கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூட்டணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு சேர்க்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இந்த வேண்டுகோளினை வெளிப்படுத்துகின்றோம்


*AIFETO... 18.08.2026.*



*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.*


*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள தவெக அரசு 100 நாள்களை நிறைவு செய்து இருக்கிறது!. வரவேற்க வேண்டிய அம்சங்களை வரவேற்க வேண்டியவர்கள் வரவேற்று கொண்டாடி மகிழ்கிறார்கள்!. 60 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட இரண்டு கட்சிகளும் எதிர்கட்சிகள் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். சட்டப்பேரவையின் நிகழ்வுகளில் நீண்டகால அனுபவ கொள்முதலினைப் பெற்றவர்கள் அவர்கள்.. 100 நாள் சாதனைகளை தவிர்த்துக் கொண்டு விமர்சனங்களை  முன்வைக்கத்தான் செய்வார்கள். இது இயல்பான ஒன்றுதான்.*


 *ஆனால் எல்லோரும் ஒன்றை கருத்தொருமித்து வரவேற்றுப் பாராட்டுகிறார்கள்!.. சட்டப்பேரவையின் நிகழ்வுகளை நேரலையாக அன்றாடம் ஒளிபரப்புவது என்பது 60 ஆண்டுகால தமிழ்நாட்டு வரலாற்றில் நடைபெறாத நிகழ்வு என்பதை எவரும் மறுக்க முடியாது.*


 *நேரலையாக ஒளிபரப்பும் போது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை மக்களிடம் எளிதாக கொண்டு போய் சேர்ப்பதற்கான வாய்ப்பு அமையும். என்னதான் ஆளுங்கட்சியின் சாதனைகள் இருந்தாலும் விமர்சனங்களை எதிர்கொண்டு நிமிர்ந்து நிற்க முடியாது. ஆனால் முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அரசு நேரலையாகவே சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை  ஒளிபரப்பி வருகிறார்கள்.*


 *மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு ஜே.சி.டி பிரபாகர் அவர்களை அனைத்து கட்சிகளும் பாராட்டத்தான் செய்கிறார்கள். காரணம் அனைவருக்கும் வாய்ப்புகளை சமமாக அளித்து வருகிறார். அமைச்சர்களின் உண்மைக்கு மாறான பேச்சினையும், தகவலினையும் அவை குறிப்பிலிருந்து நீக்கி அறிவிக்கிறார்.*


 *எங்களைப் போன்ற மூத்த இயக்க தலைவர்களின் அனுபவங்களை கனிவான பார்வைக்காக கொண்டு வருகிறோம்!...*


 *வலம் வரும் வதந்திகள் பல நேரங்களில் உண்மைக்கு புறம்பாக அமைந்து விடுகின்றன. சில நேரங்களில் வதந்திகள் உண்மையாக நிலைத்து நிற்பதும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தவரையில் பன்முகத்தன்மை கொண்ட மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு ஆ.ராஜ்மோகன் அவர்களை கல்வித்துறைக்கு அளித்துள்ளார்கள். வரவேற்று நன்றி பாராட்டுகிறோம்!..*


 *பள்ளிக்கல்வி இயக்குனர் பதவிக்கு மீண்டும் முந்தைய  ஆட்சியாளர்கள் காலத்தில் இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலரை பள்ளிக் கல்வி ஆணையராக நியமனம் செய்தார்கள். ஒட்டுமொத்த ஆசிரியர்களின் உச்சம் தொட்ட போராட்டங்களின் காரணமாக பள்ளிக்கல்வி ஆணையர் பதவி ரத்து செய்யப்பட்டது. இது முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.*


 *ஆனால் எப்படி  வதந்தி பரவுகிறது என்று தெரியவில்லை!. மீண்டும் பள்ளிக்கல்வித்துறைக்கு இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர் ஒருவரை பள்ளிக்கல்வி ஆணையராக நியமனம் செய்ய இருப்பதாக பரவலாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் முந்தைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்துப் பார்க்கின்ற ஆய்வு மனப்பான்மை கொண்டவர். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி இயக்குனர் வரிசையில் தான் அந்தப் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். என்ற நடைமுறையே தவெக அரசிலும் தொடர வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் எதிர்பார்ப்பாகும்.*


 *இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர்களைப் பொறுத்தவரையில் நிர்வாக பொறுப்புகளை தொடர்ந்து நடத்தி வருபவர்கள்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள அரசு பொதுமக்களுக்கு நன்மைகள் செய்வது மட்டுமின்றி  ஆசிரியர்கள்,  அரசு ஊழியர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள அரசு என்பதையும் நாங்கள் நன்கறிவோம்!..*



*மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் 2.30 மணி நேரம் நிதிநிலை அறிக்கையினை தண்ணீர் கூட அருந்தாமல் படித்தார்கள். அதில் பள்ளிக்கல்வித்துறைக்கும் உயர்கல்வித்துறைக்கும் சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையினை விட குறைவாக ஒதுக்கீடு செய்துள்ளதை அறிந்து கொண்டோம்.*


 *சென்ற ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில்  செலவு செய்யப்படாத நிதியினை இந்த பட்ஜெட்டில் குறைத்துள்ளோம்.. என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சமாதானம் சொல்லி இருக்கிறார். அதேபோல ஓய்வூதிய திட்டத்தில் ஒதுக்கப்படுகிற நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. TAPS திட்டத்திற்கு 11 ஆயிரம் கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பொதுவாக 3000 கோடி நிதி உள்ளிட்ட இரண்டையும் சேர்த்து 14 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கீட்டினை குறைத்து இருக்கிறார்கள்.*


 *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் அரசு ஒரு காலமும்  இந்தப் பாதிப்பினை செய்யாது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.  ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பார்கள்!..*


 *முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் ஆட்சியினைப் பார்த்து கொண்டார்கள். ஆனால் நிர்வாகம் முழுவதையும் இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். அவர்கள் ஐந்து ஆண்டு காலமாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எதையும் செய்ய விடவில்லை. செய்யலாம் என்று நினைத்த முதலமைச்சரையும் தடுத்தார்கள்.   இந்த அதிகாரிகளால் தான் பொதுத் தேர்தலில்  50 தொகுதிகள் இழப்பார்கள் என்று மூன்று ஆண்டுகாலமாக  செய்தியாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் பேட்டிகள் அளித்து வந்தோம். அதுதான் நடந்துள்ளது.*


 *தற்போது முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அரசிலும் நிதிநிலை அறிக்கையில்  ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எந்த நன்மையும் நடந்துவிடக்கூடாது என்ற உள்நோக்கத்தில் இந்த நிதியினை அதிகாரிகள் குறைத்துள்ளார்கள் என்ற விமர்சனம் ஏற்பட்டுள்ளது.*


*அதுமட்டுமல்லாமல் முந்தைய அரசு போல் முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசின் மீதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வெறுப்பினை ஏற்படுத்தச் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தில் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. நிதிநிலை அறிக்கையினை படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகளில் நிதிநிலை சரி செய்யப்படும் என்று மாண்புமிகு  நிதிஅமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியில் தெரிவிக்கின்றார். ஆனால் நிதித் துறையிடமிருந்து தமிழ்நாட்டின்  நிதி நிலைமை சீராக இன்னும் 50 ஆண்டுகளாகும் என்று அவர்கள் செய்தியினை வெளியிடுகிறார்கள்.*


*இன்று 18.08.2026 சட்டப்பேரவையில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட  TAPS திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும் 50% பென்சன் கண்டிப்பாக வழங்கப்படும். பணிக்கொடை  வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற உறுதியினை தெரிவித்து இருக்கிறார்கள்.. வரவேற்று பாராட்டுகிறோம்!..*


 *இருந்தாலும்...*


*தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தினை பரிசீலித்து, மாண்புமிகு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை  ஆசிரியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்துவார்கள்  என்ற நம்பிக்கை உணர்வு எங்களுக்கு இப்போதும் இருக்கிறது. என்ற நம்பிக்கை உணர்வை வெளிப்படுத்துகிறோம்.*


 *1999இல் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 12,000 பேருக்கு 2026 ஜனவரி முதல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். PAY MATRIX 45 செல்லில் இருந்து 50 ஆக அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு உயர்த்தினால் மட்டுமே இனி அவர்கள் ஆண்டுதோறும் ஆண்டு ஊதிய உயர்வு பெற முடியும். இந்தக் கோரிக்கையினை  அக்கறையுடன் அரசு உடனடியாக செய்ய வேண்டிய கோரிக்கையாகும்.*


*ஆசிரியர் சங்கங்களின் சார்பில் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களை சந்தித்து கோரிக்கை விண்ணப்பத்தினை கொடுத்து விளக்கம் அளித்தும்  இதுவரை எட்டு மாதங்கள் ஆகியும் PAY MATRIX செல் அதிகரித்து வழங்கப்படாததால் ஆண்டு ஊதிய உயர்வே இல்லாமல் 12000 இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இல்லாமல் பெரிதும் பாதிப்படைத்துள்ளார்கள்.*


 *மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களுக்கும், புலனப் பதிவு மூலமாக அனுப்பி உள்ளோம்!.*


 *எந்த காரணத்தை முன்னிட்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்திற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி தான் தொடர வேண்டுமே தவிர!..  இந்திய ஆட்சிப் பணித்துறை அலுவலர் ஒருவரை பள்ளிக்கல்வி ஆணையராக நியமனம் செய்யும் நடைமுறையினை அறவே தவிர்த்து நீண்ட காலமாய் பள்ளிக்கல்வித்துறையில் இருந்து வரும் நடைமுறையினை பாதுகாத்திட வேண்டுமாய் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் உணர்வுகளின் அடிப்படையில் இதனை தெரிவித்துக் கொள்கிறோம்!.*


 *ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் அவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் அவர்கள், தமிழ்நாடு  பாடநூல் கழகத்தின் செயலாளர் என அனைவருமே  இந்திய ஆட்சிப் பணித்துறை சார்ந்த அலுவலர்கள்தான்..*


 *இவர்கள் அனைவரையும் கண்காணிக்கின்ற பொறுப்பு பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களிடம் உள்ளது.*


 *பள்ளிக்கல்வித்துறை ஆணையரை நியமனம் செய்வது வதந்தியாகவே இருக்கட்டும்!.. ஒருபோதும் உண்மையாக இருக்க வேண்டாம்!. என்று இயக்கத்தின் மூத்த தலைவர் என்ற முறையிலும் 54 ஆண்டு காலம் பொதுவாழ்வில்  அனுபவக் கொள்முதல் பெற்றவன் என்ற முறையில் தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம்!.*


 *முற்றிலும் ஊழலற்ற ஆட்சியை எந்நாளும்  தொடர்ந்து நடத்திக் காட்டுவோம்!.  என்ற மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களின் சூளுரையினை வரவேற்று பெருமிதம் கொள்கிறோம்!*


*24.08.2026 அன்று நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் அறிவிப்புகள் வெளிவரும் என்ற நம்பிக்கை உணர்வுடன்....*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி சென்னை- 600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com .*


ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு - ஆதரவா? அதிருப்தியா?

