கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பத்தாம் வகுப்பு முடிவு தெரியாமலேயே பிளஸ்-1 சேர்க்கைக்கு ஆர்வம் காட்டும் தனியார் பள்ளிகள்...

 தமிழகத்தில் கடந்த ஆண்டை போலவே நடப்பு ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களின் மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து இதுவரை எதுவித முடிவும் வெளியாகவில்லை. இதனிடையே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான பிளஸ் 1 மாணவர் சேர்க்கை ஜோராக நடந்து வருகிறது. இதனால் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் கூறியதாவது:

 தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் செய்முறைத் தேர்வு நிறைவு செய்யப்பட்டு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது மற்றபடி பத்தாம் வகுப்பு உட்பட பிற வகுப்பினர் அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு நடந்ததால் அந்த மதிப்பெண்கள் மாணவர்களின் பொதுத் தேர்வு மதிப்பெண்களாக வழங்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் அந்த தேர்வுகள் ஏதும் நடக்கவில்லை. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கும் விவகாரத்தில் குழப்பமான நிலையே நீடிக்கிறது. மேலும் மீண்டும் பரவி வரும் நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்தும் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் பல்வேறு மாவட்டங்களில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார்  பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அழகாபுரம் சூரமங்கலம் நெத்திமேடு அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை முற்றிலுமாக முடிந்து விட்டது. ஒரு சில பள்ளிகளில் வகுப்புகள் கூட நடந்து வருகிறது. அரசு எவ்வித வழிகாட்டுதலும் வழங்காத நிலையில் இவர்கள் தன்னிச்சையாகவும் , விதிகளை மீறி மாணவர்கள் சேர்க்கை நடத்தி வருகின்றனர். மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை வசூலிக்கவே, தற்போது  சேர்க்கை நடைபெறுகிறது. சேர்க்கைக்கு கடும் போட்டி என காரணம் காட்டி எளிதாக மாணவர் சேர்க்கையை முடித்து விடுகின்றனர். தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மாணவர் சேர்க்கையை தள்ளி வைப்பதே சிறந்தது. எனவே இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு பெற்றோர்கள் தெரிவித்தனர்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...