கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2019-2020-ம் கல்வியாண்டுக்கான பள்ளிக்கல்வி செயல்திறன் தர அட்டவணையில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய 5 மாநிலங்கள் தரவரிசைப்பட்டியலில் முதலிடம்...

 2019-20 ஆம் ஆண்டுக்கான பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில், கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக தரவரிசை பெற்று முதலிடம் பிடித்துள்ளன.


மத்திய அரசு இது தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது. எந்த அடிப்படையில் பள்ளி கல்வியில் சில மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன. எந்த மாநிலங்கள் முன்னேற வேண்டியுள்ளது. எந்த மாநிலங்கள் பரவாயில்லை என்ற அடிப்படையில் புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறது.


மத்திய அரசு வெளியிட்ட அந்த அறிக்கையில் இந்திய பள்ளி கல்வி முறை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளையும், கிட்டத்தட்ட 97 லட்சம் ஆசிரியர்களையும், 25 கோடிக்கும் அதிகமான மாணவர்களையும் கொண்ட பல்வேறு சமூக பொருளாதார பின்னணிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஒன்று. நாட்டின் மாறுபட்ட கலாச்சாரம் வளரவும் மற்றும் பாரம்பரியம்வளரவும் போதுமான வாய்ப்பைக் கொடுக்கும் அதே வேளையில், நாடு முழுவதும் கல்வின் தரங்களையும் சீரான தன்மையையும் பராமரிக்க மத்திய பள்ளி கல்வித்துறை அமைப்பு பாடுபடுகிறது.


பிஜிஐ

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைக்கான குழந்தைகள் உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதோடு, அப்போதைய பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையும் மேம்படுத்த ((DoSEL) தொடங்கிய திட்டங்கள், கல்வி மக்களுக்கான கிடைப்பதற்கான அணுகலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இப்போது கல்வியின் தரத்தை அணுகுவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.. பள்ளிக் கல்வித் துறையில் மாற்றத்தக்க மாற்றத்தை ஊக்குவிப்பதற்காக செயல்திறன் தர குறியீட்டை (பிஜிஐ) டோசெல் ((DoSEL) வடிவமைத்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு (பிஜிஐ) முதன்முதலில் 2017-18 குறிப்பு ஆண்டிற்கானது 2019 இல் வெளியிடப்பட்டது. 2018-19க்கான பிஜிஐ 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.


மொத்தம் ஐந்து மாநிலங்கள்

தற்போது 2019-20 ஆம் ஆண்டுக்கான பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக தரவரிசை பெற்று முதலிடம் பிடித்துள்ளன. சென்ற முறை கேரளா மட்டுமே முதலிடத்தை பிடித்திருந்தது. மத்திய அரசு கிரேடு ஒன்று , கிரேடு இரண்டு கிரேடு மூன்று என மொத்தம் 10 கிரேடுகளாக மாநிலங்களை பிரித்துள்ளது. முதல் கிரேடில் எந்த மாநிலமும் இல்லை. அதாவது 950ககு மேல் எந்த மாநிலமும் இல்லை. ஆனால் இரண்டாவது கிரேடில் தமிழ்நாடு , கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் 900 முதல் 950 மதிப்பெண்கள் பெற்றுள்ளன. இரண்டாவது கிரேடு, மூன்று கிரேடுகள் அடுத்தடுத்து 50 மதிப்பெண்கள் குறைவாக பெற்றுள்ளன.

.

ஆந்திரா

இந்த பட்டியலில் மூன்றாவது கிரேடில் தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி என்சிஆர், புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன. 4வது கிரேடில் ஆந்திரா, டையு டாமன், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் ஆகியவை உள்ளன. 10வது கிரேடில் அதாவது கடைசி கிரேடில் லடாக் மாநிலம் உள்ளது.


என்ன காரணம்

மத்திய பள்ளி கல்வித்துறைஅமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு 2019-20 இல் மாநில வாரியான செயல்திறன்களை முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் தரவரிசை குறியீட்டு மதிப்பெண்களை 2019-20 ஆம் ஆண்டில் மேம்படுத்தியுள்ளன என்பதைக் காட்டுகிறது. கல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு வெளியிடுவதன் முக்கிய நோக்கம் உண்மையில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கல்வி செயல்திறனை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளார்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...