மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி நியமனம் செய்யப்படும் வாக்குச்சாவடி அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு மற்றும் ஆளுமையின் கீழ் வருகிறார்கள்.
தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் மட்டுமே தேர்தல் பணி ஆணை பெறப்பட்டு இருப்பின் தேர்தல் பணி செய்வதில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள்.
ஏனைய அனைத்து அலுவலர்களும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 இன் படி தேர்தல் பணியாற்ற கடமைப்பட்டவர்கள் மேற்பட்ட மேற்கண்ட அலுவலர்களை தவிர்த்து மாற்றப்பட்ட மருத்துவ காரணங்களுக்காக வேறு எவரேனும் தேர்தல் பணி ஆற்ற விலக்கு கோரும் பட்சத்தில் மாவட்ட மருத்துவ குழுவின் பரிந்துரையின் பரிந்துரையுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நேரடி விசாரணை மேற்கொண்டு பரிந்துரைக்கும் இனங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தேர்தல் பணியாற்றுவதில் இருந்து விலக்கு பெற ஆசிரியர்கள் பணியாளர்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளக்கூடாது என அனைத்து தேர்தல் பணியாளர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
உரிய காரணம் ஏதுமின்றி தேர்தல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் பணியாளர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.