கோவிட் தடுப்பூசி & பூஸ்டர் - பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரின் செய்தி - COVID Vaccination & Booster - Message from Director of Public Health and Preventive Medicine...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கொரோனா பெருந்தொற்றால் அறிவிக்கப்பட்ட உலக சுகாதார அவரச நிலை முடிவுக்கு வந்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு (The World Health Organization announced that the global health emergency declared by the Corona pandemic has ended)...
கொரோனா பெருந்தொற்றால் அறிவிக்கப்பட்ட உலக சுகாதார அவரச நிலை முடிவுக்கு வந்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு (The World Health Organization announced that the global health emergency declared by the Corona pandemic has ended)...
கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார மையம் அறிவித்து இருக்கிறது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019 ஆண்டு இறுதியில் துவங்கியது. பின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கொடூர நோயின் தீவிரம் காரணமாக உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்தது.
முதல் அலை, இரண்டாவது அலை என்று உலக நாடுகளை கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்தது. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது, இந்த பாதிப்பில் இருந்து எப்படி விடுபடுவது என்ற பணிகளில் மருத்துவத் துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.
நீண்ட ஆய்வுக்கு பின் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் திறன் கொண்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின் இந்த மருந்துக்கான தட்டுப்பாடு அதிகரித்தது.
கொரோனா வைரஸ் வீரியம் தற்போது குறைந்து இருப்பது, உலக நாடுகளில் இதன் மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருப்பது என்று பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார மையம் அறிவித்து இருக்கிறது.
"எனினும், கொரோனா வைரஸ் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம். கடந்த வாரம் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டது. மேலும் இது எங்களுக்கு தெரிந்தவரையிலான கணக்கு மட்டும் தான்," என்று உலக சுகாதார மையம் ட்வீட் செய்துள்ளது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கோவிட்19 அதிகரிப்பு - வழிகாட்டுதல்கள் தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் செயலாளர் அனைத்து மாநிலங்களின் முதன்மைச் செயலாளர்களுக்கும் கடிதம் (Union Secretary for Health & Family Welfare & Secretary, DG, ICMR addressed Letter to all Addl. Chief Secretary/ Principal Secretary/Secretary of all State's/UT's regarding gradual but sustained in trajectory of COVID19 cases since mid-February 2023 & issued guidelines)..
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்- மத்திய அரசு.
கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஸ் பூஷன் அறிவுறுத்தல்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சுவாசப் பிரச்சனை அதிகம் உள்ளது.
கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சிறிது பரவத் தொடங்கியுள்ள நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்...
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சிறிது பரவத் தொடங்கியுள்ள நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்...
பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தல்...
கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக / தகுதியுள்ள / சிறப்பு விடுப்பாக அனுமதித்து அரசாணை (G.O. Ms. No. 62, Dated: 13-02-2023) வெளியீடு (Disaster Management - COVID 19 - Regulation of period of absence of Government employees as duty / eligible / special leave during the corona lockdown period)...
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி (Tamil Nadu Chief Minister Mr. M. K. Stalin has been confirmed to be infected with Corona virus)...
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் முதல்வர் அவர்கள். அனைவரும் முகக் கவசம் அணிந்து அணிந்து தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பாக இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தல்...
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் திருத்தம் - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு (Corrections in Corona Vaccine Certificates - Release of New Guidelines)...
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் திருத்தம் - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு (Corrections in Corona Vaccine Certificates - Release of New Guidelines)...
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (Chief Minister Stalin announces further relaxations of corona restrictions in Tamil Nadu) செய்தி வெளியீடு எண்: 310, நாள்: 02-03-2022...
"திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தவிர இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்" - தமிழ்நாடு அரசு
கொரோனா நோய் தொற்று - சிறப்பு தற்செயல் விடுப்பிற்கு 14 நாட்கள்தான் என்ற வரையறை கிடையாது. பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடையும் வரை மருத்துவ சான்றின் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் - என்பதற்கான மனித வள மேலாண்மைத் துறை அரசுக் கடிதம் எண்: 2058/அ. வி.3/ 2022-1, நாள்:09.02.2022 (Corona Infection - There is no Restriction of 14 days for Special Casual Leave - Government Letter No. of the Department of Human Resource Management for taking Special Casual Leave on the basis of Medical Certificate upto full recovery)...