  



முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு ஆதரவினை கொண்டு வந்து சேர்த்ததா? அதிருப்தியினை கொண்டு வந்து சேர்த்ததா?


 *மாநாட்டினை நடத்திய ஒருங்கிணைப்பாளர்கள் சுய பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்!. போர்க்குண இயக்க உறுப்பினர்களின் உரிமை குரல்!.. ஆதார் அட்டையினைப் போல அவரவர் சங்கங்கள் தான் அடையாள முகவரி என்பதை ஏன் மறந்து போனார்களோ தெரியவில்லை?..*



*AIFETO... 10.02.2026.*


*தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண்:- 36/ 2001.*


 *பிப்ரவரி 8-ல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக சென்னை, நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு அரசுத் திட்டங்களினால்  மக்களிடம் பாராட்டு பெறுவதற்கான காரணமே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான்!.. நீங்கள் எங்களுக்கு!.. நாங்கள் உங்களுக்கு!... எப்போதும் பக்கபலமாக இருப்போம். 2.0 ஆட்சியிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறிடும்!.. என்று ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டில் முதலமைச்சர். உறுதியளித்துள்ளார்.*



 *புதிதாக எந்த அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிடவில்லை. பெட்டி இருக்கிறது!.. பூட்டு இருக்கிறது!.. சாவியும் இருக்கிறது!.. திறந்து பார்த்தால் நிதி இல்லை!..*


 *முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் என் பெயருக்கு முன்னால் கருணை இருக்கிறது... ஆனால் உங்களுக்கு கொடுப்பதற்கு என் பெயருக்கு பின்னால் இருக்கிற நிதி இல்லையே!.. என்பார்.*


 *ஆனால் அவர்கள் காலத்தில் தான் இந்தியாவில் முதன்முதலாக மத்திய அரசுக்கு இணையான ஊதியம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கினார்கள். வேலை வாய்ப்பாக பதிவு மூப்பு  அடிப்படையில்  ஆசிரியர்களை நியமனம் செய்தார்கள்.*


 *அதிமுக ஆட்சியில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,  என 55,000 பேரை 01.06.2006  முதல் ஒரே சமயத்தில் காலமுறை ஊதியம் வழங்கி அனைவரையும் பணி நிரந்தரப்படுத்தி ஆணை வழங்கினார்கள்.*



 *கருணைத்தொகையினை தவிர்த்து விட்டு போனஸ் என்று அறிவித்தார்கள்.*


 *ஈட்டிய விடுப்பினை பணமாக்கிக் கொள்ளலாம்!.. என்பதற்கும் அரசாணை வழங்கினார்கள்!.. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இல்லாத பதவி என்பதால் அவர்களுக்கு தேர்வு நிலை ஊதியம் ₹ 5400/- சிறப்பு நிலை ஊதியம் ₹ 5700/- என்பதை நிர்ணயம் செய்து அரசாணை வழங்கினார்கள்.*


*இறந்தவர்களை காடு சேர்ப்பதற்காக செலவிற்காக முதலில்  பத்தாயிரத்தை தொடங்கியவர். அறிஞர் அண்ணா அவர்கள் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு வழங்கிய ஊக்க ஊதிய உயர்வினை அவரது காலத்திலும் தொடர்ந்து வழங்கினார்கள்.*



*தமிழ் ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறலாம் என்று அவர் காலத்தில் தான் ஆணை கொண்டுவரப்பட்டது.*


 *மந்தண முறையை நீக்கினார்கள்.*


 *வேலை நியமன தடை சட்டத்தை நீக்கியவர்.*


 *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநாட்டில் தலைவர் கலைஞர் அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்கள்.. ஸ்டாலின் அவர்கள் ஆட்சியிக் காலத்தில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட 9 அறிவிப்புகளையும் வெளியிட்டார்கள்.*


 *கோவிட் பெருந்தொற்று  காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு,  ஈட்டிய விடுப்பு சரண் செய்து கொள்வது நிறுத்திவைப்பு ஆகியவற்றையெல்லாம் விடுவித்தது,  வேறெங்கும் இல்லாத புதிய திட்டமான அரசுப் பணிகளில் விபத்தில் உயிரிழக்க நேர்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய், இயற்கை மரணம் அடைந்தால் பத்து லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடாக தொடர்ந்து வழங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள்.*


 *பணியில் இருக்கும் போது மரணம் அடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை திருமண உதவித் தொகையாகவும், மேலும் உயர்கல்வி பயில 10 லட்சம் வரையில் நிதி உதவியும் வழங்குவதன் மூலம் நாட்டிற்கே வழிகாட்டி வருவதாகவும் தெரிவித்தார்கள்.*


 *அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து பத்து லட்சம் ரூபாயாகவும், மேலும் உயர் கல்வி பயில 10 லட்சம் வரை நிதி உதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்கள்.*


 *அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம் 10,000 ரூபாயில் இருந்துரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்கி உள்ளதாக தெரிவித்தார்கள். மேலும் அவர்களது ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்கள்.*


 *2003இல் அறிமுகப்படுத்திய புதிய  ஓய்வூதிய திட்டத்தினை 22 ஆண்டுகளுக்குப் பிறகு   ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய  திட்டத்தில் உள்ள அனைத்து சலுகைகளுடன் தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத்  (TAPS) திட்டத்தினை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.* 


*நிதிப்பற்றாக்குறைக்கு முதல் தவணையாக 13000 கோடி நிதியினை ஒதுக்கி உள்ளதாகவும், ஆண்டுதோறும் 13,000 கோடி நிதியினை TAPS திட்டத்திற்காக ஒதுக்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. என்று பெருமையாக தெரிவித்தார்கள்.*


 *ஆனால் 10% பங்களிப்பு தர வேண்டும் என்பது பற்றி முன்னுதாரணமாக முதலமைச்சர் எதையும் அறிவிக்கவில்லை.*


 *இந்தத் திட்டத்தை அறிவித்த உடன் இனிப்புகள் பரிமாறிக் கொண்டவர்களுக்கு வழக்கு மொழியில் இனிப்பூட்டிய  நிகழ்வினை மாநாட்டில் பொங்கி மகிழும் இதய உணர்வுடன் பரிமாறிக் கொண்டார்கள்.*


 *சில ஒருங்கிணைப்பாளர்கள் பேசுகிற போது கூட, மேலை நாடுகளிலும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மட்டுமே அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் அமல்படுத்தியதற்கு நன்றி பெருக்கினை தெரிவிக்கக்கூடிய அடையாளமாகத்தான் இந்த மாநாட்டினை நடத்துகிறோம்!.. பாராட்டு மலர்களை தெரிவித்துள்ளார்கள்!..*


 *நாமும் வரவேற்று மகிழ்கிறோம்!..*


 *ஆனால் இந்திய திருநாட்டில் உள்ள மேற்கு வங்காளத்தில் முதலமைச்சராக ஜோதிபாசு அவர்கள் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் இப்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய மம்தா பானர்ஜி அவர்கள் ஆட்சி காலத்திலும் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது... என்பதை ஏன் சொல்ல மறந்தார்கள்?.. என்று தெரியவில்லை!.*


 *ஆந்திர மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்ட சலுகைகளை பங்களிப்பு இல்லாமல் ஒரு வித்தியாசமான அணுகுமுறையுடன் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.*


 *5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தப்பட்டு ஆணை வழங்கி விட்டார்கள். மத்திய அரசின் ஓய்வூதிய ஆணையத்திடமிருந்து நிதியினை பெற முடியாமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்கள்.*


 *ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சுமார் ஒரு லட்சம் கோடி சிபிஎஸ் நிதியினை மத்திய ஓய்வூதிய  ஆணையத்திடம் இன்றும் செலுத்தப்படாமல், காப்பீட்டு நிறுவனத்தில் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நிறைவேற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை.*



 *கருத்துக்கணிப்பு..*



 *புதிய ஓய்வூதியத்திட்டத்தில் சேர்ந்திருக்கக் கூடிய 61/4 லட்சம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தினால் TAPS திட்டத்தினை எத்தனை பேர் வரவேற்கிறார்கள் என்றபதனை அரசு தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.*


 *ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு  மாநாடும் சில மாநில ஒருங்கிணைப்பாளர்களின் பாராட்டுரையும்..*


 *எதிர்க்கட்சிகள் சொல்வது போல திமுக மாநாடாகவே நடத்தினார்கள். முதலில் பேனரில் திமுக கொடியினை போட்டு வெளியிட்டு,  எதிர்ப்புகள் வந்த பிறகு அந்த பேனரை எடுத்து விட்டார்கள்.*


 *மாநில ஒருங்கிணைப்பாளர் ஒருவர் பேசும்போது அடுத்த ஆட்சியும் 2026 இல் முதல் அமைச்சர் அவர்கள் தலைமையில் தான் அமையப் போகிறது...  இன்னொரு ஒருங்கிணைப்பாளர் 2036 வரையில் நீங்கள் தான் முதலமைச்சர் என்று பகிரங்கமாகவே அறிவித்தார்.*


 *இன்னொரு ஒருங்கிணைப்பாளர் ஓய்வறியா உதயசூரியனே!.. நீங்கள் தான் நிரந்தர முதலமைச்சர்!.. என்று அறிவித்தார்கள்.*


 *ஆனால் கூடியிருந்த கூட்டமோ? ஏதும் அறியாதவர்கள் போல் அமர்ந்திருந்தார்கள்!.*


 *இதுவரையில் ஜாக்டோ ஜியோ என்ற பெயரில் கூட்டப்பட்ட கூட்டத்தில் சங்கங்களின் உறுப்பினர்கள் ஆதரவினை இழந்த கூட்டமாகத்தான் காணப்பட்டது.*


 *2003 ஜாக்டோ ஜியோ போராட்டத்தை நடத்தியவர்கள் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!..*


 *வீரம் செறிந்த இந்தியாவியே திரும்பிப் பார்க்க வைத்த உரிமை மீட்பு மாநாடு நடத்தி இருந்தால்  எழுச்சியாவது வந்து இருக்கும்.*


