கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நிவாரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிவாரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Rs 5 lakh relief for teacher Ramani's family - Tamil Nadu Chief Minister M.K.Stalin's announcement


ஆசிரியை ரமணி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவிப்பு


 தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி -  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவிப்பு


ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் 


தஞ்சை: அரசுப்பள்ளியில் கொல்லப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்


விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, குற்றவாளிக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தரப்படும் 


ஆசிரியை ரமணியின் உயிரிழப்பு கல்வித்துறை, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு - முதல்வர் ஸ்டாலின்


தஞ்சாவூர் ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்



பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகவும் மிருகத்தனமானது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,


தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 25) த/பெ.முத்து அவர்கள் இன்று (20:11.2024) காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.


சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களை உயிரிழந்த ஆசிரியை அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அனுப்பிவைத்தேன். பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும். கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட செல்வி ரமணி அவர்களின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும். சக ஆசிரியர்களுக்கும். மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். செல்வி ரமணி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள். சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, செல்வி ரமணி அவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். என தெரிவித்துள்ளார்.





சாலை விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியர் - குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு


 சாலை விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியர் - குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு


சாலை விபத்தில் உயிரிழந்த வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் ரூ.25 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சுப்பையா (57) கடந்த 21 ஆம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (அக் 25) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.


காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.


ரூ.25 லட்சம் நிவாரணம்

காவல் உதவி ஆய்வாளர் சுப்பையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக உயிரிழப்பு / பலத்த காயம் / சிறிய காயம் போன்றவற்றினால் பாதிப்படையும் போது ரூ.1,00,000 வரை நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியீடு - அரசாணை (நிலை) எண்: 65, நாள்: 04-03-2024...


 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக உயிரிழப்பு / பலத்த காயம் / சிறிய காயம் போன்றவற்றினால் பாதிப்படையும் போது ரூ.1,00,000 வரை நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியீடு - அரசாணை (நிலை) எண்: 65, நாள்: 04-03-2024...


G.O. (Ms) No : 65, Dated: 04-03-2024ன் படி,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு 

எதிர்பாராத விபத்து காரணமாக 

உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ. 1,00,000 

பலத்த காயம் ஏற்பட்டால் ரூ. 50,000 

சிறிய காயம் ஏற்பட்டால் ரூ. 50,000  நிவாரணத் தொகை வழங்கப்படும்..



>>> அரசாணை (நிலை) எண்: 65, நாள்: 04-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ₹6000 வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு ...

 நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ₹6000 வழங்கப்படும்...


தென்காசி, கன்னியாகுமரியில் பாதிப்புகளின் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்.


பாதிக்கப்பட்ட விவசாய நிலம் ஹெக்டேருக்கு ₹17,000 வழங்கப்படும்.


பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ₹10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.


- நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...




17, 18ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று 17ம் தேதிதான் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.


வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்திருக்கிறது; இது வரலாற்றில் இதுவரை இல்லாதது.


ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததை மக்கள் அறிவார்கள்.


காயல்பட்டினத்தில் 94 செ.மீ. மழை பெய்து அந்த பகுதியே வெள்ளக் காடாக மாறியது.


150 ஆண்டுகளில் இல்லாத மழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை மிக மோசமாக உள்ளன- தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி.


திருமணத்திற்கு செலவிட திட்டமிட்ட தொகையில் மீதமான ரூ.37 லட்சத்தை கொரோனா நிவாரணத்திற்கு வழங்கிய மணமக்கள்...


திருப்பூரைச் சேர்ந்த ஒரு புதுமணத் தம்பதியினர், தங்கள் திருமணத்திற்கு செலவழிக்க திட்டமிட்ட தொகையிலிருந்து கூடுதல் சேமிப்பான ரூ.37 லட்சத்தை கோவிட் நிவாரணத்திற்காக நன்கொடையாக வழங்கியுள்ளனர்.


 ஆரம்பத்தில் ரூ.50 லட்சம் பட்ஜெட்டில் முடிவு செய்த அனு மற்றும் அருள் பிரனேஷ் ஆகியோரின் திருமணத்தை ஜூன் 14 அன்று ரூ.13 லட்சம் செலவில் செய்ய முடிந்தது. 


பின்னர் இந்த மணமக்கள் பட்ஜெட்டில் மீதமுள்ள பணத்தை மாநிலத்தில் உள்ள பல அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராட வழங்கினர்.


 மேற்கு தமிழ்நாட்டில் கோவிட் நோய் பெருகத் தொடங்கியதால், அழைப்பாளர்களில் பலர் பயணிப்பதை தவிர்த்து விட்டனர் என பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் தனது குடும்ப வியாபாரத்தை நடத்தி வரும் அருள் பிரணேஷ் தெரிவித்தார்.


 "திருமண மண்டப உரிமையாளர் கூட எங்கள் வாடகை திரும்ப அளித்தார்," 


 "இருப்பினும், திருமணத்தை ஒத்திவைக்க வேண்டாம் என்று குடும்ப பெரியோர் முடிவு செய்ததால், உள்ளூர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்ற பின்னர் குறைந்த வருகையுடன் வட்டமலை அங்காளம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டோம்."என்று அவர் கூறினார்.



 திருப்பூர் மேற்கு ரோட்டரி கிளப்பில் உறுப்பினர்களாக உள்ள இந்த குடும்பத்தினர் அந்த அமைப்பால் நடத்தப்படும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.


எளிய முறையில் திருமணம் நடத்தியதால் திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சம் ஆன 37.66 லட்சம் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக  நன்கொடையாக வாரி வழங்கிய திருப்பூர் மணமக்கள்♥️


திருப்பூரை சேர்ந்த அருள்செல்வத்தின், 2வது மகன் அருள் பிரனேஷ். இவருக்கும் திருப்பூர், விகாஸ் வித்யாலயா, வித்யாசாகர் குழுமத்தை சேர்ந்த கவுரிசங்கர் - கவிதா தம்பதியினர் மகள் அனு என்பவருக்கும், காங்கயம் - வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையாக திருமணம் நடந்தது. 


திருமணத்தை எளிமையாக நடத்தியதால், மீதமான பணத்தை நற்பணிகளுக்கு தர முடிவு செய்து திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்டருக்கு - 5 லட்சம்,


 பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்திற்கு - 11 லட்சம், 


புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டமைக்கப்படும் முதியோர் இல்லத்திற்கு - 2 லட்சம் ரூபாய்.


திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்திற்கு ஐ.சி.யு., யூனிட் அமைக்க, 7.66 லட்சம்,


 மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும், 8 குடும்பங்களுக்கு, 7 லட்சம் என, 


மொத்தமாக, 37.66 லட்சம் ரூபாயை வழங்கினர்.

 மக்கள் சார்பில் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு ஜூன் 15ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும்...



2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு ஜூன் 15ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும்..


ஜூன் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும்...


>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவு...

 



கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவு...


“வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம்"


கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவு.


தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி உத்தரவு.


புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவு.BREAKING: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவு


“வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம்"


கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவு.


தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி உத்தரவு.


புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவு.



கொரோனா நிவாரண நிதி 2வது தவணை & மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் ஜூன் 3 ஆம் தேதி முதல்வர் துவக்கி வைக்கிறார்...

 கொரோனா நிவாரண நிதி 2 வது தவணை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல்வர் துவக்கி வைக்கிறார்...



ரேஷன் கடைகளில் நாளை ஞாயிற்றுக்கிழமையும் (16-05-2021) கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் - தமிழக அரசு...

 ரேஷன் கடைகளில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் (16-05-2021) கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் - தமிழக அரசு.


ஞாயிறு காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும்.


ரேஷன் கடை ஊழியர்களுக்கான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் - தமிழக அரசு




அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வழங்க இருக்கும் கொரோனா சிறப்பு நிவாரண தொகுப்பு - விவரம்...

 கொரோனா சிறப்பு நிவாரணமாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகையிலான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 


நாளை முதல் ரூ.2 ஆயிரம்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தியை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


 

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அறிவித்த கையோடு அந்த திட்டத்தை கடந்த 10-ந்தேதி தொடங்கி வைத்தார். ரேஷன் கடைகளில் நாளை (15-ந்தேதி) முதல் ரூ.2 ஆயிரம் பணம் வழங்கப்பட உள்ளது.



14 பொருட்கள்

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுமையை கருத்தில் கொண்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, புளி, கடலை பருப்பு, டீ தூள், கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், குளியல் சோப், துணி துவைக்கும் சோப்பு ஆகிய 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா சிறப்பு நிவாரண பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.




 

இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகளுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 


அதில், ‘இந்த மளிகை பொருட்கள் விலையானது அமுதம் பல்பொருள் அங்காடிகளில் வழங்கப்படும் பொருட்களின் கொள்முதல் விலையின் (வரிகள் உள்பட) அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. 14 மளிகை பொருட்கள், துணிப்பையுடன் சேர்த்து 15 பொருட்களுக்கு கொள்முதல் விலையாக ரூ.397.33 கணக்கிடப்பட்டுள்ளது.


கலைஞர் கருணாநிதி பிறந்தநாளில்...

கொரோனா சிறப்பு நிவாரண பொருட்களை கொள்முதல் செய்யும் பணி இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் அந்த பொருட்கள் ‘பேக்கிங்’ செய்யும் பணிகள் நடைபெறும். இந்த நிவாரண பொருட்கள் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி அன்று ரேஷன் கடைகளில் வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.


கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை வழங்கவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு சின்னம் மட்டும் கொண்ட பைகள் தயார்...





கொரோனா நிவாரணம் ரூ.2,000 வழங்கும் திட்டம் முதல்வர் இன்று துவங்கி வைத்தார்- இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும்...

 தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்  கொரோனா நிவாரண நிதி, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பால் விலை குறைப்பு   உள்ளிட்ட 5 முக்கிய அரசாணைகளில் அவர் கையெழுத்திட்டார். இதில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.



அதில், கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும். சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி இந்த திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொங்கி வைத்தார். கொரோனா தொற்று காரணமாக உணவுத்துறை அதிகாரிகள் இன்று முதல் 3 நாட்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த டோக்கனில் கடையின் எண், பெயர், அட்டைத்தாரர் பெயர், தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது.


இந்த டோக்கனை வழங்கி 15-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொரோனா நிவாரண தொகையை பெற்றுக் கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஆசிரியர்களுக்கு நியாயவிலை கடைகளில் பணி - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - Teachers List...

 


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலை கடைகளில் கொரானா வைரஸ் நிவாரண தொகை ரூபாய் 2000 முதல் தவணையாக 15.05.2021 முதல் வழங்கப்பட உள்ளது


நியாயவிலை கடைகளில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தி வரும் குடும்ப அட்டைதாரர்கள் சமூக விதிகளை கடைபிடித்து பொருட்களை பெற்று செல்வதை   சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் செயல்படவும் இதுதொடர்பாக கண்காணிப்பு குழுவின் தலைவருக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித புகார்களும் இடமளிக்காத வகையில் எவ்வித தொய்வும் இன்றி குரானா வைரஸ் நிவாரணத்தொகை வழங்கப்படுவது செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு பார்வையில் உள்ளபடி தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து நியாயவிலை கடைகளில் 15.05.2021 முதல் பணியாற்ற நியமித்து உத்தரவிடப்படுகிறது


  அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு:


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி கோரானா பெருந் தொற்று இரண்டாவது அலை தொடங்கியுள்ள இச்சூழலில் பொதுமக்களுக்கு நிவாரண தொகையான ரூ 4000 அறிவிக்கப்பட்ட நிலையில் , அதில் ரூ 2000 முதல் தவணையாக பொதுமக்களுக்கு வழங்கி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்ட நிலையில் ,


மேற்கண்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள் கடந்த ஆண்டு  கோரானா பெருந் தொற்று காலத்தில் தமிழகமே வியக்கும்  வண்ணம் திருப்பத்தூர்  மாவட்டத்தை சார்ந்த ஆசிரியப் பெருமக்கள் தன்னார்வலர்கள் ஆக மிகச் சிறப்பாக பணிபுரிந்து பொதுவினியோக கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கவும், கடைகளில் பொருட்கள் சிறப்பாக குறித்த நேரத்தில் வழங்குவதற்கும், சட்டம் ஒழுங்கு வராமல் அமைதியாக நடைபெறுவதற்கும் உறுதுணையாக இருந்ததை போலவே,  இம்முறையும்  வருகின்ற 15.05.2021 சனிக்கிழமை முதல் பொது மக்களுக்கான நிவாரண தொகையான முதல் தவணை ரூ 2000ஐ முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து பொதுவினியோக கடைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கும்,


இப்பணி தொய்வின்றி குறித்த நேரத்தில் சிறப்பாக நடைபெறுவதைக் கண்காணிப்பதற்கும் ஏதுவாக இணைப்பில் கண்ட ஆசிரியர்களை மதிப்புமிகு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார். எனவே தன்னலம் கருதாது சிறப்பாக பணிபுரியும் நம் ஆசிரிய பெருமக்கள் தன்னார்வலர்களாக முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து, கிருமிநாசினி உடன் வைத்துக்கொண்டு ,   இம்முறையும் மிகச் சிறப்பாக இப்பணியை 15.05.2021 முதல் செய்து முடித்திட வேண்டும் என கனிவுடன்  கேட்டுக்கொள்ளப்படுகிறது.


/மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் ஆணைப்படி/

இணைப்பு: ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பட்டியல்


>>> ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பட்டியல்....


கொரோனா வைரஸ் நிவாரண உதவி நிதி ரூ.2000 வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்...

 


கொரோனா வைரஸ் நிவாரண உதவி நிதி ரூ.2000 வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளரின் சுற்றறிக்கை ந.க.எண்: இ2/ 9925/ 2021, நாள்:08-05-2021...


>>> உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளரின் சுற்றறிக்கை ந.க.எண்: இ2/ 9925/ 2021, நாள்:08-05-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...