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 3 மாதம் நிறைவு பெற்றாலே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் - பொது சுகாதாரத்துறை இயக்குனர் - பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பதிவு செய்யும் வழிமுறை (Officials involved in the election process can get a booster dose Vaccine after completing 3 months - Booster Dose Vaccine Registration Procedure - Director of Public Health and Preventive Medicine)...
அரசுப் பணியாளர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலோ/ குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் தொற்று பாதிப்பிற்குள்ளாகிய சூழலால் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க நேர்ந்தாலோ அவரது முழுமையான சிகிச்சை / வீட்டுத் தனிமைப்படுத்தல் காலத்தை சிறப்புத் தற்செயல் விடுப்பின்கீழ் அனுமதிக்கலாம் - வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை (G.O.(Ms)No.: 304, Dated: 17.06.2020) அரசாணை எண் 304, நாள்:17.06.2020 (If the Government Employee is suffering from COVID infection and is receiving treatment / if any of the family members happen to be in home isolation due to the infection then their complete treatment / home isolation period can be allowed under Special Casual Leave - Revenue & Disaster Management Department G.O.(Ms)No.: 304, Dated: 17.06.2020.)...
கொரோனா பாதிப்பு : அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்புத் தற்செயல் விடுப்பு உண்டா? யார் எத்தனை நாள்கள் வரை எடுக்கலாம்? என்னென்ன சான்றுகள் தேவை? (Corona Infection: Do Government servants and Teachers have Special Casual Leave? Who can take up to how many days? What evidence is needed?)
கொரோனா பாதிப்பு : அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு சிறப்புத் தற்செயல் விடுப்பு உண்டா? யார் எத்தனை நாள்கள் வரை எடுக்கலாம்? என்னென்ன சான்றுகள் தேவை? (Corona Infection: Do Government servants and Teachers have Special Casual Leave? Who can take up to how many days? What evidence is needed?)
வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை எண் 304 நாள்.17.06.2020-ன் படி ஊழியர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலோ / குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் தொற்று பாதிப்பிற்குள்ளாகிய சூழலால் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க நேர்ந்தாலோ அவரது முழுமையான சிகிச்சை / வீட்டுத் தனிமைப்படுத்தல் காலத்தை சிறப்புத் தற்செயல் விடுப்பின்கீழ் அனுமதிக்கலாம். இதற்குச் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மருத்துவர் / வட்டார மருத்துவ அலுவலரின் சான்று கட்டாயம்.
மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நடைமுறைகள் யாவும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் ஊரடங்கு திரும்பப் பெறப்படும் வரை பின்பற்றப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் கோவிட் பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு 25.03.2020 முதல் தற்போது வரை முழுமையாகத் திரும்பப்பெறப்படவே இல்லை. இடையிடையே தளர்வுகள் மட்டுமே பிறப்பிக்கப்பட்டது. மேற்படி பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழான பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் காலமே இது என்பதால் தற்போதும் மேற்படி அரசாணைப்படி சிறப்புத் தற்செயல் விடுப்பு உண்டு.
ஆசிரியர்-ஊழியர் பாதிக்கப்பட்டாலோ / குடும்ப உறுப்பினர் பாதிக்கப்பட்டாலோ / கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தாலோ அவரது விடுப்பு காலம் சிறப்புத் தற்செயல் விடுப்பாக அனுமதிக்கப்படும் என்பதே அரசாணை.
முதல் அலையின் போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபின் நோய்பாதிக்கப்பட்டவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட வீட்டுத் தனிமைப்படுத்தல் காலம் என்பது தமிழ்நாடு அரசின் வழிகாட்டல்படி அதிகபட்சமாக 14 நாள்கள். இதன் காலத்தை ஊழியரின் வசிப்பிடப் பகுதிக்கான மருத்துவ அலுவலரே முடிவு செய்வார். அதற்கான சான்றளிக்கும் பொறுப்பும் அவரைச் சார்ந்ததே. 14 நாள்கள்தான் அளிக்க வேண்டுமென்றும் இல்லை. நோயின் தாக்கத்தைப் பொறுத்து குறைத்தோ கூட்டியோ மருத்துவர் முடிவு செய்யலாம்.