 *நன்றி அறிவிப்பு மாநாடு என்பது ஒரு விழாவில் தேசிய கீதம் பாடிவிட்டால் நிகழ்ச்சி நிறைவு பெற்றுவிட்டது என்பது போல... இனி கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ சார்பாக எந்த போராட்டத்தினையும் நடத்த வாய்ப்பு இல்லை!.. என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்த நிகழ்வுகளாகவே கருதுகிறார்கள்.*



 *தனிசங்கங்கள் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தலாம். ஆனால் ஆயத்த மாநாடு... கோரிக்கை மாநாடு நடத்திய கூட்டமைப்புகளில், நன்றி அறிவிப்பு மாநாடு  நடத்தியது முதன்முறையாக இந்த மாநாடு தான். இது கடைசி மாநாடாக அமைய வேண்டும்!.*



 *ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு கட்சியின் மீது பற்றுதலும் ஆதரவு உணர்வும் உண்டு. ஆனால் அவரவருக்கு அடையாள முகவரியாக அவர்கள் இருக்கின்ற சங்கங்கள்தான் என்பதை மறந்து விட்டார்களே!. எந்த அறிவிப்பும் இல்லாமல் மாநாடு முடிந்து விட்டது.*


 *மாநாடு முடிந்து கூட்டத்தில்  இருந்து கலைந்து சென்ற உறுப்பினர்களின் கேள்விக் கணைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.*


 *10 அம்ச கோரிக்கைகளில் ஒன்றாவது நிறைவேறியுள்ளதா?.. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தீர்வு கண்டு விட்டோமா?.. குழு அறிக்கை வெளிவந்துவிட்டதா?.*


 *60 ஆண்டுகளாக தொடக்கக்கல்வி ஆசிரியர்களுடைய முன்னுரிமைப் பட்டியல் ஒன்றிய அளவில் நடைமுறையில் இருந்து வந்ததை மாநில அளவில் மாற்றி அமைத்து அரசாணை 243 வெளியிட்டார்கள். பெண் ஆசிரியர்களை பாதிக்கும் அந்த அரசாணையில்  குறைந்தபட்சம் திருத்தத்தையாவது வெளியிட்டார்களா?..*


 *அந்த அரசாணை வெளிவந்ததற்கு நன்றி தெரிவித்து மாநாடு நடத்தியவர்கள் தான் இந்த ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாட்டையும் நடத்துகிறார்கள்..*


*தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேரடியாக நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என்று எழுதிக் கொடுத்தவர்களுடன் தான் இந்த மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது.*


 *தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கலைஞர் அரசில் வழங்கப்பட்ட₹ 5400 தர ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்து கோரிக்கை வைத்தவர்கள் தான் இந்த நன்றி அறிவிப்பு மாநாட்டினை நடத்தி இருக்கிறார்கள்.*


 *என்பதை மறக்கத்தான் முடியுமா?.. மறுக்கத்தான் முடியுமா?*


*சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா?..*


 *அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதா?.. இல்லை!.. இல்லை!.. இல்லை!..*


*மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எளிமை, இனிய அணுகுமுறை கொண்டவர்!. எப்போது வேண்டுமானாலும் சந்திப்பதற்கு வாய்ப்பினை அளித்து வருபவர்.. என்பதை யாராலும் மறுக்க முடியாது.*


*ஆனால் முதலமைச்சர் அவர்கள் ஆட்சியை நடத்துகிறார்கள். ஆனால் அனைத்து நிர்வாகத்தினையும் அதிகாரிகள் தான் நடத்தி வருகிறார்கள். எந்த அரசிலும் காண முடியாத ஒரு வித்தியாசமான அணுகுமுறை அதிகாரிகள் மட்டுமே ஆட்சி செய்கின்ற நிர்வாகத்தினை தமிழ்நாட்டில் உள்ளோர் அன்றாடம் கண்டு கேட்டு பாதிப்படைந்து வருகிறோம்!..*



*ஆதார் அட்டையைப் போல அவரவர் சங்கங்களின் அடையாள முகவரி என்பதை ஏன் மறந்து போனார்கள் என்று தெரியவில்லை?..*


 *STFI அகில இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு   தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எட்டு ஆசிரியர் இயக்கங்கள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்பெற்று இருந்தாலும் கொள்கை உணர்வோடு நன்றி அறிவிப்பு மாநாட்டில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம்!.. என்று சூளுரைத்து  பங்கேற்கவில்லை.. என்பதை கண்டு அவர்களை உச்சி முகர்ந்து பல போராட்டங்களை நடத்தியவன் என்ற முறையில் பாராட்டி மகிழ்கின்றேன்.*



 *நன்றி அறிவிப்பு மாநாட்டில் நன்றியுரை தமிழக ஆசிரியர் கூட்டணிக்கு அளித்திருந்தாலும்  கொள்கை வைரங்களாக இயக்கத்தினை பேணிப் பாதுகாத்து வருகிற மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்ட/ வட்டாரப் பொறுப்பாளர்கள் எவரும்  எந்த அறிவிப்பும் இல்லாமல் நன்றி அறிவிப்பு மாநாட்டில்   கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். என்பதற்காகவே கலந்து கொள்ளவில்லை என்பதை நெஞ்சம் நெகிழ.. கொள்கை கண்ணீர்.. கண்களில் விழுந்திட உணர்ச்சிப் பெருக்குடன்  அர்ப்பணித்துக் கொள்கிறோம்!..*


 *இனிப்பூட்டிய நிலைமை நின்று நிலைப்பதில்லை!.. அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பதால் விரத்தியும் ஏமாற்றமும் அடைந்து.... அழைத்து வந்தவர்கள் மீதும், அரசின் மீதும் கோபக்கனலை கக்கிக் கொண்டே தான் வெளியேறினார்கள்.. என்பதை உணர முடிகிறது. வாக்கு வங்கியினை அதிகரிக்கும் மாநாடாக அமையவில்லை!.. சேதாரப்படுத்தும் மாநாடாக அமைந்திருக்கிறது... என்பதை வேதனை உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்!.*


 *உங்களின் கரம்பற்றி இதயம் தொட்டு பெரிதும் வேண்டுகிற உங்களின் சகோதர உறவு.... தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டு இருப்பேன்... நன்றி!.. வணக்கம்!..  *


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com ,தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52,  நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com*


22-12-2025 அன்று நடைபெற்ற அமைச்சர் குழு உடனான பேச்சுவார்த்தை - ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொறுப்பாளரின் தகவல்




22-12-2025 அன்று நடைபெற்ற அமைச்சர் குழு உடனான பேச்சுவார்த்தை - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவரின் தகவல்


 இன்றைய (22-12-2025) அமைச்சர் குழு உடனான பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளிக்கிறது.


கோரிக்கைகள் நிறைவேற்றம் குறித்த எந்த வித உத்திரவாதமும் இல்லை


எனவே திட்டமிட்டபடி ஜாக்டோ ஜியோவின் போராட்டம் தொடரும்


அன்பார்ந்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்களின் கவனத்திற்கு,


இன்று நடைபெற்ற அரசின் உடனான பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை


 முதற்கண் இதனை பேச்சுவார்த்தை என்று சொல்ல இயலாது 


ஒரு ஆலோசனை கூட்டம் போன்றே நடைபெற்றது


 மீண்டும் ஒருமுறை அனைத்து சங்க பிரதிநிதிகளையும்  கோரிக்கை குறித்து கருத்துகளைக் கூற அழைத்தார்கள்


அதிலும் குறிப்பாக 70-க்கும் மேற்பட்ட சங்கங்கள் கலந்து கொண்ட நிலையில்  38 சங்கங்களே பேச அழைக்கப்பட்டன


முக்கிய சங்கங்களை கருத்து கூற அழைக்கவில்லை


இறுதியில் பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், போதிய நிதி நிலையை கருத்தில் கொண்டு தாங்கள் கூறிய கருத்துக்களை முதல்வர் அவர்களுக்கு கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். பொங்கலுக்கு முன்பாக அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்புவோம் என முடித்துக் கொண்டார்


நமது இயக்கம் சார்பில் மாநிலத்தலைவர் கே.பி. ரக்‌ஷித் அவர்கள் பேசியபோது


 1. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையவேண்டும்

2. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதியதிட்டம் அமலாக்கம்

3.  5400 தர ஊதியம் 

4. பி.லிட்., பி.எட்., பி.காம். பி.எட்., உள்ளிட்ட தணிக்கை தடைநிவர்த்தி செய்யவேண்டும்

5. Special TET  தேர்வை உடனே நடத்த வேண்டும்

6. அரசாணை 243ஐ முழுமையாக ரத்து செய்யவேண்டும்.

7. 2003 முதல் 2005 வரையிலான தொகுப்பூதிய காலத்தை பணிவரண்முறைப்படுத்த வேண்டும்

8. பகுதிநேர தொகுப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவேண்டும்

9. 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் உடனே வழங்கவேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்


இறுதி முடிவாக


*இன்றைய அரசின் உடனான பேச்சுவார்த்தை ஏமாற்றம் அளிக்கிறது.*


*கோரிக்கைகள் நிறைவேற்றம் குறித்த எந்த வித உத்திரவாதமும் இல்லை*


*எனவே திட்டமிட்டபடி ஜாக்டோ ஜியோவின் போராட்டம் தொடரும்*


மிக எழுச்சியாக போராட்ட களத்தில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது



கே.பி.ரக்‌ஷித்

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.



Xiaomi Power Bank 4i 20000mAh 33W Super Fast Charging PD |Smart 12 Layer Protection|Type C Input & Output|Triple Output Ports|Supports Android,Apple, Tablets, Earbuds,Watch(MI Powerbank),Black


https://amzn.to/3NdXTd2



உச்சநீதிமன்றத்தின் TET தேர்வு தீர்ப்பு : அமைச்சர் அவர்களுடைய பேட்டிக்கு ஆசிரியர் கூட்டணி பாராட்டு



உச்சநீதிமன்றத்தின் TET தேர்வு தீர்ப்பு : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுடைய பேட்டிக்கு ஆசிரியர் கூட்டணி பாராட்டு


உச்சநீதிமன்ற டெட் தேர்வு தீர்ப்பால் பூகம்பத் தாக்குதலில் அதிர்ந்து உறைந்து போய் இருந்த ஆசிரியர் சமுதாயத்திற்கு மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுடைய பேட்டி தொடர்ந்து ஒரு நம்பிக்கை உணர்வினை ஊட்டி வருகிறது


AIFETO


நாள் : 09.09.2025


 * தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.


* உச்சநீதிமன்ற தீர்ப்பு செப்டம்பர் ஒன்றாம் தேதி வருகிறது நான்காம் தேதி அனைத்து ஆசிரியர் சங்கத் தலைவர்களை அழைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கருத்துக்களை கேட்டறிந்தார். இங்கிலாந்து, ஜெர்மனியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இருந்தாலும் முதலமைச்சரின் குரலாகவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியினை வெளியிட்டார்கள். ஒருபோதும் திராவிட மாடல் அரசு ஆசிரியர்களை கைவிடாது என்று செய்திகளை வெளியிட்டார்கள்.


* தீர்ப்பு முழுமையாக வெளிவந்தவுடன் சட்ட வல்லுனர்களை கேட்டு சட்டப் போராட்டம் நடத்தி ஆசிரியர்களை பாதுகாப்போம் என்று தெரிவித்தார்கள். 110 பக்கம் தீர்ப்பு முழுவதும் வெளிவந்துவிட்டது. 19ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதாக அறிவித்துள்ளது.


* ஆந்திரா அரசு 15-11-2011 க்கு முன்பு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு டெட் லிருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது. கேரளா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடன் சீராய்வு மனு அளித்து டெட்டிலிருந்து விலக்கு பெறுவோம் என அறிவித்திருக்கிறார். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் இந்த மாநிலங்களில் எல்லாம் டெட் கட்டாயம் இல்லை என்ற நிலையிலே பணியாற்றி வருகிறார்கள்.


* மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அவர் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வெளிவந்த உணர்ச்சிப்பிழம்பான பேட்டி ஆகும். செய்தியாளர்கள் டெட் தேர்வு கட்டாயம் என்பது பற்றி அரசின் முடிவு என்ன என்று கேட்டபோது உச்ச நீதிமன்றத்தில் 19ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில் முறைப்படி பணி அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு பாதுகாப்பாக சீராய்வு மனு செய்ய உள்ளோம்.


* டெட் இல்லாத காலத்தில் இருந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தி தான் நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆட்சியாளர்கள் ஏன் டெட் தேர்ச்சி பெற்று பணியாற்றி வருபவர்களும் அவர்களிடம் படித்த மாணவர்கள் தானே அவர்களுடைய பணி அனுபவத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மனம் திறந்து இருக்கிறார்.


* நம்மை பொருத்தவரையில் குருகுல கல்வி தொடங்கிய காலம் தொட்டு 15.11.2011 அன்று வெளியிடப்பட்ட அரசாணை 181, 07.03.2012 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விளம்பரம் வரை பணியாற்றியவர்கள், இந்திய நாட்டின் குடியரசு தலைவர், பாரதப் பிரதமர், அமைச்சர்கள் ,இந்திய ஆட்சி பணியாளர்கள் வரை அந்த ஆசிரியர்களிடம் தான் படித்தவர்கள் என்பதை மறுக்க முடியுமா..?


* நீதிபதிகள், நீதியரசர்கள், நீதிமான்கள் பொருள் ஒன்று தான். ஆனால், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் நீதிமான்களால் வெளியிடப்பட்ட தீர்ப்புகள் அல்ல..! நீதியரசர்களால் வெளியிடப்பட்ட தீர்ப்பாகும். NCTE விளம்பரம் கூட அன்று வெளியிடப்படவில்லை. தற்போது கருத்துரு மட்டும்தான் சொல்லி இருக்கிறார்கள்.


* 2003 ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் ஒரே கையெழுத்தில் ஒன்றே முக்கால் லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட போதும், 999 ஜாக்டோ ஜியோ தலைவர்கள் ஏழு மாதம் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்ட போதும் தலைவர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதல் படி உச்ச நீதிமன்றம் சென்று தீர்ப்பினை பெற்று மீண்டும் பணியில் சேர்ந்து ஊதியத்தை பெற்றோம் என்ற வரலாற்றுப் பதிவினை நெஞ்சிருக்கும் வரை மறக்க முடியுமா?


* தலைவர் கலைஞர் அவர்களின் மகன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காலத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி 15.11.2011 க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு டெட் தேவையில்லை என்பதை தாக்கல் செய்து இரண்டே கால் லட்சம் ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கை ஒளியினை ஏற்றி தருமாறு பாதிக்கப்பட்ட ஒன்றே முக்கால் லட்சம் பேரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


* உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் மதிப்புமிகு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் உடன் கூட்டத்தினை கூட்டி அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களிடமும் அவரவர் மாநிலங்களில் நடைபெறும் செயல்பாடுகளை கேட்டறிந்த உணர்வு தலைமைச் செயலாளருடைய தலைமைப் பண்புக்கு பெருமையினை சேர்த்துள்ளது என இந்நாளில் வரவேற்று பாராட்டிக் கொண்டிருக்கிறோம்.


* பாதிக்கப்பட்ட ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் எண்ண அலைகளை பதிவுகள் மூலம் வெளிப்படுத்தாமல் நம்பிக்கை உணர்வுடன் பயணத்தினை தொடருவோம். தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களை பொறுத்தவரையிலும் அது ஜாக்டோ இயக்கமாக இருந்தாலும் ஆசிரியர்களைப் பாதுகாப்பதில் முழு சக்தியையும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை இந்நாளில் பகிர்ந்து வருகிறோம். அரசின் முடிவுகள் அறிந்து பதிவுகளை பகிர்ந்து கொள்ள முன் வருவோம்.


* அரசு கைவிடாது என்பதற்கும், பாதுகாக்கும் என்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லா விட்டாலும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற உறுதிபாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும், அலுவலர்களும் உள்ளார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது. உணர்வினை தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்.


அண்ணன் வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com .


 *அ. எழிலரசன்* 

 *மாநிலத் தலைவர்*


 *அ.வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்* 


*ஆ.இராஜசேகர் மாநிலப் பொருளாளர்.*


*கு.ரமாராணி, மாநில மகளிரணிச் செயலாளர்.*


*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52,  நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com*



🍁 TET தீர்ப்பு தொடர்பான கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் நேற்றைய பேட்டி...



ஆசிரியர் தகுதித் தேர்வு - உச்சநீதிமன்றத் தீர்ப்பு - ஆசிரியர் கூட்டணி அறிக்கை



ஆசிரியர் தகுதித் தேர்வு - உச்சநீதிமன்றத் தீர்ப்பு - ஆசிரியர் கூட்டணி அறிக்கை


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*மாநில மையம்* 

*நாள்: 03.09.2025*

*******************

*TET வழக்கு!*


*உச்சநீதிமன்றத் தீர்ப்பு!*


*அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?*

********************

*பேரன்புமிக்க ஆசிரியப் பெருமக்களே! வணக்கம்.*


*ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) தொடர்பாக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 01.09.2025 அன்று வெளிவந்துள்ளது.அத்தீர்ப்பு வெளிவந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமல்ல; பொதுமக்கள் மத்தியிலும் கூட ஒரு வகையான பதட்டமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டது. இப்படி ஒரு தீர்ப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை.இப்படி ஒரு வழக்கு நடந்ததை அறியாத பொதுமக்கள் கூட தற்போது பணியில் உள்ள,55 வயது நிறைவடையாத ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றால்தான் பணியில் தொடர முடியும் என்ற தீர்ப்பைக் கேட்டு ஆச்சரியத்தோடும், ஆதங்கத்தோடும் பேசிக் கொண்டதைக் காண முடிந்தது. அந்த அளவுக்கு இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில்கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.*


*இந்தத் தீர்ப்பு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய மன உளைச்சலையும்,உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்தியா முழுவதும் பொருந்தக் கூடியது. இந்தியா முழுவதும் உள்ள ஒன்றிய அரசின் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றிய ஆட்சிப் பகுதிகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இத்தீர்ப்பு பொருந்தக் கூடியது. உதாரணமாக தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவரும் தங்களது பணியைத் தொடர்வதற்கும், பதவி உயர்வில் செல்வதற்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் போனால் போகிறதென்று 55 வயது நிரம்பிய ஆசிரியர்களுக்கு மட்டும் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இது போன்ற ஒரு தீர்ப்பைக் கடந்த காலங்களில் நாம் கேள்விப்பட்டதில்லை. பொதுவாக கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 நடைமுறைக்கு வந்த பின்பு தான் ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது நடைமுறைக்கு வந்தது. அதன்பின்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால்,கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்பது கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத தீர்ப்பாக அமைந்துவிட்டது.முன் தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ள இத்தீர்ப்பு இயற்கை நீதிக்கு முரணாக உள்ளது.*


*தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் ஒருவர் ஆசிரியராக நியமனம் பெற பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது.முதலில் குறிப்பிட்ட கல்வித் தகுதியோடு ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு அவர் ஆசிரியராக பணியாற்ற தகுதியானவர் என்று அரசே சான்றிதழ் வழங்குகிறது. இவ்வாறு சான்றிதழ் பெற்றவர்கள் ஒரு காலத்தில் வேலைவாய்ப்பக முன்னுரிமையின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.அது சமூக நீதியாக அமைந்திருந்தது.ஆனால், தற்போது ஆசிரியர் பயிற்சி பெற்ற ஒருவர் மீண்டும் ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டுகளில் பணி நியமனம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவர், ஆசிரியர் நியமனத்திற்கென்று மீண்டும் ஒரு தேர்வை எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்றரே ஆசிரியராகப் பணியில் சேர முடியும்.*


*ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர்களாக நியமனம் பெற்ற ஒரு சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு,கல்வி உரிமைச் சட்டம் 2009ஐ பின்பற்றி தகுதித் தேர்வு தொடர்பாக 29.07.2011இல் NCTE வெளியிட்ட அறிவிக்கைக்கு முன்பு நியமனம் பெற்று,பதவி உயர்வு பெற்ற எவரும் தகுதி தேர்வு எழுதத் தேவையில்லை எனவும், அதற்குப் பின்பு நியமனம் பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு பெறுபவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியிருந்தது.*


*கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி புதிதாக ஆசிரியராக நியமனம் பெறுவதற்கு மட்டுமே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது இல்லை என்ற வாதத்தின் அடிப்படையில் தான் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிலரால் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவ்வாறு உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது தவறு என்ற கருத்தும் அன்றே சிலரால் எடுத்துக் கூறப்பட்டது. முடிந்தவரை உயர்நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு, மேல்முறையீட்டு மனு ஆகியவற்றைச் செய்திருக்க வேண்டும் என்பது சில மூத்த வழக்கறிஞர்களின் கருத்தாக இருந்தது. ஆனாலும் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று விட்டதால் அந்த வழக்கில் தமிழ்நாடு அரசும் இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்களான 100 ஆசிரியர்கள் சார்பிலும், டிட்டோஜாக் பேரமைப்பின் இணைப்புச் சங்கங்களின் உறுப்பினர்களான 100 ஆசிரியர்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனி நபர்களாலும் பல்வேறு சங்கங்களாலும் தொடரப்பட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரணை செய்து 01.09.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்புத் தான் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் நிலை குலைய வைத்த இந்த தீர்ப்பு.*


