கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கு ஊதிய நீட்டிப்பு: அரசாணைகள் வெளியீடு...

 பள்ளிக் கல்வித்துறையில் 6156 தற்காலிக பணியிடங்களுக்கும், ஆசிரியர் பணியில்லா பணியிடங்களில் பணியாற்றும் 5000 பேருக்கும் மே மாத ஊதியம் வழங்க கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கவித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு, நகராட்சி, உதவி பெறும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உள்ள 6156  தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியல்லாத பணியிடங்களுக்கு இறுதியாக 2018 முதல் 2020 வரை உள்ள 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.



மேற்காணும் இந்த பணியிடங்களில் 1.1.2021 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி  இயக்குநர் அரசுக்கு கருத்துரு  அனுப்பியுள்ளார். மேலும் ஏப்ரல் மாதத்துக்கான ஊதிய கொடுப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.


இந்த பணியிடங்களுக்கு 2021 மே மாதத்துக்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதிய கொடுப்பாணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் கருத்துரு அனுப்பியுள்ளார். தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்ட தற்காலிக பணியிடங்களுக்கு 1.1.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், 6156 பணியிடங்களுக்கு 2021 மே மாதத்துக்கான ஊதியம் பெற்று வழங்க வசதியாக ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது.  



மேலும்,   பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு 31.12.2020ல் முடிவடைந்த நிலையில் அந்த பணியிடங்களில் பணியாற்றி வரும் 778 துப்புரவாளர்கள், 494 இரவுக்காவலர்கள் என மொத்தம் 1272 பணியாளர்களின் பணியிடங்களுக்கு மட்டும் 1.1.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு  ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை ஏற்று  அரசாணை 47ன் தொற்றுவிக்கப்பட்ட 2999 துப்புரவாளர் பணியிடம் மற்றும் 2001 காவலர் பணியிடம் என மொத்தம் 5000 பணியிடங்களில் 1270 பணியாளர்கள் 2021 மே மாதம் ஊதியம் பெறத் தக்க வகையில்  ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>> 5000 ஆசிரியரல்லா பணியிடங்களில் தற்போது பணிபுரியும் 1272 பணியிடங்களுக்கு (778 துப்புரவாளர் மற்றும்  494 இரவு காவலர்) மே -2021 மாதத்திற்கான  ஊதிய நீட்டிப்பு ஆணை...


>>> 6156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா தற்காலிகப் பணியிடங்களுக்கான மே-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...