திருப்பூரைச் சேர்ந்த ஒரு புதுமணத் தம்பதியினர், தங்கள் திருமணத்திற்கு செலவழிக்க திட்டமிட்ட தொகையிலிருந்து கூடுதல் சேமிப்பான ரூ.37 லட்சத்தை கோவிட் நிவாரணத்திற்காக நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் ரூ.50 லட்சம் பட்ஜெட்டில் முடிவு செய்த அனு மற்றும் அருள் பிரனேஷ் ஆகியோரின் திருமணத்தை ஜூன் 14 அன்று ரூ.13 லட்சம் செலவில் செய்ய முடிந்தது.
பின்னர் இந்த மணமக்கள் பட்ஜெட்டில் மீதமுள்ள பணத்தை மாநிலத்தில் உள்ள பல அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராட வழங்கினர்.
மேற்கு தமிழ்நாட்டில் கோவிட் நோய் பெருகத் தொடங்கியதால், அழைப்பாளர்களில் பலர் பயணிப்பதை தவிர்த்து விட்டனர் என பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் தனது குடும்ப வியாபாரத்தை நடத்தி வரும் அருள் பிரணேஷ் தெரிவித்தார்.
"திருமண மண்டப உரிமையாளர் கூட எங்கள் வாடகை திரும்ப அளித்தார்,"
"இருப்பினும், திருமணத்தை ஒத்திவைக்க வேண்டாம் என்று குடும்ப பெரியோர் முடிவு செய்ததால், உள்ளூர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்ற பின்னர் குறைந்த வருகையுடன் வட்டமலை அங்காளம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டோம்."என்று அவர் கூறினார்.
திருப்பூர் மேற்கு ரோட்டரி கிளப்பில் உறுப்பினர்களாக உள்ள இந்த குடும்பத்தினர் அந்த அமைப்பால் நடத்தப்படும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
எளிய முறையில் திருமணம் நடத்தியதால் திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சம் ஆன 37.66 லட்சம் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக நன்கொடையாக வாரி வழங்கிய திருப்பூர் மணமக்கள்♥️
திருப்பூரை சேர்ந்த அருள்செல்வத்தின், 2வது மகன் அருள் பிரனேஷ். இவருக்கும் திருப்பூர், விகாஸ் வித்யாலயா, வித்யாசாகர் குழுமத்தை சேர்ந்த கவுரிசங்கர் - கவிதா தம்பதியினர் மகள் அனு என்பவருக்கும், காங்கயம் - வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையாக திருமணம் நடந்தது.
திருமணத்தை எளிமையாக நடத்தியதால், மீதமான பணத்தை நற்பணிகளுக்கு தர முடிவு செய்து திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்டருக்கு - 5 லட்சம்,
பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்திற்கு - 11 லட்சம்,
புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டமைக்கப்படும் முதியோர் இல்லத்திற்கு - 2 லட்சம் ரூபாய்.
திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்திற்கு ஐ.சி.யு., யூனிட் அமைக்க, 7.66 லட்சம்,
மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும், 8 குடும்பங்களுக்கு, 7 லட்சம் என,
மொத்தமாக, 37.66 லட்சம் ரூபாயை வழங்கினர்.
மக்கள் சார்பில் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.