ஒருவருக்கு / குடும்பத்தில் ஒருவருக்கு / பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் Positive Test Report பெற Sample அளித்த நாள் (Report வருவதற்கு முதல் நாள்) முதல் Negative வந்த நாள் வரை சிகிச்சை காலம். இதனை சிகிச்சை பெறும் மருத்துவமனை முடிவு செய்யும். Negative வந்த நாள் முதல் தனிமைப்படுத்தல் காலம் உண்டு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோருக்கு அவரின் Discharge Report-ல் வீட்டுத் தனிமைப்படுத்தல் காலம் குறிக்கட்டிருக்கும்.
மருத்துவமனைக்குச் செல்ல பரிந்துரைக்கப்படாது வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்போருக்கு Home Quarantine Days எத்தனை நாள்கள் தேவை என்பதை வட்டார மருத்துவ அலுவலர் மட்டுமே முடிவு செய்வார்.
குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் ஆசிரியர் / ஊழியருக்கான Home Quarantine Days எத்தனை நாள்கள் அளிக்கலாம் என்பதை வட்டார மருத்துவ அலுவலர் தான் முடிவு செய்ய முடியும். அதற்கான கடிதத்தையும் பணியேற்கும் நாளுக்கு முதல் நாள் அனைத்துத் தகவல்களையும் (Positive Date, Negative Date, அவர் அளித்த Home Quarantine Days) கூறி அவரிடமே பெற்றுக் கொள்ளலாம்.
மொத்தத்தில் கொரோனா பாதித்த ஆசிரியர் / ஊழியர் / குடும்ப உறுப்பினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நாள் முதல் சிகிச்சை முடிந்து வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க மருத்துவர் / வட்டார மருத்துவ அலுவலர் பரிந்துரைக்கும் நாள் வரை சிறப்புத் தற்செயல் விடுப்பு அனுமதிக்க வேண்டும். இதற்கான தீர்க்கமான காலவரையறை என்பது ஏதுமில்லை. ஏனெனில் ஒருவர் பாதிக்கப்பட்டு குணமாகி தனிமைப்படுத்தல் காலம் முடிந்து பணிக்குத் திரும்பும் நாளில்கூட குடும்பத்தில் மற்றொருவருக்கு தொற்று உறுதிசெய்யப்படக்கூடும். அந்நேர்வுகளில் மீண்டும் சிறப்புத் தற்செயல்விடுப்பு நீட்டிக்கப்படலாம்.
மேலும், தொற்று பாதித்த நபர் / குடும்பத்தில் யாரேனும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் சிறப்புத் தற்செயல் விடுப்பிற்கு தொலைபேசி வாயிலாகவே விண்ணப்பிக்கலாம். விடுப்பு முடிந்து பணியேற்கும் நாளில் Discharge Summary நகல் / வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க வட்டார மருத்துவ அலுவலர் பரிந்துரைத்த கடிதத்துடன் சிறப்புத் தற்செயல் விடுப்பிற்கான விண்ணப்பத்தையும் அலுவலகத்தில் சமர்ப்பித்துக் கொள்ளலாம்.
குடும்ப உறுப்பினர்களுக்கு கோவிட்-19 நோய் தொற்று காரணமாக திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு 14 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education granting 14 days Special Casual Leave to the Tirunelveli District Chief Educational Officer due to COVID-19 infection to family members) ந.க.எண்: 00021/அ1/இ4/2022-4, நாள்: 20-01-2022...
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 112, நாள்: 16-01-2022 (Holidays for 10th, 11th and 12th Standard students till January 31 due to the spread of Corona epidemic - Government of Tamil Nadu Press Release)...
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 112, நாள்: 16-01-2022 (Holidays for 10th, 11th and 12th Standard students till January 31 due to the spread of Corona epidemic - Government of Tamil Nadu Press Release)...
