பள்ளிக் கல்வி செயலர் முனைவர். உதயச்சந்திரன் அவர்களை சந்தித்து ஆசிரியர் கூட்டணி முறையீடு...



 முதல்வர் அவர்களின்   தனிப்பிரிவு முதன்மைச் செயலர் முனைவர். உதயச்சந்திரன் அவர்களை சந்தித்து முறையீடு



தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் *டாக்டர் அ.மாயவன் அவர்களின்* வழிகாட்டுதலின்படி  மாநிலத்தலைவர்     *திரு.சு. பக்தவச்சலம் அவர்கள்* சென்னை மாவட்ட தலைவர் *திரு. சாந்தகுமார் அவர்கள்* மாவட்ட செயலாளர் *திரு.சீனிவாசன் அவர்கள்*  உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு முதன்மைச்செயலாளர் *மதிப்புமிகு.முனைவர் உதயசந்திரன் அவர்களை* சந்தித்து  கோரிக்கைகளை முன்வைத்தனர்.


 *கோரிக்கைகள் விபரம்* 


 *1* . நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் *பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை ரத்து* செய்து அதற்கு பதிலாக ஆணையர் என்ற பதவியை உருவாக்கி அதில் ஒரு *IAS அதிகாரியை* நியமித்திருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டுகிறோம். 


 *2* .புதிய கல்விக் கொள்கையை புறக்கணித்து விட்டு *மாநில கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்து வதற்கு ஒரு ஆணையம்* அமைக்க வேண்டுகிறோம்


 *3* .மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நிவாரண நிதிக்கு *ஆசிரியர்கள்- அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை இந்த மாதமே* பிடித்தம் செய்திட அரசாணை பிறப்பிக்க வேண்டுகிறோம்.


 *4* கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த *ஜாக்டோ-ஜியோ* போராட்டத்தில் பாதிக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டும், பணி மாறுதல் பெற்றவர்களுக்கு எந்த பதவி உயர்வும் வழங்கப்பட வில்லை எனவும் அதோடு *பணி மாறுதல் செய்யப்பட்டவர்களை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றம் செய்யவில்லை எனவும் கோரிக்கை* வைத்தோம்.அதனை ஏற்ற *மாண்புமிகு முதல்வரின் தனிப்பிரிவு முதன்மைச் செயலாளர் *மதிப்புமிகு. முனைவர். உதயசந்திரன் அவர்கள்* உடனடியாக பள்ளிக் கல்வி துறையிடம்  தொடர்புகொண்டு விசாரித்தார். அவைகளை உடனடியாக சரி செய்வதாக நம்மிடம் தெரிவித்துள்ளார்


5. 2011க்கு பிறகு பணியில் நியமனம் செய்யப்பட்டு  *TET தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு* பணிவரன்முறை, தகுதிக்காண் பருவம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உட்பட எந்த பலன்களும்  பெறாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு *புதிய அரசு* விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதையும் விரைவில் செய்து தருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


தகவல்


திண்டுக்கல் மு.முருகேசன்

மாநில செய்தித் தொடர்புச் செயலாளர் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...