கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ADMISSIONS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ADMISSIONS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 4,628 சான்றிதழ் படிப்பு (Allied Health Care Certificate Courses) இடங்களுக்கு உடனடியாக சேர்க்கை நடத்திட, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

 

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,628 சான்றிதழ் படிப்பு (Allied Health Care Certificate Courses) இடங்களுக்கு உடனடியாக சேர்க்கை நடத்திட, மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


2025-26 கல்வியாண்டுக்கான B.Ed., மாணவர் சேர்க்கை குறித்த தகவல்

 


2025-26 கல்வியாண்டுக்கான B.Ed., மாணவர் சேர்க்கை குறித்த தகவல் 


1. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், 7 அரசு மற்றும் 14 அரசு உதவி பெறும் பி.எட் கல்லூரிகளில் மொத்தம் 2,040 பி.எட் இடங்கள் உள்ளன.


2. 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 9 ஆம் தேதியுடன் முடிவடைந்து, 2,000க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பிவிட்டன.


3. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (NCTE) விதிமுறைகளின்படி, ஒரு செமஸ்டருக்கு 100 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.


4. அதன்படி, பி.எட் முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


M.Ed., மாணவர் சேர்க்கை தொடக்கம்

 

M.Ed., மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் தொடக்கம்


M.Ed., admissions begin


அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட், (M.Ed) மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப Application பதிவு தொடக்கம் -  மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் குறித்து செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🔸M.Ed. சேர்க்கைகான விண்ணப்பங்கள் தொடக்கம்

 

விண்ணப்பிக்க: tngasa.in


M.Ed., மாணவர் சேர்க்கை தொடக்கம்


தமிழ்நாட்டில் 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 300 எம்.எட் இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் 11.08.2025 முதல் இணையவழியில் தொடக்கம்


www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியீடு, முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2025 அன்று முதல் தொடங்கப்படும்



குறைந்த பிறப்பு விகிதம் : குறையப் போகும் ஆசிரியர்களின் தேவை

 

குறைந்த பிறப்பு விகிதம் : குறையப் போகும் ஆசிரியர்களின் தேவை


2021-2022ல் பிறந்த குழந்தைகளை விட 2024- 2025ல் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளன. அவர்கள் பள்ளி  செல்லும் வயதை அடையும் பொழுது சுமார் ஒரு லட்சம் மாணவர் சேர்க்கை குறையும். ஒரு வகுப்புக்கு சராசரியாக 45 மாணவர்கள் என வைத்தாலும் சுமார் 2250 வகுப்புகளுக்கு மாணவர்கள் இருக்க மாட்டார்கள். குறிப்பாக ஒரு தனியார் பள்ளியில் ஒரு வகுப்பிற்கு மூன்று பிரிவுகள் என வைத்தால் தமிழ்நாடு முழுக்க 750 பள்ளிகளுக்கு மாணவர்கள் கிடைக்க மாட்டார்கள். இன்னும் ஐந்து வருடங்களில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் தேவை உடனடியாக பெருமளவு குறையும்.



தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4,00,000-ஐ கடந்து சாதனை

 


 தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4,00,000-ஐ எட்டி சாதனை


தமிழ்நாட்டில் நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. இதுவரை 4,00,364 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 76 ஆயிரம் கூடுதலாகும். இந்தக் கல்வியாண்டில் மழலையர் வகுப்பில் 32,807 பேர், முதலாம் வகுப்பு தமிழ் வழியில்-2,11,563 பேர், ஆங்கில வழியில் 63,896 பேர், 2 முதல் 8-ம் வகுப்பு வரை 92,098 பேர் சேர்ந்துள்ளனர்.


இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பல்வேறு வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு, கற்றல் செயல்பாடு உள்ளிட்ட அம்சங்களால் அரசு பள்ளிகள் மீது பெற்றோருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள், உயர் கல்வியில் இட ஒதுக்கீடு போன்றவற்றால் சேர்க்கை அதிகரித்துள்ளது.


தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி துறையில் 58 கல்வி மாவட்டங்கள் உள்ளன. முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் தென்காசி கல்வி மாவட்டம் 8,571 மாணவர்கள் எண்ணிக்கையுடன் முதலிடம் பிடித்துள்ளது. மிக குறைந்த அளவாக நீலகிரி கல்வி மாவட்டம் 1,022 மாணவர் சேர்க்கையுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.



முதலாம் வகுப்பில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ள முதல் 10 கல்வி மாவட்டங்கள் விவரம்: தென்காசி- 8,471, திண்டுக்கல்-8,000, திருச்சி - 7,711, கள்ளக்குறிச்சி - 7,554, திருவண்ணாமலை- 7,386, சிவகாசி- 6,809, திருப்பூர்- 6,777, திருவாரூர்- 6,592, கோயம்புத்தூர்- 6,423, திருப்பத்தூர்- 6,418. 


