருதப்படுகின்றன. இவையே பெரும்பாலும் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இந்த ஆண்டு அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் மற்றும் வட கரோலினா ஆகியவை போர்க்கள மாகாணங்களாக உள்ளன.


🔘 அரிசோனாவில் 11, ஜார்ஜியாவில் 16, மிச்சிகனின் 15, நெவாடாவில் 6, வடகரோலினாவில் 16, பென்சில்வேனியாவில் 19, விஸ்கான்சினில் 10 பிரதிநிதிகள் வாக்குகள் இருக்கின்றன. இம்மாகாணங்களில் கமலா ஹாரிசும் டிரம்பும் கூடுதல் கவனம் செலுத்தி பிரசாரம் செய்துள்ளனர்.


*தேர்தல் எப்படி நடக்கும்?


மற்ற குடியரசு நாடுகளைப் போல் அல்லாமல் அமெரிக்க அதிபர் தேர்தல் வித்தியாசமான முறையில் நடக்கும். இங்கு அதிபரும், துணை அதிபரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. எலக்ட்ரால் காலேஜ் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மக்கள் தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட பிரதிநிதிகள் வாக்குகள் (எலக்ட்ரால் காலேஜ்) இருக்கும்.


🔘 உதாரணமாக, கலிபோர்னியாவுக்கு 54 வாக்குகளும், டெக்சாஸ் மாகாணத்திற்கு 40 வாக்குகளும் உண்டு. மொத்தமுள்ள 50 மாகாணங்கள் மற்றும் தலைநகர் வாஷிங்டன் டி.சி. யை சேர்த்து 538 பிரதிநிதிகள் வாக்குகள் இருக்கும். இதில் 270 பிரதிநிதிகள் வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் அதிபராவார்.


🔘 வாக்காளர்கள் மாகாண அளவில் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து பிரதிநிதிகள் வாக்குகளும் வழங்கப்படும். இந்த தேர்தல் மூலமாக அதிபர் மட்டுமின்றி துணை அதிபர், 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் அவையில் 34 எம்பிக்கள், பிரதிநிதிகள் அவையில் மொத்தமுள்ள 435 எம்பிக்கள், 13 மாகாண ஆளுநர்கள் ஆகியோரும் தேர்வு செய்யப்படுவார்கள்.


*பல நாடுகளின் தலையீடு


அமெரிக்காவின் அதிபர் என்பவர் அமெரிக்க மக்களின் தலைவிதியை மட்டுமல்ல, உலக நாடுகளின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய சக்தி வாய்ந்தவர். அடுத்த அதிபர் யார் என்பதை பொறுத்துதான், இஸ்ரேல்-காசா போர், ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல், ஈரான் உரசல், சீனா, தைவான் விவகாரம் என பல்வேறு விஷயங்களின் தலையெழுத்து எழுதப்படும். டிரம்ப் அதிபராகும் பட்சத்தில் இஸ்ரேலின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும். பாலஸ்தீனர்களின் எதிர்காலம் இருண்ட காலமாகி விடும்.


🔘 ஈரான், வடகொரியா விவகாரத்தில் கடுமையான நிலைப்பாடுகள் எடுக்கப்படும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, அமெரிக்க அதிபர் தேர்தலில் இஸ்ரேல், ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகளின் உளவுத்துறைகள் பல்வேறு ரகசிய வேலைகளை செய்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. மக்களின் மனதை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கான தொழில்நுட்ப உதவியுடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் மறைமுகமாக தலையிடக் கூடும் என அறியப்படுகிறது.


வித்தியாசமான அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறை - தேர்தல் எப்படி நடக்கிறது?



 வித்தியாசமான அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறை -  தேர்தல் எப்படி நடக்கிறது?


உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், இம்மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் நிலையில், இதில் வித்தியாசமான முறை பின்பற்றப்படுகிறது. அது என்ன என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்.


அமெரிக்காவில் அதிபரும், துணை அதிபரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் “Electoral College” எனப்படும் செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அமெரிக்காவின் மக்கள் தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட பிரதிநிதிகள் வாக்குகள் இருக்கும். உதாரணமாக, கலிபோர்னியாவுக்கு 54 வாக்குகளும், டெக்சாஸ் மாகாணத்திற்கு 40 வாக்குகளும் உண்டு. 50 மாகாணங்கள் மற்றும் தலைநகரப் பகுதியான வாஷிங்டன் டி.சி. யை சேர்த்தால், மொத்தம் 538 Electoral College வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் அதிபராவார். வாக்காளர்கள் மாகாண அளவில் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். தேசிய அளவில் போட்டியிடும் வேட்பாளர்களை அல்ல.


அதாவது, எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும். உதாரணமாக, டெக்சாஸில் ஒரு வேட்பாளர் 50.1% வாக்குகளைப் பெற்றால், அவருக்கு அம்மாகாணத்தின் 40 வாக்குகளும் வழங்கப்படும்.


அதனால்தான், கடந்த 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் டிரம்பை விட 30 லட்சம் வாக்குகளை கூடுதலாகப் பெற்ற போதிலும், எலக்டோரல் காலேஜ் வாக்குகளை குறைவாகப் பெற்றதால் தோல்வியைத் தழுவினார்.


பெரும்பாலான மாகாணங்கள் ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி என இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளன. எனவே, இழுபறி நிலவும் சில மாநிலங்களிலேயே கூடுதல் கவனம் உள்ளது. இந்த மாகாணங்கள் ‘swing states’ என அழைக்கப்படுகின்றன. இவையே பெரும்பாலும் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.


இந்த ஆண்டு அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் மற்றும் வட கரோலினா ஆகியவை ‘swing states’-களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாகாணங்களில் கூடுதல் கவனம் செலுத்திக் கமலா ஹாரிசும் டிரம்பும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.


எலக்டோரல் வாக்குகளை இரண்டு வேட்பாளர்களும் சமமாகப் பெற்றால் பிரதிநிதிகள் மற்றும் செனட் உறுப்பினர்களும் வாக்களித்து அதிபரைத் தேர்வு செய்வர். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் 1824-ஆம் ஆண்டு நான்கு அதிபர் வேட்பாளர்களான ஆண்ட்ரூ ஜாக்சன், ஜான் குயின்சி ஆடம்ஸ், ஹென்றி க்ளே மற்றும் வில்லியம் க்ராஃபோர்ட் ஆகியோர் சம வாக்குகளைப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜான் குயின்சி ஆடம்ஸ் அதிக ஆதரவு பெற்று அதிபரானார்.


01.01.2025ன் படி புகைப்பட வாக்காளர் பட்டியல்களின் திருத்தம் - சிறப்பு முகாம் தேதிகள் Special Camp on Summary Revision of Photo Electoral Rolls - தலைமைத் தேர்தல் அலுவலர் கடிதம்...



தேர்தல்கள் - 01.01.2025ஐ தகுதித் தேதியாகக் கொண்டு புகைப்பட வாக்காளர் பட்டியல்களின் சிறப்புச் சுருக்கத் திருத்தம் - சிறப்பு முகாம் தேதிகள் - தலைமைத் தேர்தல் அலுவலர் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 Elections - Special Summary Revision of Photo Electoral Rolls with reference to 01.01.2025 as the qualifying date - Revisions Activitics - Special Campaign Dates - Commission's Approval -Communicatcd - Regarding.



PUBLIC (ELECTIONS.I) DEPARTMENT

SECRETARIAT, CHENNAI-600 009.


Letter No.19000/Ele-I/2024-25, Dated:01.10.2024


From

Thiru. Satyabrata Sahoo, I.A.S.,

Chief Electoral Officer &

Principal Secretary to Government.


To

All the District Election Officers.


Sir/Madam,

Sub: Elections - Special Summary Revision of Photo Electoral Rolls with reference to 01.01.2025 as the qualifying date - Revisions Activitics - Special Campaign Dates - Commission's Approval -Communicatcd - Regarding.


Ref:

1. From the Principal Secretary, Election Commission of India, Letter No.23/2024-ERS(Vol.IV), Dated:07.08.2024.

2. This Office Letter No.19000/Ele-1/2024-3, dated 16.08.2024.

3. From the Under Secretary, Election Commission of India, Letter No.23/TN/2025/SSR/SS.I, Dated: 25.09.2024.


******

I am invite attention to the reference 3rd cited and to state that the Election Commission of India has approved the proposal for the Schedule of Special Campaigns in connection with the Special Summary Revision of Photo Electoral Rolls, 2025 as follows:


S.No             Date                   Day

1.            09.11.2024           Saturday

2.            10.11.2024            Sunday

3.             23.11.2024          Saturday

4.             24.11.2024            Sunday


 In this connection, I am to request you to give wide publicity about this in your district, and also to ensure that adequate number of forms (i.e., 6, 6A, 6B, 7 and 8) are available in all the designated locations besides ensuring the presence of Booth Level Officers on the above days.


Yours faithfully,

for Chier Électoral Officer &

Principal Secretary to Government.


Copy to:

Shri.M.L.Mecna,

Under Secretary,

Election Commission of India,Nirvachan Sadan, Ashoka Road, New Delhi- 110 001.

The System Manager,

Public (Elections) Department,

Secretariat, Chennai-600 009.



வாக்காளர் சிறப்பு முகாம்


*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் 2024 ஆம் ஆண்டு நவம்பர்  09,10, 23 & 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.


*வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்:-


*09.11.2024 சனிக்கிழமை

*10.11.2024 ஞாயிற்றுக்கிழமை

*23.11.2024 சனிக்கிழமை

*24.11.2024 ஞாயிற்றுக்கிழமை


*ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் மற்றும் நீக்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில்  நடைபெற உள்ளது.

Anura Kumara Dissanayake Becomes President of Sri Lanka...



 இலங்கை அதிபராகிறார் அனுர குமார திசநாயக...


Anura Kumara Dissanayake Becomes President of Sri Lanka...


இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.


இதுவரை எண்ணப்பட்டவற்றில் 53.84% வாக்குகளைப் பெற்றார் அனுர குமார திசநாயக.


மொத்தம் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 16 மாவட்டங்களின் முடிவுகள் அறிவிப்பு.


16 மாவட்ட தேர்தல் முடிவுகளில் அனுர குமார திசநாயக அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.


இலங்கையின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக அதிபராகிறார்.


இலங்கை அதிபராகிறார் அனுர குமார திசநாயக.. தமிழர் - சிங்களர் ஒற்றுமை குறித்து முதல் வாக்குறுதி!


இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதும் முதல் அறைகூவலாக சிங்களர் - தமிழர் ஒற்றுமை குறித்து வாக்குறுதி அளித்துள்ளார்.



இலங்கை அதிபர் தேர்தல் - இடதுசாரி தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி - நாளை காலை பதவியேற்பு...


இந்தியாவின் மிக நெருக்கமான அண்டை நாடாக இருந்து வரும் இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு 38 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர்.


குறிப்பாக சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுரா குமார திஸநாயக, ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச, தமிழர்கள் தரப்பு வேட்பாளர் அரியநேத்திரன் உள்ளிட்டோர் இடையே போட்டி நிலவி வந்தது. எனினும், யாரும் எதிர்பார்க்காத விதமாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுரா குமார திஸநாயக அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்க ஆரம்பித்தார்.


வாக்கு எண்ணிக்கை முடிவில் அநுரா குமார திஸநாயக 39.52 சதவிகித வாக்குகளும், சஜித் பிரேமதாச 34.28 சதவிகித வாக்குகளும் பெற்றிருந்தனர். தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 2ஆம் விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முடிவில் அநுரா குமார திஸநாயக வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. நாளை காலை 9 மணிக்கு அவர் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.


இதனையடுத்து அநுரா குமார திஸநாயக வெளியிட்ட அறிவிப்பில், “நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்த புதிய தொடக்கத்தின் அடித்தளம் ஆகும். நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையில் இருந்து எழும். ஒன்றிணைந்து இலங்கையின் வரலாற்றை மீண்டும் எழுத தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.



அனுர குமார திசநாயக்க இலங்கையின் அனுராதபுரத்தில் 1968-ல் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இலங்கையில் மாற்றம் தேவை என்று கூறி ஊழல் ஒழிப்பு கொள்கைகளை முன்னெடுத்தார். ஏகேடி என அழைக்கப்படும் இவர், 1987ஆம் ஆண்டு முதல் ஜனதா விமுக்தி பெருமுனாவில் இணைந்து தற்போது அதன் தலைவராக உள்ளார்.



