தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் தற்போது வரை அமலில் உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை.
தமிழகத்தில் டிசம்பர் 6ம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்க்கு கல்லூரியும், ஜனவரி 19ம் தேதி முதல் 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்க அனுமதியளித்தாலும் அரசு நிலையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருகிறது.
தற்போது தமிழக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா தொற்று காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகிறது. கும்பகோணம் தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கல்லூரியை சேர்ந்த 345 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக மருத்துவ மற்றும் நர்சிங் கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.