குறைந்த எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை செய்த பத்து கல்வி மாவட்டங்கள் விவரம்: நீலகிரி- 1,022, தேனி- 2,207, ஒட்டன்சத்திரம்- 2,480, தாராபுரம்- 2,594, பொள்ளாச்சி- 2,597, அரியலூர்- 2,625, பெரம்பலூர்- 2,636, வள்ளியூர்- 2,748, கரூர் - 3,077, சிவகங்கை- 3,223


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கை நீட்டிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கை நீட்டிப்பு


 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு – மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் @Govichezhian அவர்கள் தகவல்.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


அரசு கலை (ம) அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை விண்ணப்பம் 31.07.2025 வரை நீட்டிப்பு

 

 அரசு கலை (ம) அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 31.07.2025 வரை நீட்டிப்பு – மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தகவல் - செய்தி வெளியீடு எண்: 1613, நாள் : 15-07-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


B.Ed., admission application period Extended



அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நீட்டிப்பு - செய்தி வெளியீடு எண்: 1560, நாள் : 09-07-2025


Extension of application period for B.Ed. student admission - Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



B.Ed படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை கால அவகாசம்


அரசு கல்​வி​யியல் கல்​லூரி​களில் பிஎட் படிப்​புக்கு விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி நாள் ஜூலை 21 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர்​கல்​வித்​துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வி்ததுள்​ளார்.


இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நடப்பு கல்வி ஆண்​டில் அரசு மற்​றும் அரசு உதவி​பெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் பி.எட். மாணவர் சேர்க்​கைக்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஜூன் 20-ம் தேதி தொடங்​கியது. இதற்​கான கடைசி நாள் ஜூலை 9 (நேற்​று) முடிவடைந்​தது.


இந்​நிலை​யில், மாணவர்​கள் நலன் கருதி பிஎட் படிப்​புக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி நாள் ஜூலை 21 வரை நீட்​டிக்​கப்​படு​கிறது. எனவே, பிஎட் படிப்​பில் சேர விரும்​பும் மாணவர்​கள் www.tngasa.in என்ற இணை​யதளத்தை பயன்​படுத்தி வரு​கிற 21-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம்.


விண்​ணப்​பங்​கள் பரிசீலனை செய்​யப்​பட்டு தகு​தி​யுள்ள மாணவர்​களின் தரவரிசை பட்​டியல் ஜூலை 31-ம் தேதி வெளி​யிடப்​படும். விரும்​பும் கல்​லூரியை தேர்​வுசெய்​வதற்​கான கலந்​தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 9-ம் தேதி வரை நடை​பெறும். கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை ஆகஸ்ட் 13-ம் தேதி இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​படும்.


மாணவர்​கள் தங்​களுக்​கான கல்லூரி ஒதுக்​கீட்டு ஆணையை www.iwiase.ac.in என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்து தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட கல்​லூரி​யில் சேர்ந்து கொள்​ளலாம். அரசு மற்​றும் அரசு உதவி பெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் முதல் ஆண்டு மாணவர்​களுக்​கான வகுப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்​கும். இவ்​வாறு அவர்​ கூறி​உள்​ளார்​.



Adi Dravidar and Tribal Welfare Department Hostel Admission - Press Release

 

 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி / ஐடிஐ / டிப்ளமோ / கல்லூரி விடுதி சேர்க்கை  - செய்தி வெளியீடு


Adi Dravidar and Tribal Welfare Department School / ITI / Diploma / College Hostel Admission - Press Release




TNEA 2025 Random Number Released



பொறியியல் மாணவர் சேர்க்கை ரேண்டம் எண் வெளியீடு


TNEA 2025 Random Number Released



தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு.


அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


 மாணவர்கள் tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு தகவல்.


தவறான சான்றிதழ் - பெற்றோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை



தவறான சான்றிதழ் - பெற்றோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை


எம்பிபிஎஸ் - பிடிஎஸ் படிப்பில் சேர போலி சான்றிதழ், தவறான மதிப்பெண் பட்டியல், தவறான சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், போலி தூதரகச் சான்றிதழ்களை வழங்கினால் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்


படிப்பில் எந்த வருடத்தில் இருந்தாலும் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும் மேலும் 3 ஆண்டுகளுக்கு வேறு எந்தப் பாடத்தையும் தொடர தடை


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு





அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


Extension of deadline for applying for admission to government arts and science colleges


அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 30ஆம் தேதி வரை நீட்டிப்பு. 


விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் நேற்றுடன் முடிந்த நிலையில் மே 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு. 


அரசு கல்லூரிகளில் இதுவரை 2,25,705 பேர் விண்ணப்பம். 1,82,762 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.