*இந்த வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு ஆதரவாகவே வாதிட்டது.பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. ஆனால், ஒன்றிய அரசின்  NCTE சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் ஆசிரியர் நியமனம்,பதவி உயர்வு ஆகிய இரண்டுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என வாதாடினார்கள் என்பதையும் இங்கே நாம் குறிப்பிட்டுக் கூற வேண்டும்.*


*உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் 55 வயதுக்கு உட்பட்ட, தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், அவ்வாறு தேர்ச்சி பெறவில்லை எனில் அவர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், அவர்கள் ஏற்கனவே ஆற்றிய பணிக் காலத்தைக் கணக்கிட்டு ஓய்வுக்காலப் பணப்பலன்களை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இந்த வரிகள் மிகக் கடுமையானதாகப் பார்க்கப்படுகிறது.இதன் மூலம் ஆசிரியர்களின் பணி அனுபவம் முற்றிலுமாகப் புறந்தள்ளப்பட்டுள்ளது.எந்த ஒரு பணியிலும் அனுபவம் என்பது மிக மிக முக்கியமானது. அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் ஆற்றும் பணி மிகவும் நேர்த்தியாக இருக்கும். எனவே தான் பல தனியார் நிறுவனங்கள் பணி அனுபவத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றன. அதிலும் குறிப்பாக அனுபவம் வாய்ந்த ஆசிரியருடைய கற்பித்தல் என்பது, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும். அனுபவம் வாய்ந்த ஒரு ஆசிரியர் மாணவர்களின் உளவியலைப் புரிந்து, அவர்களது கற்றல் நிலையை உணர்ந்து, தனது கற்பித்தல் திறனை பயன்படுத்துகிறார்.எனவே, அனுபவம் வாய்ந்த ஆசிரியருடைய கற்பித்தல் பணி என்பது சிறப்புக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.எனவே தான் தற்போதும் கூட தமிழ்நாட்டில் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. ஆனால், தற்போது 30 ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்தவர்கள் கூட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியராகவே தொடர முடியும் என்பது அவர்களது அளப்பரிய பணி அனுபவத்தை அலட்சியப்படுத்துவதாக உள்ளது. ஆசிரியர்களின் திறமையை அளவிட தகுதித் தேர்வு ஒன்றே அளவுகோல் என்று கூறுவது எவ்விதத்திலும் பொருத்தமானது அல்ல.*


*உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஊடக விவாதங்களில் சிலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் ஆசிரியர்களுக்கு என்ன சிரமம் இருக்கிறது? என்று கூட கேள்விகள் கேட்கிறார்கள். ஆசிரியர்களின் திறமையை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆசிரியர்கள் திறமையானவர்கள்; அறிவிச்சிறந்தவர்கள்.ஆனால், தேர்வு எழுதுவதற்கென்று ஒரு வயது இருக்கிறது. அந்த வயதைக் கடந்த ஆசிரியர்களைத் தேர்வு எழுதச் சொல்வது என்பது உளவியல் நெறிமுறைகளுக்கு மாறானது. உதாரணமாக தற்போது நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மருத்துவ படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.இதற்கு முன்பு நீட் தேர்வு இல்லாத காலத்தில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து தற்போது தலைசிறந்து விளங்கும் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இதில் அவர்களது பணி அனுபவம் என்பது முக்கியமானது. அப்படிப்பட்ட தலைசிறந்த மருத்துவர் தற்போது நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராக பணியாற்ற முடியும் என்று கூறினால் அது சரியாக இருக்குமா? 25 வயதில் இந்திய ஆட்சிப்பணித்  தேர்வில் வெற்றி பெற்று 25,30 ஆண்டு காலமாக உயர் அலுவலராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒருவரை தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறினால் பொருத்தமாக இருக்குமா? இதேபோன்று நீதித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் தகுதித் தேர்வு என்று ஆரம்பித்தால் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள்? என்பதை நாம் எதார்த்தமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.*


*அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களைப் பணியை விட்டு நீக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மிகவும் ஆபத்தானது. இதே போன்ற தீர்ப்பு எதிர்காலத்தில் பிற துறைகளின் பணியாளர்களுக்கும் வராது என்று சொல்லி விட முடியாது. ஒரு சட்டமோ அல்லது அரசாணையோ அது பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தான் நடைமுறைக்கு வரும்.இதுவரை அப்படித்தான் நடைமுறை இருந்துள்ளது. ஆனால்,ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்ட தேதிக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முன் தேதியிட்டு அது நடைமுறைக்கு வருகிறது என்று சொல்வது மிகவும் பொருத்தமற்றதாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து உருவான இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இந்தியா முழுமைக்குமான பிரச்சனையாக மாறியுள்ளது. ஆனால்,இந்தத் தீர்ப்பின் தாக்கம் மற்ற மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களால் இன்னும் பெரிய அளவில் உணரப்படவில்லை என்றே தெரிகிறது. அங்குள்ள மாநில அரசுகள் இந்தத் தீர்ப்பை அமல்படுத்தும் போது தான் அதன் பாதிப்பை அவர்கள் உணரக்கூடும். ஆனால், தமிழ்நாட்டில் தற்போது இது பற்றி எரிகிற பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.இந்தச் சூழலில் தமிழ்நாட்டு ஆசிரியர்களை பதட்டமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளது.*


*தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் "உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு ஆதரவாக நிற்கும் என்றும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றும் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.இன்றைய சூழலில் ஆறுதல் தரக்கூடியது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட டிட்டோஜாக் பேரமைப்பின் இணைப்புச் சங்கங்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக தொடர்ந்து சட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இத்தீர்ப்பை எவ்வாறு சட்டப்பூர்வமாக அணுகுவது என்பதையும், மேல்முறையீடு, மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. அதையும் தாண்டி தமிழ்நாடு அரசு ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்திட அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் டிட்டோஜாக் பேரமைப்பு தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்த உள்ளது.எனவே, ஆசிரியர்கள் பதட்டமான மனநிலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வழக்கம்போல் கற்பித்தல் பணியைச் சிறப்பாக ஆற்ற வேண்டும்.* 


*நம்முடைய கணக்கீட்டின்படி உச்சநீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றி தகுதித் தேர்வு நடத்தப்பட்டால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேல் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படும். ஒருவேளை அவ்வாறு தேர்வு நடத்தப்பட்டால் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கென சிறப்புத் தகுதித் தேர்வு(Special  TET)தான் நடத்தப்படும். அதற்குரிய அறிவிப்புகள், அதற்கான பாடத்திட்டங்கள், அதற்கான பயிற்சி ஆகியவற்றை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும்; நிச்சயம் வழங்கிடும். இதற்குப் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. எனவே, ஆசிரியர்கள் பதட்டமோ, பரபரப்போ அடையத் தேவையில்லை. நிச்சயமாக ஓய்வு பெறும் வரை அனைவரும் ஆசிரியர்களாகப் பணியாற்றுவோம்.*


*அடுத்து நடைபெறவுள்ள TET தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற தேவையில்லாதகுழப்பம் பல ஆசிரியர்களுக்கு உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TET தேர்வை எழுதுவதற்கு விருப்பமுள்ளவர்கள் எழுதலாம். அது அவர்களுடைய சொந்த விருப்பம். ஆனால், ஒருவேளை பணியில் உள்ளவர்களுக்குத் தகுதி தேர்வு நடத்தப்பட்டால் அது "சிறப்புத் தகுதித் தேர்வாக (Special TET) நடைபெறும். அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதை நாம் அரசிடம் நிச்சயமாக வலியுறுத்துவோம். அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.*


*இந்நிலையில் அடுத்து நடைபெறும் தகுதித் தேர்வு எழுதுவது, அதற்கு முன் அனுமதி பெறுவது தொடர்பாக ஆர்வ மிகுதியில் சில சங்கப் பொறுப்பாளர்களும்,சில வட்டாரக்கல்வி அலுவலர்களும் பல்வேறு செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவது ஏற்புடையதாக இல்லை.*


*உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு தற்போது சட்ட ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அவ்வாறு சட்ட ஆலோசனை மேற்கொண்டு அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடாத நிலையில் ஆர்வக்கோளாறில் சில சங்கப் பொறுப்பாளர்களே செயல்படுவது தவறானதாகும். சங்கத்தின் மாநில தலைமை பல்வேறு சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து தெளிவான ஒரு அறிக்கை கொடுப்பதற்கு முன்பே கீழ் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பிரச்சனையின் நுணுக்கத்தை, அதன் தீவிரத்தை உணராமல் பொதுவெளியில் கருத்துக்களை பகிர்வது என்பது எவ்விதத்திலும் சரியான நடவடிக்கை அல்ல.அது பதட்ட நிலையில் உள்ள ஆசிரியர்களை மேலும் குழப்பவே உதவும்.எனவே, ஆசிரியப் பெருமக்கள் எவ்வித மன உளைச்சலுக்கும் ஆளாகாமல் தெளிந்த உள்ளத்தோடும், மகிழ்ச்சியோடும் கல்விப் பணியை ஆற்ற வேண்டும்.உச்ச நீதிமன்றத் தீர்ப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னால் நாம் முந்திச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு விஷயத்தில் தமிழ்நாடு அரசு நமக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதிட்டது. எனவே, தற்போது நாம் தமிழ்நாடு அரசின் பின்னால் நிற்போம். அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு முடிவு செய்யும்.*

********************

*தோழமையுடன்*

 *ச.மயில்*

 *பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


நீதி அரசர்களின் பதவி உயர்வுக்கு பணி முன்னுரிமை - ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு கட்டுப்பாடு நியாயம்தானா? - ஆசிரியர் கூட்டணி கேள்வி

 

 நீதி அரசர்களின் பதவி உயர்வுக்கு பணி முன்னுரிமை - ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு கட்டுப்பாடு நியாயம்தானா? - ஆசிரியர் கூட்டணி கேள்வி


*நீதி அரசர்களின் பதவி உயர்வுக்கு பணி முன்னுரிமை பாதுகாக்கப்பட்டு வருகிறது!.. எழுத்தறிவிக்கின்ற இறைவனுக்கோ!.. பதவி உயர்வுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.. நியாயம்தானா?.. நியாயம்தானா?..*



