கடந்த 2017 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைப்படி துறைத் தேர்வுகள் வருடத்திற்கு இரு முறை அதாவது மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
துறைத் தேர்வுகளின் நடைமுறையினை சீரமைக்கும் பொருட்டு தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஜூன் 2021-ல் நடைபெறவிருக்கும் துறைத் தேர்வுகளில் கணினி வழித் தேர்வினை அறிமுகப்படுத்துகிறது. பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கணினி வழித் தேர்வினை அறிமுகப்படுத்துவதற்கிணங்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன :
* கொள்குறிவகை தேர்வுகளுக்கான துறைத் தேர்வுகள் கணினி வழித் தேர்வாக நடைபெறும்.
* விரிந்துரைக்கும் வகையிலான துறைத் தேர்வுகளைப் பொருத்தமட்டில் தற்போதுள்ள நடைமுறையான எழுத்துத் தேர்வு ( Manual Writen Examination ) வகையிலேயே தொடரும் கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகளை கட்டாயமாக ஒருங்கிணைத்து எழுத வேண்டிய துறைத் தேர்வுகளை பொருத்தமட்டில் தேர்வர்கள் கொள்குறிவகையிலான கணினி வழித் தேர்வு மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகளுக்கு தனித்தனியே தேர்வெழுத வேண்டும்.
* மேற்கூறிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளிலிருந்து உத்தேசமாக பின்வருமாறு நடத்தப்படவுள்ளது.
* கணினி வழி தேர்வுகள் 22.06.2021 லிருந்து 26.06.2021 வரை நடைபெறும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகள் 27.06.2021 லிருந்து நடைபெறும்
• கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகளை ஒருங்கிணைத்து எழுதவிருக்கும் தேர்வர்கள் கொள்குறிவகையிலான கணினி வழித் தேர்வு மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகள் அவற்றிற்கென ஒதுக்கப்பட்ட இரு வேறு தினங்களில் தேர்வெழுத வேண்டும்.
*நடைபெறவிருக்கும் துறைத்தேர்வினை எதிர்கொள்ளும் தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
>>> வரும் காலங்களில் கொள்குறிவகை துறைத் தேர்வுகள் கணினி வழியில் நடைபெறும் - TNPSC செய்தி வெளியீடு...