கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க இயலாது - உயர்நீதிமன்றம்...

 அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க இயலாது என சென்னை உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. 


கல்வியின் புனிதத்தில் சமரசம் செய்யாமல் எந்த மாதிரியான தேர்வு நடைமுறையை மேற்கொள்ளலாம்? யூஜிசி,  தமிழக அரசு கலந்து ஆலோசிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்து, தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.


இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதனால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.


அதேபோல் கல்லூரியில் இறுதி செமஸ்டரை தவிர்த்து மற்ற செமஸ்டரில் அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது. மேலும், அரியர் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.


மாணவர்களிடையே இதற்கு வரவேற்பு இருந்தது. ஆனால் எதிர்ப்பும் கிளம்பியது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது. தேர்வுகளை நடத்த தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கோர்ட் தெரிவித்துள்ளது.


மேலும், தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்?, தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர்? என்பதை பல்கலைக்கழகங்கள் வாரியாக தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கு வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...