கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று முதல் இ-பாஸ் எல்லாம் தேவையில்லை - நியாயமான காரணங்களுக்கு இ-பதிவு போதும் - தமிழக அரசு விளக்கம் (நாளிதழ் செய்தி)...

அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்குள் அல்லது மாவட்டங்களுக்கு இடையே இ-பதிவு சான்றிதழ் போதும் என்றும், இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.



தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிதாக தமிழகத்திற்குள் இ-பதிவு அனுமதி தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதாவது, திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இ-பதிவு என்பது இ-பாஸ் என்று செய்தி பரவியதாகவும், அது தவறானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இ-பதிவு என்பது எங்கே போகிறோம் என்பதை காரணம் மற்றும் ஆவணத்துடன் பதிவு செய்து விட்டு சான்றிதழுடன் செல்வது. அதுவே இ-பாஸ் என்றால் விண்ணப்பித்துவிட்டு ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும். எனவே இ-பாஸ் நடைமுறை இல்லை என்றும் இ-பதிவு போதுமானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 67, நாள்: 14-05-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...