12-09-2021 முதல் 08-01-2022 வரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்ற நாட்கள் & ஈடுசெய் விடுப்பு நாட்கள் (Dates of 18 Mega Vaccination Camps held from 12-09-2021 to 08-01-2022 & Eligible Compensation Leave Dates Details)...
முகாம் நடைபெற்ற நாட்கள்:
1) 12-09-2021 (ஞாயிறு)
2) 19-09-2021 (ஞாயிறு)
3) 26-09-2021 (ஞாயிறு)
4) 03-10-2021 (ஞாயிறு)
5) 10-10-2021 (ஞாயிறு)
6) 23-10-2021 (சனி)
7) 30-10-2021 (சனி)
8) 14-11-2021 (ஞாயிறு)
9) 18-11-2021 (வியாழன்)
10) 21-11-2021 (ஞாயிறு)
11) 25-11-2021 (வியாழன்)
12) 28-11-2021 (ஞாயிறு)
13) 04-12-2021 (சனி)
14) 11-12-2021 (சனி)
15) 18-12-2021 (சனி)
16) 26-12-2021 (ஞாயிறு)
17) 02-01-2022 (ஞாயிறு)
18) 08-01-2022 (சனி)
தமிழ்நாட்டில் ஜனவரி 31ஆம் தேதி வரை கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (Corona infection control will be extended in Tamil Nadu till January 31 - Chief Minister Mr. MK Stalin's announcement) - செய்தி வெளியீடு எண்: 070, நாள்: 10-01-2022...
தமிழ்நாட்டில் ஜனவரி 31ஆம் தேதி வரை கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (Corona infection control will be extended in Tamil Nadu till January 31 - Chief Minister Mr. MK Stalin's announcement)...
பொது இடங்களுக்கு வருவோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிசெய்ய பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர் கடிதம் (Letter of the Director of Public Health and Preventive Medicine R.No.91298/ Immn/S1/2019, Dated: 18 .11.2021 - Public Health and Preventive Medicine - Immunization - COVID-19 Vaccination -Implementation of the Tamil Nadu Public Health Act,1939 and to ensure that all the places notified under Section 71, Sub Section (1) are occupied by the persons "who are vaccinated against COVID 19" so as to prevent the spread of infection from the infected persons to other persons-Instructions-Reg)...
பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர் அலுவலகம், சென்னை 6
R.No.91298 / Immn / S1 / 2019 , நாள்: 18 .11.2021
பொருள்: பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம் - நோய்த்தடுப்பு - கோவிட்-19 தடுப்பூசி - தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 இன் அமலாக்கம் மற்றும் பிரிவு 71, துணைப் பிரிவு (1) இன் கீழ் அறிவிக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் செல்பவர்கள் "கோவிட் 19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டு இருப்பவர்கள் என்பதை உறுதிப்படுத்துதல். "இதனால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து மற்ற நபர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க - வழிமுறைகள்...
பார்வை:
1. GO (Ms) எண்: 95, சுகாதாரம் மற்றும் குடும்ப நல (P1) துறை, தேதி: 13-03 -2020
2. GO (Ms) எண்: 96, சுகாதாரம் மற்றும் குடும்ப நல (P1) துறை, தேதி: 15-03-2020
3. GO (Ms) எண்: 97, சுகாதாரம் மற்றும் குடும்ப நல (P1) துறை, தேதி: 15 -03-2020
4. இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல் குறிப்பு தேதி: 26.02.2021.
5. அலுவலக குறிப்பாணை F.No.2079203 / 2021 / MoHFW இன் Imm, புது தில்லி.
6. இந்த அலுவலகம் R.No.91298 /Immn/S1/2019Dated:24.5.2021,10.06.2021, 24.06.2021, 28.07.2021 & 31.07.2021,09.07.2021 கூடுதல் செயலாளர், SC கடிதம் , தேதி: 20.08.21.