2019 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் 3.16 சதவிகித வாக்குகளை பெற்றார். கடந்த 2022ல் இலங்கையில் பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


How will preferential votes be counted in Sri Lanka's President election? A simple explanation...




 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் விருப்ப வாக்குகள் எவ்வாறு கணக்கிடப்படும்? எளிய விளக்கம்...


இலங்கையின் 9வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு செப்டெம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. நாட்டின் 2.2 கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 1.7 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.


இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை. அடுத்து என்ன நடக்கும்? புதிய ஜனாதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்?


இலங்கையில் 1982-ஆம் ஆண்டு முதல் 8 ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.


ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக ஆட்சி செய்துள்ளனர்.


கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பின் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.


1982-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எவரும் 50% க்கும் குறைவான வாக்குகளைப் பெறவில்லை என்பது இலங்கை தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வு.


வரலாற்றை உற்று நோக்கும் போது, ​​இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். 1994 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 62.28%.


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் யார்?

தற்போது இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்ரமசிங்கே இந்த ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.


அவர் 1977-ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தற்போது இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சஜித் பிரேமதாச, சமகி ஜன பலவேகய கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன்.


சஜித் பிரேமதாச 2000 -ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அதே வருடத்தில் நாடாளுமன்றத்திற்கு தேர்வான அநுர குமார திஸாநாயக்க, தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.


இலங்கையின் புதிய அதிபர் தேர்தல் ; யார் இந்த அனுர குமார திசநாயக்க? 


அனுராதபுரத்தில் 1968-ல் எளிய குடும்பத்தில் பிறந்தவர்.


இலங்கையில் மாற்றம் தேவை, ஊழல் ஒழிப்பு கொள்கைகளை முன்னெடுத்தவர் ஏகேடி எனப்படும் அனுர குமார திசநாயக்க.


1987ஆம் ஆண்டு முதல் ஜனதா விமுக்தி பெருமுனாவில் இணைந்து தற்போது அதன் தலைவராக உள்ளார்.


2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 3.16% வாக்குகளை பெற்றார்.


கடந்த 2022-ல் இலங்கையில் பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது, மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார்.


16 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் தவிப்பு.


சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என முழக்கத்தை அழுத்தமாக சொன்னார்.


இலங்கை பொதுஜென பெருமுனாவின் மீதான அதிருப்தியை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றபோது ஏகேடிக்கு பெரியளவிலான ஆதரவு.


தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் தலைவராக உள்ளார்.


இலங்கையின் தென்பகுதியில் மட்டுமில்லாமல், தமிழர்கள் வசிக்கும் பகுதியிலும் அனுர குமாரவுக்கு அமோக ஆதரவு.


மாற்றத்தை முன்னிறுத்தி தேர்தலை கண்ட ஏகேடிக்கு அமோக வரவேற்பு.


இளைஞர்கள், சிங்களர்கள், தமிழர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மாற்றத்துக்கு வாக்களிப்பு.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு 38 வயதாகிறது. இவர் நாட்டில் இரண்டு முறை ஜனாதிபதியாக வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் ஆவார்.


2010-ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


எப்படி வாக்களிப்பது?

தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், அது தொடர்பான விதிகளை இலங்கை தேர்தல் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.


அதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களித்தால், அவரது பெயருக்கு முன்னால் `ஒன்று’ என்ற எண்ணை எழுத வேண்டும்.


இல்லையெனில், மிகவும் விருப்பமான வேட்பாளருக்கு ஒன்று(1) என்ற எண்ணை குறிப்பதன் மூலம், மற்ற வேட்பாளருக்கு `2’ ஐக் குறிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளது.


இதே வழியில், அவர்கள் விரும்பும் மூன்றாவது நபருக்கும் விருப்பத்தை குறிக்கலாம்.


வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான மூன்று வேட்பாளர்களை விருப்பப்படி தேர்வு செய்ய வாக்குச்சீட்டு அனுமதிக்கிறது. ஒருவேளை எந்த வேட்பாளரும் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறத் தவறினால், வெற்றி பெற்ற வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க இரண்டாவது வாக்கு எண்ணிக்கை பயன்படுத்தப்படுகிறது.


விருப்ப வாக்குகள் எவ்வாறு கணக்கிடப்படும்?

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை. அநுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் அதிக வாக்குகளைப் பெற்று, முதலிரு இடங்களில் பிடித்துள்ளனர்.


இனி, அனுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் பெற்ற விருப்ப வாக்குகள் எண்ணப்படும்.


அதாவது, இவர்கள் இருவர்கள் தவிர ஏனைய வேட்பாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள்.


நீக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு விழுந்த வாக்குகளில் அதாவது அந்த வாக்குச் சீட்டுகளில் அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாச இரண்டாவது முன்னுரிமை பெற்றுள்ளனரா என்பது சரிபார்க்கப்படும்.


அநுர குமார திஸநாயக்கவுக்கு இரண்டாவது முன்னுரிமை அளிக்கப்பட்டால், அநுர குமார திஸநாயக்க பெற்ற வாக்குகளுடன் அந்த எண்ணிக்கை சேர்க்கப்படும். சஜித் பிரேமதாசவுக்கு இரண்டாவது முன்னுரிமை என்றால், சஜித் பிரேமதாச பெற்ற வாக்கு எண்ணிக்கையில் அந்த எண்ணிக்கை சேர்க்கப்படும்.


மற்ற வேட்பாளர்களுக்கு விழுந்த வாக்குச் சீட்டில் அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாச இரண்டாவது முன்னுரிமையைப் பெறவில்லை என்றால், அந்த வாக்குச் சீட்டுகளில் இருக்கும் மூன்றாவது முன்னுரிமை பரிசீலிக்கப்படும். அதேபோல, அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாச மூன்றாம் முன்னுரிமையைப் பெற்றிருந்தால், அவை அந்தந்த வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கையோடு சேர்க்கப்படும்.


அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாசவுக்கு கூடுதல் விருப்பத் தேர்வுகள் இல்லை என்றால், அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.


சமநிலை ஏற்பட்டால், வெற்றியாளரைத் தேர்வு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும்.


General Elections to Lok Sabha, 2024 - Sanction of honorarium to the officers and staff in districts for having attended strenuous election work - Chief Electoral Officer Letter, Dated: 10.09.2024...

 


மக்களவைக்கான பொதுத் தேர்தல்கள், 2024 - தேர்தல் பணிகளில் கலந்து கொண்டதற்காக மாவட்டங்களில் உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் - தலைமைத் தேர்தல் அலுவலர் & அரசு முதன்மைச் செயலர் கடிதம் எண்.15950/2024-3, நாள் : 10.09.2024...


General Elections to Lok Sabha, 2024 - Sanction of honorarium to the officers and staff in districts for having attended strenuous election work -Requirement of funds - Called for - Chief Electoral Officer & Principal Secretary to Government Letter No.15950/2024-3, Dated: 10.09.2024...



PUBLIC (ELECTIONS.II) DEPARTMENT,

SECRETARIAT, CHENNAI-600 009.

e-mail / Letter No.15950/2024-3, Dated: 10.09.2024.

From

Thiru Satyabrata Sahoo, I.A.S.,

Chief Electoral Officer &

Principal Secretary to Government.


To

All District Election Officers (w.e.)


Sir / Madam,

Sub: Elections - General Elections to Lok Sabha, 2024 - Sanction of honorarium to the officers and staff in districts for having attended strenuous election work -Requirement of funds -Called for.

*******

I am directed to state that the proposal for sanction of honorarium to the officers and staff who have attended election work is now under consideration of the Government, in connection with the General Elcctions to Lok Sabha, 2024.

2. I am, therefore, to state that the details of basic pay as on 01.05.2024, for the categories of officers / staff members in your district as indicated in the Annexure, during the General Elections

Lok Sabha, 2024 required for sanction of honorarium are as follows:-

Officers & Staff members in the districts

i) District Returning Officers / Returning Officers of Parliamentary Constituencies / Assistant Returning Officers Parliamentary Constituencies District Revenue Officer(Elections)/ Personal Assistants(Elections) to Collectors / Special Tahsildars (Elections)


one month basic pay, subject to the maximum Rs.33,000/- (whichever less)


ii) Commissioners of Corporations / District Revenue Officers / Deputy Tahsildars (Elections) / Zonal Officers / Liaison Officers for Observers


one month basic pay, subject to the maximum Rs.33,000/- (whichever less)



>>> Click Here to Download Chief Electoral Officer & Principal Secretary to Government Letter No.15950/2024-3, Dated: 10.09.2024...



வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...


 வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...


Things to be observed while handing over the items to the Zonal Officer at each polling station after polling is over...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாக்காளர்களுக்காக புதிய வசதி அறிமுகம் - QUEUE AT POLLING STATION / வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை அறிய புதிய இணையதளம் அறிமுகம்...

 


வாக்காளர்களுக்காக புதிய வசதி அறிமுகம் - QUEUE AT POLLING STATION / வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை அறிய புதிய இணையதளம் அறிமுகம்...


வாக்காளர்களுக்காக புதிய வசதி அறிமுகம் - 


Click Here: https://erolls.tn.gov.in/Queue/


இந்த வலைத்தளத்தில் மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி எண் தேர்வு செய்து Submit கொடுத்தால் வரிசையில் காத்திருப்பவர்கள் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்...


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஆணை (Duty Order) வழங்கப்படும் நேரம் - மாவட்ட தேர்தல் அலுவலரின் செய்தி...

 

 


 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஆணை (Duty Order) வழங்கப்படும் நேரம் - மாவட்ட தேர்தல் அலுவலரின் செய்தி...


2024 பாராளுமன்ற பொதுத் தேர்தல் பணிக்கு வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தங்களுக்கான 3-வது பயிற்சி வகுப்பு (3rd Training) 18.04.2024 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு ஏற்கனவே பயிற்சி நடந்த இடத்தில் நடைபெறும். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஆணை (Duty Order) வழங்கப்படும். 


- மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர், கடலூர்.


--------


*பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024*


********* (*******) அவர்களே, தாங்கள் 2024 பாராளுமன்ற பொதுத் 

தேர்தலுக்கு 135 - கரூர் சட்டமன்ற தொகுதியில் PO - ஆக 

Team Code :  *** -ல் நியமனம் செய்யப்பட்டுள்ளீர்.  


எனவே, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் பணி புரிவதற்கு ஏதுவாக தேர்தல் பணி ஒதுக்கீடு ஆணையை நேரில் வந்து பெற்றுக்   கொண்டு உடன் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது.


தேர்தல் பணி ஆணை வழங்கும் இடம் : 

Govt. Arts College, Thanthoni.


நாள் : 18.04.2024


நேரம் : 9:30 am.


ARO/RDO Karur

135 Karur Assembly Constituency


தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு Show cause notice வழங்கப்படும் - முதன்மைக் கல்வி அலுவலர்...

 


முதன்மைக் கல்வி அலுவலகம், செங்கல்பட்டு


நாடாளுமன்ற தேர்தலில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணி ஆணை இணைப்பில் கண்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இது வரை தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வில்லை என தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது 


இவர்கள் மீது தேர்தல் கமிஷன் மூலம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இதை தவிர்க்கும் பொருட்டு உரிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நாளை துரைப்பாக்கம் D B JAIN கல்லூரியில் நடைபெறும் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் Show cause notice வழங்கப்படும்


முதன்மைக் கல்வி அலுவலர் செங்கல்பட்டு



>>> ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பெயர் பட்டியல்...


தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த முதுகலை ஆசிரியரின் குடும்பத்திற்கு ₹15,00,000 இழப்பீட்டுத் தொகை வழங்கி அரசாணை G.O. 1D. No. 167, Dated: 16-04-2024 வெளியீடு...


தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த முதுகலை ஆசிரியரின் குடும்பத்திற்கு ₹15,00,000 இழப்பீட்டுத் தொகை வழங்கி அரசாணை G.O. 1D. No. 167, Dated: 16-04-2024 வெளியீடு...



>>> Click Here to Download G.O. 1D. No. 167, Dated: 16-04-2024...

 

நாளை 17.04.2024 மாலை 6:00 மணிக்கு பிறகு சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை பகிர்ந்தாலும் தண்டனை - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை...