*AIFETO.. 01.09.2025.*


*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.*



*ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது.*


 *பணி நியமனத்திற்கும், பதவி உயர்வுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை!.. என்பது இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.*


 *உச்சநீதிமன்ற தீர்ப்பினை நாம் சட்டரீதியாக விமர்சனம் செய்ய இயலாது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீர்ப்பில் எங்களுக்கு நியாயம் கிடைக்கப்பெறவில்லை என்பதை சொல்வதற்கு உரிமை இருக்கிறது!.*


 *தமிழக அரசைப் பொறுத்தவரையில் கொள்கை முடிவாக பதவி உயர்வுக்கு முன்னுரிமையினை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள். என்பது எதார்த்தமான உண்மையாகும்.*


*இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை..*


 *எதிர்பார்த்த ஒன்றுதான்.*


 *என்னதான்  வழக்கறிஞர்கள் வாதிட்டாலும்  NCTE (NATIONAL COUNCIL FOR TEACHER EDUCATION) சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதி அமர்வு 3 நீதிபதி அமர்வில் ஏற்கனவே ஆசிரியராக இருப்பவர்கள் ஆசிரியராக தொடர வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிக்கை கொடுத்தவர்கள் தான்.*



 *தேசியக் கல்வி கொள்கையை ஒட்டியே அவர்களது செயல்பாடுகள் அமைந்திருக்கும். என்பதில் வியப்பேதும் இல்லை.*


 *தீர்ப்பின் முழு வடிவத்தையும் நீதியரசர்கள் குரல் வழியாகவும் கேட்டோம்!.. தீர்ப்பின் சுருக்கத்தினையும் படித்துப் பார்த்தோம்!.. மூத்த வழக்கறிஞர்களிடம் கருத்தினையும் கேட்டிருக்கின்றோம்.*


 *ஆனால் அதற்குள் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை பற்றி பல்வேறு புலனப் பதிவுகள்  ஆலோசனைகளாக மிதந்து வருகின்றன.* 


 *மேல் முறையீடு செய்ய முடியுமா?? என்றெல்லாம் பல்வேறு வினாக்கள்!.. அவையெல்லாம் இப்போது நடைபெறப் போவதில்லை!.. மேல்முறையீடு செய்தாலும் இதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது தீர்ப்பு வருவதற்கு... மேல்முறையீடு செய்யும்போது எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்று நமக்குத் தெரியாது.*



*பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு அவசியம்.*



*பணி ஓய்வு பெற 5 ஆண்டு உள்ளவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை!.*


*5 ஆண்டுகளுக்கு மேல் பணியில் உள்ளவர்கள், 2 ஆண்டுகளுக்குள் TET தேர்ச்சி பெற வேண்டும்.*



*ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி 2 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெறவில்லை எனில் பணியிலிருந்து விடுவித்து விடலாம். அவர்களுக்கு ஓய்வு காலப் பயன்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.*


*குறிப்பிட்ட பணிக் காலம் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும் என்பது குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம்.*


 *என்றெல்லாம் தீர்ப்பில் சில சலுகைகளை வழங்கி உள்ளார்கள்.*


 *அதே நேரத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டம் பொருந்தாது என்று ஏற்கனவே தீர்ப்புகள் கூறப்பட்டு வந்துள்ள நிலையில்... சிறுபான்மை நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் தொடர்பாக உச்ச நீதிமன்ற  உயர் அமர்வு விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார்கள்.*


*பெரும்பாலும் நமது ஆசிரியர்களில் பணி நிறைவு பெறுவதற்கு ஐந்து ஆண்டுகள் 1970ஐ பிறந்த நாளாக கொண்டவர்கள்.. நிறைய பேர் இருக்கிறார்கள்!. அவர்கள் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை ஆனால் ஐந்து ஆண்டுகள் மூன்று மாதம் கூடுதலாக இருந்தாலும் இரண்டு ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.*



 *2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நியமனம் பெற வேண்டுவோர் அந்த தகுதி தேர்வினை இலட்சக்கணக்கில் எழுதினார்கள். ஆசிரியராக பணியாற்றுபவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று இன்றைய தேதி வரை தமிழ்நாடு அரசு எந்தவிதமான ஆணையும் பிறப்பிக்கவில்லை.*


 *இடைநிலை ஆசிரியர் ஒருவர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல வேண்டும் என்றால்... ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று தேர்ச்சி பெற வேண்டும்.*


 *தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற வேண்டும் என்றால்  அவர் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியில் நீடிக்க TET.. 1  தேர்ச்சி பெற வேண்டும். பதவி உயர்வில் செல்வதற்கு TET.. 2 தேர்ச்சி பெற வேண்டும்.*


 *எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அப்போதைய தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து SCERT மூலமாக தேர்வு வைத்து அனைவரையும் இடைநிலை ஆசிரியர் நிலைக்கு உயர்த்தினார்கள்.*


 *அதேபோல் இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண்களையும் அரசு நிர்ணயித்து அந்த தேர்வினை நடத்தி, அனைவருக்கும்  தேர்ச்சி சான்றிதழ் வழங்குவதற்கு வாய்ப்பளித்தார்கள்.*


 *நீண்ட காலம் இயக்கத்தை தலைமை பொறுப்பு ஏற்று நடத்தியவர்கள் பல பேர் ஐந்து ஆண்டுகளில் பணி நிறைவு பெற்று விடுவார்கள். அவர்களது பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.*



 *கல்லூரி ஆசிரியர்களை பொறுத்தவரையில் தேசிய அளவில் தகுதித் தேர்வினை (NET) வைத்திருக்கிறார்கள்.தேர்ச்சி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் எந்தக் கல்லூரியிலும் பணி நியமனம் பெறலாம். மாநில அளவில் கல்லூரி ஆசிரியர் நியமனத் தேர்வில் (SLET) வெற்றி பெற்றவர்கள் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளார்கள். ஆனால் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சி படிப்பு (Phd) இருந்தால் போதுமானது. இதுதான் கல்லூரி ஆசிரியர்களின் விதிமுறைகளில் இடம்பெற்று இருக்கிறது.*



 *சட்ட விதிகள் சில நேரங்களில் நியாயங்களை புறந்தள்ளிவிட்டு தான் தீர்ப்பாக வெளி வந்திருக்கிறது!.. அந்த தீர்ப்பு தான் இன்று உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.*


 *இந்த தீர்ப்பு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தெல்லாம் வழங்கப்படவில்லை நமக்குள் உள்ள இரண்டு ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக மேல்முறையீடு செய்த காரணத்தினால் கிடைக்கப் பெற்ற தீர்ப்பாகும்.*



 *தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சில அலுவலர்கள் நமக்கு சாதகமான தீர்ப்பு நீதிமன்றத்தில் இருந்து வந்தால் அமல்படுத்துவதற்கு தாமதப்படுத்துவார்கள்.*


 *ஆனால் பாதகமான தீர்ப்பு வந்தால் உடனடியாக அமல்படுத்த துடிப்பார்கள்.*


 *நீதியரசர்களை பொறுத்தவரையில் பதவி உயர்வுக்கு அவர்களது முன்னுரிமை தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது தெரிந்த உண்மை!..*


 *முன்பெல்லாம் வங்கிகளில் கடன் கேட்க ஆசிரியர்கள் சென்றால் வங்கி மேலாளர் ஆதார் கார்டு, ரேசன் கார்டு கேட்பார்கள். ஆனால் இனிமேல் TET தேர்ச்சி பெற்றிருக்கிறீர்களா? அந்த சான்றிதழை கேட்டாலும்  கேட்பார்கள்!.. அந்த நிலைமைக்கு தள்ளப் பட்டுள்ளோம்!.. அந்தோ பரிதாபம்!...*


 *நீதி அரசர்களுடைய பதவி உயர்வுக்கு முன்னுரிமை பேணப்படுகிறது!. ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு TET கட்டாயம் என உறுதிப்படுத்தப்படுகிறது.*


 *நீதி தேவதையே!. நல்ல தீர்ப்பினை நீங்கள் தான் வழங்க வேண்டும்!..*


 *யாரும் பதற்றம் அடைய வேண்டாம்!.. ஆசிரியர் தகுதித் தேர்வினை அனைவரும் எழுதலாம்!.. தீர்ப்பினை அமுல்படுத்த தமிழ்நாடு அரசு சில ஆணைகளை பிறப்பிப்பார்கள்..!  அனைவரையும் பாதுகாக்க முடியும்!. என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது!..*



*அண்ணன் வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)  அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com*

*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52,  நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com.*


“கல்வி உரிமை மீட்புக் கருத்தரங்கம்” : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு


 “கல்வி உரிமை மீட்புக் கருத்தரங்கம்” : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு 


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக புதுக்கோட்டையில் ஒருங்கிணைக்கப்பட்ட “கல்வி உரிமை மீட்புக் கருத்தரங்கம்” நிகழ்வை இன்று தொடங்கி வைத்தோம்.


அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதில் ஆணிவேராகத் திகழும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்காக திராவிடமாடல் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களைப் பற்றி எடுத்துரைத்து, “ஆசிரியர்களின் நலனில் எப்போதும் அக்கறை செலுத்துவோம்” என எடுத்துரைத்தோம்.


மாநிலக் கல்வி உரிமைக்காக இந்தக் கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்த மன்றத்தின் நிர்வாகிகளுக்கும், பங்கேற்ற ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பும். நன்றியும்.



அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்கியது - நீதிமன்றத் தீர்ப்பாணையின் படி ஊதிய மறு நிர்ணயம் செய்ய வெளியிடப்பட்டுள்ள தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளை இரத்து செய்ய ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர ஏனைய பாடங்களில் உயர்கல்வி பயின்றமைக்கு ஊக்க ஊதியம் வழங்கியது - நீதிமன்றத் தீர்ப்பாணையின் படி ஊதிய மறு நிர்ணயம் செய்ய வெளியிடப்பட்டுள்ள தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளை இரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ஐயா மதிப்புமிகு. செ.முத்துசாமி Ex. MLC அவர்கள் வலியுறுத்தல்



Incentive pay for pursuing higher education in subjects other than the approved subjects - Tamilnadu Teachers' Federation General Secretary Mr. S.Muthusamy Ex.MLC Urged to quash the Proceedings of the Director of Elementary Education issued to re-fix the pay as per the court order





அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது - அலுவலர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு


சிலரை மகிழ்விக்க அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது - அலுவலர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு


Misuse of power to please a few is unacceptable - High Court reprimands officials


 அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை நேர்மையான, உண்மையான, உரிய காரணங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். அந்த அதிகாரத்தை யாரையோ மகிழ்விப்பதற்காக பயன்படுத்தினால் ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வட்டாரக் கல்வி அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிபவர் நீலநாராயணன். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதை ரத்து செய்யக் கோரி நீலநாராயணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். 


இதனை விசாரித்து நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு : மனுதாரர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது, சில ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதில் தவறு இருப்பதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

 

அதன் பின்னர் நடந்த விசாரணையில் மனுதாரர் கூறியது உறுதி செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மோசடியில் தொடர்புடைய ஆசிரியர்கள் மனுதாரருக்கு பல்வேறு பிரச்சினைகள் கொடுத்து வந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட புதிய முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்றதும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.


இந்தப்புகாரை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் விசாரிக்காமல் மனுதாரரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையில் எந்த விவரங்களும் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. அரசு தரப்பில், “மனுதாரருக்கு எதிராகக் குற்றம் சுமத்திய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நிர்வாகத்தை சுமூகமாக்கும் நோக்கில் மனுதாரர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.


மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், யாரை திருப்திப்படுத்த பள்ளிக்கல்வி துறையின் இணை இயக்குனர் அவசரமாக பணியிட மாற்ற உத்தரவைப் பிறப்பித்தார் என்பதையும், அதற்கான அவசரத் தேவை என்ன? என்பதையும் நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆசிரியர்களோடு இணக்கமான உறவை மேற்கொள்ளவில்லை என்பதற்காக பணியிட மாற்றம் செய்யும் உத்தரவு மிகவும் விசித்திரமாக உள்ளது.


நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுடன் மனுதாரரால் இணக்கமான உறவைப் பேண இயலவில்லை எனில் திருப்பத்தூர் மாவட்ட ஆசிரியர்களுடன் மட்டும் அது எப்படி சாத்தியமாகும்? உரிய காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டால், அதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரத்தை நேர்மையாக, உண்மையான, உரிய காரணத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும். அதிகாரத்தை யாரையோ மகிழ்விப்பதற்காக பயன்படுத்தினால் அது ஏற்கத்தக்கது அல்ல.


எந்த ஊழியரையும் நீதியின்றி காயப்படுத்தக் கூடாது. அது அவரை மட்டும் அல்லாமல் அவரது குடும்பத்தினரையும் காயப்படுத்தும். ஊழல், தவறான நோக்கத்தில் செயல்படும் ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்க எந்த தயக்கமும் தேவையில்லை. சில ஊழியர்களை துன்புறுத்தும் நோக்கில் பணியிட மாறுதல் அதிகாரம் பயன்படுத்தப்படக் கூடாது. இந்த வழக்கில் மனுதாரரை இடமாற்றம் செய்த உத்தரவு நீதியற்றது.


ஊழியர்கள் அல்லது சங்கங்களால் அளிக்கப்படும் புகார்கள் அல்லது அவர்களால் நடத்தப்படும் போராட்டங்களின் முழு விவரத்தையும் விரிவாக ஆராயாமல் இடமாறுதல் வழங்கியதாக கூறப்படும் காரணங்களை ஏற்க இயலாது. இதுபோன்ற நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டால், எந்த அரசு ஊழியரும் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்ற முடியாது. எனவே, பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் மனுதாரரை பணியிட மாற்றம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்


The victory or defeat of 50 seats is in our hands - Teachers' Federation warns

 

50 தொகுதிகளின் வெற்றி தோல்வி நிர்ணயம் எங்கள் கையில் - ஆசிரியர் கூட்டணி எச்சரிக்கை


The victory or defeat of 50 seats is in our hands - Teachers' Federation warns


 ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் மானாமதுரையில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி 16.03.2025 தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது.




50 தொகுதி தலையெழுத்து எங்கள் கையில் ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு சவால்


தமிழகத்தில் 50 தொகுதிகளின் தலையெழுத்தை எங்களால் நிர்ணயிக்க முடியும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கூறினார்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தலைமை ஆசிரியர் ஞானசேகரன் பணி நிறைவு விழாவில் தமிழக ஆசிரியர் கூட்டணி அகில இந்திய செயலாளர் அண்ணாமலை பேசியதாவது: 6. 25 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றுவோம் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.


இது சத்தியம் என்று சொன்னார்.


இந்த பட்ஜெட்டிலாவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் குழு அமைத்துள்ளோம் என்று சொல்கின்றனர். குழு அமைப்பது என்பது ஒத்தி போடுவதற்காகத்தான் என கருணாநிதியே கூறியுள்ளார்.


இந்தியாவில் 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறோம், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நமது திட்டத்தை பின்பற்றி வருகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.


வாக்குறுதியே சொல்லாத ஆறு மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து விட்டார்கள். ஆனால் வாக்குறுதியை சத்தியமாக சொன்ன ஸ்டாலின் குழுவை அமைத்திருக்கிறேன் என்று சொல்கிறார். அந்தக் குழு விசாரணை முடிவதற்குள் ஆட்சி காலமும் முடிவுக்கு வந்துவிடும்.


நீங்கள் எப்படி மிசா, தடா, பொடா பார்த்தோம் என்று சொல்கிறீர்களோ, அதே போன்று நாங்களும் ஏராளமான அடக்குமுறைகளை பார்த்துள்ளோம். அரசு ஊழியர்களை மொத்தமாக பணி நீக்கிய பிறகு நடந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா தோல்வி அடைந்தார்.


சக்தி மிக்க தலைவராக கருதப்படும் எம்.ஜி.ஆர்., ஆசிரியர்களை 40 நாள் சிறையில் வைத்ததற்காக அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் கடும் சரிவை சந்தித்தார்.


நீங்கள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு எதுவுமே செய்யவில்லை.


அப்புறம் எப்படி 200 தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள் என்று கூட்டணி கட்சியினரே கேட்கின்றனர். தற்போதுள்ள பல முக்கிய தலைவர்கள் தபால் ஓட்டுகளால் தான் வெற்றி பெற்றனர்.


1.5 கோடி முதல் 2 கோடி வாக்காளர்கள் வரை எங்களது குடும்பத்தில் உள்ளனர். தமிழகத்தில் 50 தொகுதிகளின் தலை எழுத்தை எங்களால் நிர்ணயிக்க முடியும்.


இதை நாங்கள் சவாலாகவே சொல்கிறோம். இதை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சிக்காலத்தில் நிரூபித்து காட்டி இருக்கிறோம் என்றார்.


Teachers' Federation Condemns Union Education Minister's Dictatorship Speech

 

43 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்துகின்ற ஒன்றிய கல்வி அமைச்சரின் சர்வாதிகாரப் பேச்சுக்கு ஆசிரியர் கூட்டணி கண்டனம்


Teachers' Federation Condemns Union Education Minister's Dictatorship Speech For Harming Education Welfare Of 43 Lakh Tamil Nadu Students


43 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்துகின்ற ஒன்றிய கல்வி அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திர பிரதான்  அவர்களின் சர்வாதிகாரப் பேச்சுக்கு ஐபெட்டோ அகில இந்திய அமைப்பு (AIFETO... ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS' ORGANIZATIONS ) கடும் கண்டனம்... வெளியிட்ட கருத்தினை திரும்ப பெற வலியுறுத்துகிறோம்


*AIFETO... 19.02.2025..*


 *தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.*



*ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திர பிரதான் அவர்கள் கல்வித்துறை அமைச்சர் என்ற பொறுப்பு எல்லையையும் தாண்டி எல்லா அதிகாரமும் பெற்ற ஒரு சர்வாதிகாரி போல் ஒரு பொதுக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.*


 *தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையினையும் மும்மொழி திட்டத்தினையும் ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு 1252 கோடியினையும் நாங்கள் விடுவிப்போம்!.. மும்மொழிக் கொள்கையினை ஏற்றுக் கொள்வதில் ஏன் பிடிவாதமாக இருக்கிறீர்கள்!.. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில் ஏன் இவ்வளவு எதிர்ப்புணர்வை காட்டுகிறீர்கள்!.. என்று கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்.*


 *தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகள் என்ற ஒப்பீடு இல்லாமல் அனைவரும் ஒரே நோக்கத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்!.. மும்மொழி கல்வி திட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம்!.. என்று கண்டனக் கூட்டத்தினை கோரிக்கை முழக்கத்தினை எழுப்பி களத்தில் போராடும் நிலையினை உருவாக்கி இருக்கிறார்.*



 *அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் சார்பில் டெல்லியில் உள்ள அமைச்சர் அலுவலகம் முன்பு கண்டனப் போராட்டத்தினை நடத்தி உள்ளார்கள்.*



 *சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு எத்தனையோ ஒன்றிய கல்வி அமைச்சர்கள் காங்கிரஸ், ஜனதா கட்சி,  பாரதிய ஜனதா, ஆகிய கட்சிகளில் இருந்தவர்கள் பொறுப்பு வகித்து செயல்பட்டு வந்துள்ளார்கள்.. ஆனால் கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல்  அரசியல் சட்ட அமைப்புகளுக்கு எதிராக மாநில மக்களின் மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய கல்வி அமைச்சர் ஒருவர் இருப்பாரேயானால் அவர் தர்மேந்திர பிரதானாகத்தான் இருப்பார்.*



 *ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோதே நாங்கள் இரு மொழி கொள்கையினை ஏற்றுக் கொண்டவர்கள்.  பேரறிஞர் அண்ணா அவர்கள்  கொண்டு வந்த இரு மொழிக் கொள்கை... தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரால் ஆதரிக்கப்பட்ட இரு மொழிக் கொள்கை... பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகு முதலமைச்சர்களாக  இருந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டில் உள்ளது.*


 *தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உருது ஆகிய  மொழிகளை பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். அவர் அவருடைய தாய் மொழியை அவர் அவர்கள் பேசுகிறார்கள். படிக்கிறார்கள். இன்னொரு மொழியினை தேர்வு செய்து  பொது மொழியாக தேசிய அளவில் உலக அளவில் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருப்பதால் ஆங்கில மொழியை படிக்கிறார்கள்.*


 *உலகின் பல நாடுகளில் ஆராய்ச்சி படிப்பு வரையில் தாய் மொழி வழிக் கல்வி போதிக்கப்படுகிறது. தாய்மொழி வழிக் கல்வியில் படித்தவர்கள் உலக அளவில் பல்வேறு பொறுப்புகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரோ அமைப்பின் தலைவர்கள் அதில் பணியாற்றும் விஞ்ஞானிகள் பலர் தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள் தான். தமிழ்நாட்டு அரசு பள்ளியில் படித்தவர்கள் தான்.*


 *நாடாளுமன்றத்தில் நாவன்மையுடன் விவாதங்களில் கலந்து கொண்டவர்கள் பலர் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் தான். 140 கோடி மக்களினுடைய பிரதிநிதியாக மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம்  அவருக்கு வரவேற்பினையும் பொது மரியாதையையும் அளித்து வருகிறார்கள். ஆனால் அவர் அங்கு  இந்தி மொழியில் தான் பேசுகிறார். பெருமைக்குரிய மேனாள் பாரதப் பிரதமர்   வாஜ்பாய் அவர்கள் பல்வேறு விவாதங்களில் இந்தியில் தான் பேசி இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் பேசி வருகிறார்கள்... இப்போது வளர்ந்துள்ள தொழில்நுட்ப உதவியால் தாய் மொழியான தமிழில் பேசி வருகிறார்கள்.*



 *எந்த மொழியை படிக்க வேண்டும் என்று முதலில் மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டும். இது கொள்கை வழி சார்ந்த முடிவாகும்.  தன் குழந்தைகளை எந்த மொழியில் படிக்க வைக்க வேண்டும் என்ற உரிமை பெற்றோர்களுக்கு தான் இருக்கிறது.*


 *அதை விடுத்து  அவர்கள் பிள்ளைகள்  அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்... ஹிந்தி படிக்கிறார்கள்... சமஸ்கிருதம் படிக்கிறார்கள்  என்பதெல்லாம் அரசியல் ஆகும்.*


 *தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள். 52 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.  56 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். தனியார் பள்ளிகளில் படிக்கும் 30 லட்சம் மாணவர்கள் மும்மொழி கொள்கையை படிக்கிறார்கள்.. ஆனால் அரசு பள்ளியில்  படிக்கும் பிள்ளைகள் மட்டும்  மும்மொழிக் கொள்கை படிக்க எது தடையாக உள்ளது?.. என்று கேள்வி கேட்டுள்ளார்கள்.*



 *தமிழ்நாட்டில் உள்ள மொத்த 56 ஆயிரம் பள்ளிகளில் சுயநிதி தனியார் பள்ளிகள் 16490 தான் இதில் 1235 சிபிஎஸ்சி சுயநிதி தனியார் பள்ளிகளில் மட்டும்தான் இந்தி பாடம் கற்பிக்கப்படுகிறது. வெறும் 3.16% சதவீதம்  படிக்கிறார்கள்.. தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் மாணவர்கள்தான் இந்தி படிக்கிறார்கள்..  தமிழ்நாடு சமச்சீர் கல்விமுறையினை நடைமுறைப்படுத்தி வருகிறது. அறிக்கைகள் வேறு!.. எதார்த்தம் என்பது வேறு!...*



*தமிழ்நாட்டில்  படிக்கும் மாணவர்கள் ஏன் இந்தி படிக்கிறார்கள்? என்று யாரும் கேட்கவில்லை. சமஸ்கிருதம் ஏன் படிக்கிறார்கள் என்று யாரும் கேட்கவில்லை.*



 *ஆனால் மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தியை திணிக்க முற்படுவதைதான் தமிழ்நாடு  மொழிப்போர் தியாகிகளின் அடிச்சுவட்டில்   நின்று கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.*



 *தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள 66 பக்கத்திலும் நவீன குலக்கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டில் புகுத்துவது தான்... விஸ்வகர்மா திட்டம் மாணவர்களை குலத் தொழிலுக்கு  அழைத்து செல்வதுதான் எதார்த்தமான உண்மையாகும்.*



 *தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தலில் நிற்கிறார்கள். 43 லட்சம் மாணவர்களின் கல்வி நிதியினை தேசிய கல்விக் கொள்கை, மும்மொழித்திட்டம் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தினை ஏற்றுக் கொண்டால்தான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் சர்வாதிகார பேச்சுக்கு...*


 *தமிழன் என்றோர் இனமுண்டு!.. தனியே அவருக்கோர் குணம் உண்டு..*



*செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்ததொரு லாபமுண்டோ?...*


 *என்ற மொழிப்போர் விடுதலை குரல் வழியே தமிழ்நாட்டில் பதிலடி கொடுப்போம்!.*



 *தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் வருகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி நலனுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுப்பீர்களேயானால் கண்டன குரல்களை விட... வாக்குச்சாவடியில் உங்களுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களின் மனக் குமுறல்கள்  தேர்தலில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும்... என்பதை  ஆசிரியர் இயக்கங்களின் மூத்த  தலைவர் என்ற முறையிலும்  22 மாநிலங்களின் பிரதிநிதிகள் இருக்கக்கூடிய அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு  (AIFETO)  ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS' ORGANIZATIONS  தேசிய செயலாளர் என்ற  முறையில் அனைத்து மாநிலங்களில் நேரடி தொடர்புள்ளவன் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்.*


 *மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர்  தர்மேந்திரா பிரதான் அவர்கள் சுயபரிசோதனை செய்து கொண்டு வெளியிட்ட கருத்தினை திரும்பப் பெறுங்கள்...*



 *ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனை காப்பாற்றுவதற்காக... இரு மொழி கொள்கையினை காப்பாற்றுவதற்காக தேசிய கல்விக் கொள்கையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!.. என்பதில் உறுதி எடுத்துக்கொண்டு களத்தில் நின்று போர்க் குரலை  எழுப்பிக் கொண்டே இருப்போம்!...*



 *விரைவில் டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சர் அலுவலகத்திற்கு முன்பு  மிகப்பெரிய போராட்டத்தினை நடத்துவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*


 *மொழிப்போர் தியாகிகள் ஒரு சங்கரலிங்கனார் ஒரு பொன்னம்பலனார், ஒரு உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் உணர்வுகள் தமிழ்நாட்டில் இன்னமும் பீறிட்டு எழுந்து கொண்டுதான் இருக்கிறது..*


*புகழ்பெற்ற கோத்தாரி கல்வி குழு ஒட்டுமொத்த  GDP இல் 6% நிதியினை கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்கள். ஆனால் ஒன்றிய அரசு 4% சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே நிதியினை ஒதுக்கி வருகிறார்கள்.. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியினை 6% சதவீதமாக உயர்த்த வேண்டுகிறோம்.*


*நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ₹ 2152 கோடி நிதியினை உடன் மத்திய அரசு விடுவித்திட வேண்டுமென்று ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பில்  கேட்டுக்கொள்கிறோம்.*



 *அடுத்த பதிவில் பீகார் மத்திய பிரதேசம் உத்தரப்பிரதேசம் குஜராத் ஆகிய மாநிலங்களின் மொழி உணர்வினையும் கல்வித் தரத்தினையும் விரிவான பதிவாக வெளியிட உள்ளோம் என்பதை தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம்.*



*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.*


6.14 Lakh Teachers, Govt Servants' Trust-Destroyed Trio Committee Announcement - Is Trio Committee Another Name for 'Can't' - TESTF Condemns



✍️✍️✍️✍️✍️✍️✍️

*6.14 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த மூவர் குழு அறிவிப்பு*


*முடியாது என்பதன் வேறு பெயர் தான் மூவர் குழுவா!*


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்


6.14 Lakh Teachers, Govt Servants' Trust-Destroyed Trio Committee Announcement - Is Trio Committee Another Name for 'Can't' - Tamil Nadu Elementary School Teachers' Federation Condemns


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்வில் பேரிடியாக 2003 ஆம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்கள் நடத்தி வருகின்றன.


இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு பணியில் சேர்ந்த சுமார் 38 ஆயிரம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்று ஒரு ரூபாய் கூட ஓய்வூதியம் இன்றி வயதான காலத்தில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 


அதிலும் 7000 ஊழியர்கள் உயிரிழந்து அவர்களின் குடும்பங்கள் குழந்தைகள் எவ்வித வருமானமும் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தாமதம் செய்யும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.


இதற்கான தொடர் போராட்டங்களின் விளைவாக 2016 ஆம் ஆண்டு 110 விதியின் கீழ்  அப்போதைய முதல்வர் அவர்கள் ஓய்வூதிய பிரச்சனை பற்றி ஆராய திருமதி ஷீலா ராணி ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் குழு அமைத்தார்கள். அவர் ராஜினாமா செய்த பிறகு அந்த குழு திரு ஸ்ரீதர் ஐஏஎஸ் தலைமையில் அந்தக் குழு இயங்கியது. ஓராண்டுக்கு பிறகு அந்த குழு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. 2019 ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ நடத்திய போராட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற உயர் நீதிமன்ற வழக்கில் அந்த அறிக்கை மீண்டும் உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதைப் பற்றிய விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.


இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் பிரச்சனையை தீர்ப்பதற்காக அரசால் அமைக்கப்பட்ட குழு ஆண்டுகள் பலவாகியும் எவ்வித தீர்வையும் அளிக்கவில்லை


அரசு அமைக்கப்படும் குழுக்களின் அறிக்கைகளின் வரலாறு இப்படித்தான் இருக்கிறது. 


தற்போதைய ஆளும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எண் 309 ஆக பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என தெரிவித்திருந்தது.  நிதி நிலைமை மற்றும் சிபிஎஸ் திட்டத்தின் பாதகங்கள் பற்றி தெரிந்து அதனால் ஆசிரியர் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவதை பற்றி புரிந்து அரசால் அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி பெரும்பாலான ஆசிரியர்களை அரசு ஊழியர்கள் வாக்களித்திருந்தனர்.


ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெறும் வேளையிலும்  சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. இருப்பினும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அரசின் மீது நம்பிக்கையுடன் காத்திருந்தனர். 


ஆனால் தற்போது ஓய்வூதியம் பற்றி ஆராய்வதற்காக ஒன்பது மாத கால அவகாசம் வழங்கி குழு அமைத்து இருப்பது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற அரசுக்கு மனமில்லை என வெட்ட வெளிச்சமாகிறது.


மத்திய அரசு ஊழியர்களே ஏற்றுக் கொள்ளாத, பாதகங்கள் நிறைந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை காரணம் காட்டி குழு அமைத்திருப்பது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது. 


எனவே அரசு உடனடியாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும். 


ஆசிரியர்கள் மிகவும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்ட அமல்படுத்தும் அறிவிப்பை அரசு வெளியிடாமல் மேலும் தாமதப்படுத்தினால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்...

இவண்..

*சி அரசு*

 மாநிலத் தலைவர்

 *சு குணசேகரன்*

 பொதுச்செயலாளர்

 *சே நீலகண்டன்*

 மாநில பொருளாளர்

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி..





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-09-2026

      பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்