TANUVAS UG ADMISSION 2025-2026 - FEE STRUCTURE - For B.V.Sc & AH, B.Tech courses



 TANUVAS UG ADMISSION 2025-2026 - FEE STRUCTURE - For B.V.Sc & AH, B.Tech courses (Food Technology / Poultry Technology / Dairy Technology)


கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் 

மாணவர் சேர்க்கை 2025-2026 

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் 

கட்டண அமைப்பு - பி.வி.எஸ்சி & ஏ.எச். - 5½ ஆண்டுகள் (4½ ஆண்டுகள் + 1 வருட இன்டர்ன்ஷிப்) எம்.எஸ்.வி.இ விதிமுறைகள் 2016 இன் படி & கட்டண அமைப்பு - பி.டெக் படிப்புகளுக்கு (உணவு தொழில்நுட்பம் / கோழிப்பண்ணை தொழில்நுட்பம் / பால் தொழில்நுட்பம்) - ஒவ்வொரு பாடத்திற்கும் தொழில்துறை பயிற்சி உட்பட 8 செமஸ்டர்கள்



TANUVAS UG ADMISSION 2025-2026

TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY

FEE STRUCTURE - For B.V.Sc & AH – 5½ years (4½ years + 1 year Internship) as per MSVE Regulations 2016 & FEE STRUCTURE- For B.Tech courses (Food Technology / Poultry Technology / Dairy Technology) – 8 Semesters including industrial training for each course



>>> Click Here to Download...


சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15,672 மாணவர்கள் சேர்க்கை



 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15,672 மாணவர்கள் சேர்க்கை


சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த 2 மாதங்களில் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


சென்னை மாநகராட்சி கல்வி துறையின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலை, 46 உயர்நிலை, 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன.


இந்த பள்ளிகளில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.


சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


இதுதொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சிப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 1.12 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் மார்ச் மாதத்துக்குப் பிறகு மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு மே 23-ம் தேதிக்குள் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மழலையர் வகுப்புகளில் மட்டும் 8 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2 மாதங்களில் இவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளது இதுவே முதல்முறை. விஜயதசமி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.


இந்த ஆண்டு 33 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதற்காக மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகைகள் குறித்தும், கல்வி தரம் மேம்பட்டிருப்பது குறித்தும், 45 ஆட்டோக்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


மழலையர் வகுப்புகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், பச்சை வண்ணப் பலகைகள், ஸ்மார்ட் போர்டு, விளையாட்டுடன் கல்வியில் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமயமான புத்தகங்கள் உள்ளிட்டவை உள்ளன. புத்தகப் பைகள், காலணிகள், அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. பள்ளி சீருடைகள், எழுது பொருட்கள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், காலை சிற்றுண்டி, பள்ளிக்கு 100 சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை சிற்றுண்டியுடன், மாலைநேர சிறப்பு வகுப்புகள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படுகிறது.


மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும், விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை கல்வி சுற்றுலாவுக்கும் அழைத்து செல்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Increase admission of 1st std students - DEE JD (Admin) Proceedings

 

முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க  தொடக்கக் கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்) உத்தரவு


Joint Director of Elementary Education (Administration) Proceedings to increase enrollment of first standard students


ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க  அறிவுரை வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்)  செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கு சேர்ந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல்


 அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கு சேர்ந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல்


தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கு 1,17,310 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்


1 ஆம் வகுப்பில் மட்டும் 1,05,286 பேர் சேர்ந்துள்ளனர்


மாணவர் சேர்க்கை தொடங்கியது முதல் ஏராளமானோர் ஆர்வமுடன் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்"


 - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல்



2025-26ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கையை அதிகபடுத்திய Top 10 DEOs பெயர் பட்டியல்

 

 2025-26ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கையை அதிகபடுத்திய Top 10 மாவட்டக் கல்வி அலுவலர்களின் DEO பெயர்ப் பட்டியல்


Top 10 DEOs name list for increased student enrollment for the academic year 2025-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை விவரம்

 

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை விவரம் 


Government School Admission Details for the Academic Year 2025-2026


 13 வேலை நாட்களில் 87,852 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்




2025-2026 - Student Admission in Government Schools - Details & Guidelines Required for Registration on EMIS Website

 

2025-2026 ஆம் ஆண்டு - அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - EMIS வலைத்தளத்தில் பதிவு செய்ய தேவையான விவரங்கள் & வழிகாட்டு நெறிமுறைகள்


2025-2026 - Student Admission in Government Schools - Details & Guidelines Required for Registration on EMIS Website











Instructions (வழிகாட்டு நெறிமுறைகள்)

This application form is only for the students under the following criterias

Students from Anganwadi

Students from Private schools (Pre KG - XII)

Students from other States/Countries

Direct New Admission


Note

This application form is not applicable for Transferred/promoted students from Government/Aided schools


இவ்விண்ணப்பப் படிவம் கீழ்க்கண்ட மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்

அங்கன்வாடியில் பயின்ற மாணவர்கள்

சுயநிதி பள்ளிகளில் Pre KG முதல் XII வகுப்பு வரை பயின்ற மாணவர்கள்

பிற மாநில அல்லது பிற நாட்டில் பயின்ற மாணவர்கள்

புதிய நேரடி மாணவர் சேர்க்கை


குறிப்பு

முந்தைய கல்வி ஆண்டில் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்றுள்ள மாணவர்களுக்கு இந்தப் படிவம் பொருந்தாது




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prize giving ceremony for CM Trophy sports competitions

  முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெறுதல் : மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் கடிதம் Prize giv...