கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாகம் எண் (Part Number), வரிசை எண் (Serial Number) மாற்றம் - தபால் வாக்குகள் (Postal Ballots) கேள்விக் குறி...?

 பாகம் எண் (Part Number), வரிசை எண் (Serial Number) மாற்றம் - தபால் வாக்குகள் (Postal Ballots) கேள்விக் குறி...?



திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் வழங்கப்பட்ட தேர்தல் பணி ஆணையில் பாகம் எண் மாறி வருவதால் தபால் வாக்குகள் செல்லாமல் போய் விடும் என ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் வரும் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தனியார் பள்ளியில் நேற்று முதல் துவங்கியது. இதில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. 


தேர்தல் பணிக்காக வழங்கப்படும் அரசு ஆணையில் வரக்கூடிய வாக்காளர் பட்டியலுக்கான பாகம் எண்ணும் ஒன்றாக இருக்க வேண்டும் ஆனால் தேர்தல் பணிக்காக வழங்கப்படும் ஆணையில் பாகம் எண் மாறி வருவதால் இவர்கள் அளிக்கக்கூடிய தபால் வாக்குகள் செல்லாத வாக்குகளாக மாற வாய்ப்புள்ளது. பயிற்சி வகுப்புக்கு வந்துள்ள 2,000 பேரில் 1,700க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்கான ஆணையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கேட்டதற்கு, உரிய நடவடிக்கை எடுத்து குறைகள் களையப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தபால் வாக்குகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Central Bank of India Recruitment 2025

Central Bank of India Recruitment 2025  வேலைவாய்ப்புகள் - Job Notification  ✅ காலி இடங்கள்: 266 Zone Based Officer- JMGS- I Posts ✅ கல்வி தக...