கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SBI வங்கியின் பிற கிளைகளில் பணம் எடுக்கும் உச்சவரம்பு அதிகரிப்பு...

 பொதுவாக நாம் வங்கிகளில் தொடங்கிய சேமிப்பு கணக்கில், கணக்கு தொடங்கிய கிளையில் பணம் எடுத்தும் கொள்ளும் வசதி உண்டு.  வாடிக்கையாளர் அதே வங்கியின் வேறு கிளைகளில் பணம் எடுத்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதோடு பணமும் குறைவாகத் தான் எடுக்க முடியும்.


 


உச்ச வரம்பு அதிகரிப்பு 

ஆனால் கொரோனா காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது.


 

 கணக்கு தொடங்கிய கிளை தவிர மற்ற கிளைகளிலும் பணம் எடுக்கும் உச்ச வரம்பினை அதிகரித்துள்ளது.

 


 நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, Self Cheque மூலம் எடுக்கும் தொகை வரம்பினை, ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. 


Withdrawal Form மூலம் எவ்வளவு? 

 மற்றொரு ஆப்சனான வித்ட்ராவல் பார்ம் மூலமாக ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரையில் எடுத்துக் கொள்ளலாம்.


 


 மூன்றாம் தரப்பு நபர் செக் மூலமாக பணம் எடுக்கும் வரம்ப்பானது 50,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல பார்ம் மூலமாக மூன்றாம் தரப்பினர் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதற்காக மூன்றாம் தரப்பினரின் கே ஒய் சி விவரங்கள் தரப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 


எப்போது வரையில் அமல்

 எஸ்பிஐயின் இந்த மாற்றங்கள் செம்டம்பர் 30, 2021 வரையில் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO arrested for getting Rs 2 lakh bribe from teacher

ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teach...