கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேவையின்றி மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு...



 தமிழகத்தில் கொரோனா  மீண்டும் பரவும் அபாயம் அதிகரித்து வருவதால் எக்காரணம் கொண்டும் மாணவ மாணவியரை பள்ளிக்கு வரவழைக்க கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கீழ் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்களை வழங்க உள்ளதாகவும், அவற்றை பெற்றுக் கொள்ள மாணவ மாணவியர் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், உயர் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு வினாக்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்து மாணவ மாணவியரை பள்ளிக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் பள்ளி மாணவர்கள் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா  தீவிரமடைந்துள்ளதால் மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகள் , கட்டுரை போட்டி போன்றவற்றை காரணம் காட்டி எந்த பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.  பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்  தனியாக ஒரு உத்தரவையும் போட்டுள்ளார் இந்த உத்தரவு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...