கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (30-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 30, 2021



புதிய வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வருகைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கௌரவப் பொறுப்புகள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மையும், அதன்மூலம் லாபமும் உண்டாகும். வேளாண்மை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.


பரணி : லாபம் உண்டாகும்.


கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 30, 2021



உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகளும், கவலைகளும் குறையும். வழக்கு மற்றும் நீதிமன்றம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் தனவரவுகள் மேம்படும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் செல்வச்சேர்க்கைக்கான சூழ்நிலைகள் அமையும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



கிருத்திகை : கவலைகள் குறையும்.


ரோகிணி : மேன்மையான நாள்.


மிருகசீரிஷம் : செல்வச்சேர்க்கை உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

ஜூன் 30, 2021



திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். திருப்பணி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் பொறுப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : நம்பிக்கை மேம்படும்.


புனர்பூசம் : அனுகூலமான நாள்.

---------------------------------------




கடகம்

ஜூன் 30, 2021



பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் புரிதல் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்களுடைய நிதி விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.


பூசம் : அனுசரித்து செல்லவும்.


ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 30, 2021



ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தருணங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்படும். தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கும். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.


உத்திரம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------




கன்னி

ஜூன் 30, 2021



விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடல் உழைப்பிற்கேற்ற பொருள் வரவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கடன் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். மனதில் இருக்கும் கவலைகளை உடனிருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு பிறக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திரம் : பொருள் வரவுகள் உண்டாகும்.


அஸ்தம் : பொறுமை வேண்டும்.


சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

ஜூன் 30, 2021



ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் தடைகள் ஏற்பட்டாலும் அதற்கான காரணங்களை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். எந்தவொரு செயலையும் பகுத்துப் பார்த்து உணரும் தன்மை மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஒத்துழைப்புகளை பெறுவீர்கள். திடமான முடிவுடன் எண்ணிய காரியங்களில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். புதுவிதமான உணவுகளை உண்பதில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.


சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


விசாகம் : வெற்றிகரமான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூன் 30, 2021



பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். களத்திர வழியில் பெருமையும், முன்னேற்றமும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொருள் வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வாகனங்களில் சிறு சிறு மாற்றங்களை செய்து மகிழ்வீர்கள். உயர்கல்வி தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



விசாகம் : ஆதாயம் உண்டாகும்.


அனுஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.


கேட்டை : இன்னல்கள் குறையும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 30, 2021



சிறிய தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்களும், உத்வேகமான சிந்தனைகளும் உண்டாகும். சிறு வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையாட்களின் திறமைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எண்ணிய காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மூலம் : மாற்றமான நாள்.


பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஜூன் 30, 2021



புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் ஆதரவான பலன்கள் உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கூட்டு வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் அனைவரின் மனங்களை கவருவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


திருவோணம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : லாபகரமான நாள்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 30, 2021



உடனிருப்பவர்கள் பற்றிய எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். சபை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பங்கு வர்த்தகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் காரிய வெற்றிகளை அடைவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் மற்றும் கனவுகளை உருவாக்குவீர்கள். அமைதியான செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான குறைபாடுகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.


சதயம் : இலக்குகள் பிறக்கும்.


பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




மீனம்

ஜூன் 30, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் நிறைவான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களின் பொருட்களின் மீது ஆர்வம் கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவப் பொறுப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



பூரட்டாதி : சிந்தனைகள் உண்டாகும்.


உத்திரட்டாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


ரேவதி : பொறுப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...