கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்...

 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு , பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டு தோறும் மே மாதத்தில் நடத்தப்படும். ஆனால் , கரோனா பரவலால் நிகழ் கல்வியாண்டில் கலந்தாய்வு நடத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. 



ஆனால் , பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகிவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சில ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதன் விசாரணையில் பொதுமாறுதல் , பதவி உயர்வு கலந்தாய்வு ஆகிய இரண்டையும் சேர்த்து நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் , ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை மே மாதம் நடத்தப்படவுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ராமேஸ்வரம் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உரை

 ராமேஸ்வரம் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உரை ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில், ‘வணக்கம், என் அன்பு தமிழ் சொந்தங்களே' ...