கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு - சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்...

 தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதன் மீது விரைவில் விசாரணை நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் அ. மாயவன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு தீர்மானத்தின்படி இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


இதுவரை பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வை தட்டிச் சென்றனர்.


ஒரு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற்று முதுகலை பட்டதாரி ஆசிரியராக செல்கிறார். அந்த பதவியில் அவர்   ஊதிய உயர்வு மற்றும் ஒரு வருடம் கழித்து தகுதிகாண் பருவம்  பெற்றுக் கொள்கிறார்.


ஆனால், அவர் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உள்ள  சீனியாரிட்டி பெற்றுக் கொண்டு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ஏற்கிறார்.


 இதனால் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாமலும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு  கிடைக்காமலும் அவதியுறுகின்றனர். மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.


ஊக்க ஊதிய உயர்வு பெற்றுக்கொண்டு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அதே ஊதியத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக மாறுகின்றனர்.


 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஊதியமும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஊதியமும் ஒன்றே. ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே வகிக்கவேண்டும். ஒருவர் இரண்டு பதவியில் பணியாற்றக் கூடாது என்பது  கோரிக்கை.


பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற்று முதுகலை பட்டதாரி ஆசிரியராக சென்றால் அடுத்த பதவி உயர்வு நிலையான மேல்நிலை பள்ளி  தலைமையாசிரியர் பதவி உயர்விற்கே செல்ல வேண்டும்.


ஆனால் ஒரே ஊதியத்தில் இரண்டு பதவிகளை வகிப்பது தவறு என்பதை சுட்டிக்காட்டி  மாநிலத் தலைவர் எஸ். பக்தவத்சலம் தலைமையில் 21 பட்டதாரி ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். 


விரைவில் இந்த வழக்கு நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


(வழக்கு WP NO: 8583/ 30.3.2021.)

சாமி

மாநில சட்ட செயலாளர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...