நாளை மாலை 6 மணிக்கு மேல் யாரும் பிரச்சாரம் செய்யக் கூடாது - தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்...


நாளை 17.04.2024 மாலை 6:00 மணிக்கு பிறகு சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை பகிர்ந்தாலும் தண்டனை - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை...



>>> செய்தி வெளியீடு எண்: 605 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



No one shall display to the public any election matter by means of cinematograph, television or other similar apparatus, like, FM Radios, WhatsApp, Facebook, Twitter, etc. This includes all electronic form of communication, including SMS and internet - Chief Electoral Officer Press Release No: 605, Dated: 16.04.2024...



>>> Click Here to Download Chief Electoral Officer Press Release No: 605, Dated: 16.04.2024...



குழு உறுப்பினர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும்...



வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கையேடு - 2023 (Handbook for Presiding Officer English)...

 


வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கையேடு - 2023 (English)...


Presiding Officer Handbook 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நாடாளுமன்றத் தேர்தல் 2024 - வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் - Timewise Check List...

 

 


 நாடாளுமன்றத் தேர்தல் 2024 - வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் - Timewise Check List...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் செயல்பாடுகள் - ஒருபக்க சுருக்க கையேடு...

 

 


2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் செயல்பாடுகள் - ஒருபக்க சுருக்க கையேடு...




>>> PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாக்குச்சாவடிக்கு வழங்கப்படும் பொருட்கள், படிவங்கள், உறைகள் - பட்டியல்...

 

 

 

வாக்குச்சாவடிக்கு வழங்கப்படும் பொருட்கள், படிவங்கள், உறைகள் - பட்டியல்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பூர்த்தி செய்யப்பட்ட தேர்தல் படிவங்கள் மாதிரிகள் - இராமநாதபுரம் - 2024...

 

 

 பூர்த்தி செய்யப்பட்ட தேர்தல் படிவங்கள் மாதிரிகள் - இராமநாதபுரம் - 2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Election - MASTER COVER - 6 குறித்த தகவல்கள்...

Election - MASTER COVER - 6 குறித்த தகவல்கள்...


 MASTER COVER - 6 (OTHER POLLING MATERIALS - COVER - ப்ளு கலர் (Blue) ( COVER  No. 6/1)  இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள (i) Candidate information Booklet, (ii) other unused forms, (iii) metal Seal of the presiding officer, (iv) Arrow Cross Mark rubber Stamp for making tender ballot papers, (v). Cup for setting the indelible ink இவற்றுடன் (vi) வாக்குச்சாவடி எண் Seal (vii) Mock poll slips Seal   ஆகிய அனைத்தும் வைத்து வழங்கிடவும்.


இவை தவிர இதர கையேடுகள் மற்றும் வாக்குப்பதிவு பொருள்கள் அனைத்தும் பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட துணிப்பையில் வைத்து ஒப்படைக்க வேண்டும்.


மேலும்  இதர படிவ அறிக்கைகள் கோரப்பட்டிருப்பின் அவற்றை மண்டல அலுவலரிடம் (தனி உறையிட்டு) வழங்கிடவும்.


- நன்றி.



Election - MASTER COVER - 5 குறித்த தகவல்கள்...

Election - MASTER COVER - 5 குறித்த தகவல்கள்...


 MASTER COVER - 5 (HAND B00KS, IINSTRUCTIONS - COVER - காக்கி கலர் (BROWN) ( COVER  No. 5/1)  இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள  Handbooks , instructions etc மற்றும் Indelible link Phials 2 அனைத்தும் (Cover எண்கள் 5/2, 5/3 என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும்...



Election - MASTER COVER - 4 குறித்த தகவல்கள்...

 Election - MASTER COVER - 4 குறித்த தகவல்கள்...


MASTER COVER - 4 ( NON  - STATUTORY COVER - மஞ்சள் கலர் (YELLOW )  ( COVER  No. 4/1)  இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள கவர்கள்  11  Cover கள் அனைத்தும் (Cover எண்கள் 4/2, 4/3, 4/4, 4/5 , 4/6, 4/7, 4/8, 4/9, 4/10, 4/11, 4/12  என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...