இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் விறுவிறுப்பாக வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். தங்களுடைய தொகுதியில் எந்தெந்த கட்சி எந்தெந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்ற தகவல் பரவலாக அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. பெரிய கட்சிகளைத் தவிர சிறிய கட்சிகள் எந்த வேட்பாளரை நிறுத்தியிருக்கின்றன, அவர்களைப் பற்றிய தகவல்கள்... இவை எதுவும் மக்கள் யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. உங்கள் தொகுதியில் இருக்கும் வேட்பாளர்கள், அவர்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமா?
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் வேட்பாளர்களின் தகவல்கள் பற்றிய இணையதளப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்...(Click Here)...)
இந்த இணையதளப் பக்கத்தில், உங்கள் மாநிலம் மற்றும் தொகுதி ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து அதன் கீழே இருக்கும் 'Filter' என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
அதன் கீழே உங்கள் தொகுதியில் எந்தெந்தக் கட்சி சார்பில் யார் யார் போட்டியிடுகிறார்கள் மற்றும் சுயேட்சையாகவும் யார் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்ற விபரம் இருக்கும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேட்பாளரது ப்ரொபைலில் கிளிக் செய்தால், அவர்களைப் பற்றிய விபரங்கள் அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும்.
அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவில் இருந்து, அவர்களைப் பற்றிய சொத்து விபரங்கள், அவர்கள் மேல் குற்ற வழக்குகள் பதியப்பட்டிருந்தால் அதனைப் பற்றிய விபரங்கள், மற்றும் அவர்களது குடும்பத்தின் மொத்தச் சொத்து விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.