8. கோல் லெட்டர் D.O.No.2317579 / 2021 / ImmDated: 15-09-2021 இன் கூடுதல் செயலாளர், MoH & FW, புது தில்லி
13.3.2020 அன்று தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 இன் கீழ் கோவிட்-19 நோயை அறிவிக்கப்பட்ட நோயாக தமிழ்நாடு அரசு அறிவித்தது மற்றும் 15.3.2020 அன்று தொற்றுநோய் நோய்கள் சட்டம், 1897 இன் கீழ் கோவிட்-19 பரவுவதைத் தடுக்க சில விதிமுறைகளை அறிவித்தது. (குறிப்புகள் 1 முதல் 3 வரை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) மேற்கூறிய அறிவிப்பின் அடிப்படையில், அனைத்து குடிமக்களும், சமூக இடைவெளியைப் பேணுதல், முகமூடி அணிதல், கைகளைக் கழுவுதல் மற்றும் கூட்டத்தைத் தவிர்ப்பது போன்ற கோவிட் பொருத்தமான நடத்தையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ., அத்தியாயம் - II, பிரிவு -7 இன் கீழ், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்தின் இயக்குநர், அவ்வப்போது தேவைப்படும்போது, பொது சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எந்த உள்ளூர் அதிகாரியாலும் தத்தெடுப்பதற்கு பரிந்துரைக்கலாம். உள்ளூர் பகுதியில், அல்லது பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக: பிரிவு 71, உட்பிரிவு (1) இன் கீழ், அறிவிக்கப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த எந்த ஒரு நபரும் மற்ற நபர்களை அவரது இருப்பு அல்லது நடத்தை மூலம் தொற்று அபாயத்திற்கு வெளிப்படுத்தக்கூடாது -
(அ) ஏதேனும் தெரு அல்லது பொது இடம், அல்லது
(ஆ) ஏதேனும் சந்தை, திரையரங்கு அல்லது பிற பொழுதுபோக்கு அல்லது அசெம்பிளி இடம், அல்லது
(இ) ஏதேனும் பள்ளி, கல்லூரி, விளையாட்டு மைதானம் அல்லது அது போன்ற வேறு இடம், அல்லது
(ஈ) ஏதேனும் ஹோட்டல், விடுதி, தங்கும் இடம் வீடு, சௌல்ட்ரி, ஓய்வு இல்லம், அல்லது கிளப், அல்லது
(உ) ஏதேனும் தொழிற்சாலை அல்லது கடை.
• அத்தியாயம் - VII, பகுதி- I பிரிவு 76ன் கீழ், உட்பிரிவு (2) இன் உட்பிரிவு (b) பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குநருக்கு, துணைப் பிரிவின் விதிகளுக்கு உட்பட்டு தடுப்பூசி மற்றும் தடுப்பு தடுப்பூசிகளை கட்டாயமாக்க அதிகாரம் உள்ளது. 3) எனவே, தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 இன் மேற்கண்ட பிரிவுகளை நடைமுறைப்படுத்த அனைத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்களும் இங்கு அறிவுறுத்தப்பட்டு, மேற்கண்ட இடங்களின் உரிமையாளர் / குடியிருப்பாளருக்குத் தகுந்த தகவல் அளித்து, பிரிவு 71ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களும் உறுதிசெய்யப்பட்டுள்ளன. துணைப் பிரிவு (1) "COVID 19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட" நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, இதனால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து மற்ற நபர்களுக்கு தொற்று பரவுவதைத் தடுக்கிறது. மேலும் ஏதேனும் விளக்கங்களுக்கு இணை இயக்குனரை (தொற்றுநோய்) தொடர்பு கொள்ளலாம்.
டி.எஸ். செல்வவிநாயகம், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர், சென்னை-6.
பெறுதல்:
சுகாதார சேவைகள் அனைத்து துணை இயக்குநர்கள். நகர மருத்துவ அலுவலர், பெரு சென்னை மாநகராட்சி, சென்னை-3.
நகல்: 1. மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதாரப் பணிகள் இயக்குநர், சென்னை-6. 2. மருத்துவக் கல்வி இயக்குநர், கீழ்ப்பாக்கம், சென்னை-10.
