கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரபிக்கடலில்.. மே 16ல் உருவாகிறது "தக்டே" புயல்.. எவ்வளவு வேகத்தில் காற்று வீசும்? எங்கே செல்லும்?

 அரபிக்கடலில் மே 16ம் தேதி தக்டே என்ற புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கோடை காலம் வாட்டி எடுத்து வருகிறது. தமிழகத்திலும் அக்னி நட்சத்திரம் காரணமாக கடுமையான வெயில் அடித்து வருகிறது.


இந்த நிலையில் திடீரென தற்போது அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த தாழ்வு நிலை உருவாகும்.


எப்போது

மே 14ம் தேதி இந்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை பின் தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் மே 16ம் தேதி அரபிக்கடலில் மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


புயல்

இது அரபிக்கடலில் புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு தக்டே என்று பெயர் வைக்கப்படும். இது மியான்மர் மூலம் வைக்கப்பட்ட பெயர் ஆகும். தக்டே என்பது மியான்மரின் ஒரு வகை பல்லி இனம் ஆகும். அதே சமயம் இதன் தற்போதைய வலிமையை பார்த்தால், மணிக்கு இந்த புயல் 120 கிமீ வேகம் வரை செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


எங்கே

ஆனால் இந்த புயல் எங்கே கரையை கடக்கும் என்று சொல்லப்படவில்லை. பெரும்பாலும் குஜராத் அல்லது பாகிஸ்தான் அருகே செல்லும். இப்போதே இதன் பாதையை கணிக்க முடியாது என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.



தமிழகம்

ஒருவேளை இந்த புயல் கேரள கரையோரம் வந்தால் தமிழகத்தில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக பரப்பில் மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns