கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜேஇஇ முதல் முதுநிலை நீட் வரை – ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் முழு பட்டியல்...

 நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஜேஇஇ Mains, முதுநிலை நீட் மற்றும் பல்கலை அளவிலான நுழைவுத் தேர்வுகள் போன்ற தேசிய அளவிலான பல தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய தேர்வுகள் குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம்.



முதுகலை நீட் 2021:

ஏப்ரல் 18 ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வுகள் நடைபெற இருந்தது. மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், இளம் மருத்துவ மாணவர்களின் நல்வாழ்வை மனதில் வைத்து தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தார். தேசிய தேர்வுகள் வாரியம் முதுநிலை நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டுகளை வெளியிட்ட நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் தேர்வு நடக்கும் புதிய தேதிகள் natboard.edu.in மற்றும் nbe.edu.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜே.இ.இ (Mains) ஏப்ரல் தேர்வு:

ஜே.இ.இ (Mains) ஏப்ரல் மாத தேர்வுகள் 27 முதல் 30ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா தொற்றின் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து உள்ளதால் ஜே.இ.இ (Mains) தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதிகள் 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக தேர்வுகள்:

உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் கோவிட்-19 தொற்று அதிகரித்து உள்ளதால் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (AMU) ஜூன் 20 முதல் ஜூலை 11 வரை திட்டமிடப்பட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளது. தேர்வுக்கான புதிய அட்டவணை சரியான நேரத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தகவல்களை amucontrollerexams.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.



UPCET 2021:

என்.டி.ஏ நிறுவனம் உத்தரபிரதேச ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு அல்லது யுபிசெட் 2021 தேர்வுகளை மே 16 முதல் ஜூன் 15ம் தேதி வரை தள்ளிவைத்துள்ளது. ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க மே 10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்:

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU) சட்டம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் கடமைகள் கல்வி (HRDE)க்கான ஆராய்ச்சி நுழைவு தேர்வை ஏப்ரல் 18ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த தேர்வுகள் நாடு முழுவதும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும். தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கட்டும்.


ஜே.எம்.ஐ பி.எச்.டி நுழைவுத்தேர்வு:

ஜாமியா மில்லியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) பிஎச்.டி நுழைவுத் தேர்வுகள், டெல்லியில் கோவிட்-19 தொற்று அதிகரித்து உள்ள காரணத்தால் ஏப்ரல் 20, 22, 24 மற்றும் 26ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் அடுத்த உத்தரவு வரும் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


CLAT தேர்வுகள்:

பொதுவான சட்ட சேர்க்கை தேர்வு (CLAT) 2021 இந்த வருடம் ஜூன் 13ம் தேதி நடத்துவதாக இருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தேர்வுகளை மே மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு தேர்வு வாரியம் ஆலோசனை செய்து வருகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...