நகல் சமர்ப்பிக்கப்பட்டது: 1. அரசாங்கத்தின் முதன்மைச் செயலாளர், H&FW துறை, சென்னை-9. 2.தி மிஷன் இயக்குனர், தேசிய சுகாதார பணி, சென்னை-6.
//உண்மை நகல்/ அனுப்பப்பட்டது//
R.No.91298/ Immn/S1/2019
Office of the Director of Public Health and Preventive Medicine ,Chennai 6 Dated: 18 .11.2021
Sub: Public Health and Preventive Medicine - Immunization - COVID-19 Vaccination -Implementation of the Tamil Nadu Public Health Act,1939 and to ensure that all the places notified under Section 71, Sub Section (1) are occupied by the persons "who are vaccinated against COVID 19" so as to prevent the spread of infection from the infected persons to other persons-Instructions-Reg Ref: 1. GO(Ms) No:95, Health and Family Welfare (P1) Department, dated: 13-03-2020 2. GO(Ms) No:96, Health and Family Welfare (P1) Department, dated: 15-03-2020 3. GO(Ms) No:97, Health and Family Welfare (P1) Department, dated: 15-03-2020 4. Guidance note issued by Government of India dated: 26.02.2021. 5. Office Memorandum F.No.2079203/2021/Imm of MoHFW, New Delhi. 6. Thisoffice R.No.91298 /Immn/S1/2019Dated:24.5.2021,10.06.2021, 24.06.2021, 28.07.2021 & 31.07.2021,09.09.2021 7. Letter from Additional Secretary, Gol, MISC/06, dated: 20.08.21. 8. Gol letter D.O.No.2317579/2021/ImmDated:15-09-2021of Additional Secretary, MoH& FW, New Delhi
Tamil Nadu State declared Covid-19 as notified disease under Tamil Nadu Public Health Act, 1939 on 13.3.2020 and notified certain regulations to prevent the outbreak of COVID-19 under the Epidemic Diseases Act, 1897 on 15.3.2020. (references 1 to 3 citied)
Based on above notification, all citizens were being instructed to follow COVID Appropriate Behavior such as maintainingsocial distance, wearing face masks, hand washing and avoiding crowd etc., In this regard, I wish to inform that as per Tamil Nadu Public Health Act, 1939., Under Chapter - II, Section -7, the Director of Public Health and Preventive Medicine may, from time to time as occasion requires, recommend for adoption, by any local authority, such measures as may be necessary for improving the Public Health administration in the local area, or for safeguarding the public health therein:
Under Section 71, Sub Section (1), No person who knows that he is suffering from a notified disease shall expose other persons to the risk of infection by his presence or conduct in -
(a) Any Street or Public place, or (b) Any Market, Theatre or Other place of entertainment or assembly, or (c) Any School, College, Playground or such other place, or (d) Any Hotel, Hostel, Boarding House, Choultry, Rest-House, or Club, or (e) Any factory or Shop.
Chapter - VII, Part- I Under Section 76, Clause (b) of Sub-Section (2) the Director of Public Health and Preventive Medicine has the power to make vaccination and preventive inoculations compulsory subject to the provisions of sub-section ( 3). Hence, all the Deputy Director of Health Services are here by instructed to implement the above said sections of the Tamil Nadu Public Health Act, 1939 by suitably informing the owner / occupier of the above places and ensure that all the places notified under Section 71, Sub Section (1) are occupied by the persons "who are vaccinated against COVID 19" so as to prevent the spread of infection from the infected persons to other persons. Any further clarifications Joint Director (Epidemics) may be contacted.
T.S. Selvavinayagam, Director of Public Health and Preventive Medicine, Chennai-6.
To: All Deputy Directors of Health Services. The City Medical Officer, Greater Chennai Corporation, Chennai-3.
Copy to: 1.The Director of Medical and Rural Health Services, Chennai-6. 2.The Director of Medical Education, Kilpauk, Chennai-10.
Copy submitted to: 1.The Principal Secretary to Government, H&FW Department, Chennai-9. 2.The Mission Director, National Health Mission, Chennai-6. // True Copy / Forwarded //
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
21-01-2025 - School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...